சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்
காட்சி 22 · 22 / 38
பார்த்தாயா—வசந்தமாலி!
பார்த்தேன்—பார்த்தேன்! மாதவி! ஊடலுக்கும் ஒரு அளவு வேண்டுமே...
அவருக்கு என்னைத் தவிர வேறு யாரிடத்திலோ விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதை அவரால் மறைக்க முடியவில்லை. உண்மை வெளிப்பட்டு விட்டது... இருக்கட்டும், வேண்டுமென்றே நான் அவர் மனத்தை நோக வைக்கிறேன்! நானும் வேலோடு ஆடவாரால் காதல் கொண்டதுபோல் நடித்து...
வேண்டாம் மாதவி! விளையாட்டு வினையாகிவிடப் போகிறது...
அவரெல்லாம் ஆகாது...நீ போய்விடு; அவர் வருகிறார்!
[அங்கே ஒரு வீரனுடைய சிலை இருக்கிறது. அந்தச் சிலையை மாதவி உற்றுப் பார்க்கிறாள். சில, கோவலன் சிலைபோலக் கண்ணுக்குத் தெரிகிறது; சிலையின் எளங்குரிய உடைகளுடன்]
காதல் தல்வரே! நீர் என்னை உண்மையான காதலோடு தேடி வரவில்லை; என்
பற்களின் மெய்யாகவே முத்துக்கள் என்று கருதி, அவைகளின் விலைபேசும் வர்த்தகன் போல என்னிடம் வந்தீர்!
இதழ்களிலே பவளமிருக்கிறது; அதை எடுத்துப் போகலாமென்று கள்வன்போல் என்னிடம் வந்தீர்! கன்னத்துச் சிவப்பைக் காட்டு ரோஜா எனக்கருதி, கேட்பதற்கு ஆளில்லை...பறித்துப் போகலாம் என எண்ணி என்னிடம் வந்தீர்!
நீர் எப்படி நினைத்து வந்திருந்தபோதிலும் என் உள்ளங் கொள்ளைகொண்டீர்...உடல்...உயிர்...அழகெல்லாம் உமக்கே சொந்தம்! சிலைபோல நிற்கின்ற ஆருயிரே! தென்னை மரச் சோலையிலே என்னைத் தழுவிடவே எப்போது வருகிறீர்?
புன்னை மரத்தில் அன்னம் உட்கார...அதைக் குறித்திருக்கும் பூக்களெல்லாம் விண்மீன் என்றும்...நடுவில் உள்ள அன்னந்தான் அழகு நிலவென்றும் நினைத்துக்கொண்டு, மலர் பூத்துவிடும்.
அழகிய பூம்புகார் நகரத்துக் கலைப்பெண்ணுள் மாதவியைக் காதலால் துடிக்கவிடாமல்...
கண்ணுளா வந்துவிடும்... மாவீரா வந்துவிடும்... மன்னவரே வந்துவிடும்...
[கோபமாக]
நிறுத்து... நிறுத்து... மாயக்காரி நிறுத்து!
அதுதான்!
சே! அத்தான்! விஜயமகளே! நிலையில்லா மனம்படைத்த குலம் விளங்க வந்துற்ற குடிகேடி!
கலைகாட்டி...கயல் விழிகாட்டி...மயல் முழுதுங்காட்டி...மயக்குகின்ற பெண் பேய்! உனை நம்பி உளமிழந்தேன், வளமிழந்தேன்; உற்றார், பெற்றார், உறவுகளையும் கொண்ட நண்பர் அனைவருமே வெறுக்கின்ற பண்பு கொண்டேன். உத்தமியாம் கண்ணகியின் உயிர் கருக்கி... உளம் வருத்தி... உற்சாகச் சக்தியிலே...இது வரையில் வீழ்ந்து கிடந்தேன்...இன்றுணர்ந்தேன்...நீ யார் ...நின் குலத்தின் பழம் பெருமை பெண்ண என்ற சேதி.
அத்தான்!...போதுமத்தான் போதும்! இந்தப் பொல்லாங்கு நேர்வதற்கோ பொழுது விடிந்தது?
பொழுது விடிந்தது...பொற் கோழி கூவிற்று! புனித நன்மராம் கண்ணகியை வாடவிட்டுப், புழுதியிலே கிடக்கின்ற பெண் கல்லின் உண்ண வந்தேன்...அந்த இருட்டு மதி நீங்கிடவே பொழுது விடிந்தது; பொல்லாதவளே!
அய்யோ! எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே? நான் என்ன குற்றம் செய்தேன்?
ஆகாகா...... கைகாரி! கானல்வரி நான் பாட, நீ யார் மேலோ மனம் வைத்து மாயப்பொய் பல கூட்டும் காதல் மொழி சிந்தியதை இந்தக் காதுகளால் கேட்டிருந்தேன்!
கணிகை வீட்டுக் கட்டுத் தறியும் கண் காட்டி ஆள்மயக்கும் என்ற உண்மையை அறியாமல் ஏமாந்தேன்...
அத்தான்! சகிக்க முடியாத சொல்வம்புகளால் என்னைக் கொல்லாதீர்கள்! மாதவி...கணிகைதான்! ஆனாலும், மனம் வேறே; உமையன்றி என் மனம் யாரையும் நினைத்ததுமில்லை...நினைக்கப் போவதுமில்லை...நம்புங்கள் என்னை!
கான்யரை ஏமாற்றக் காட்டி வரி...கண் கூடு வரி...முகலிய எட்டுவகை நடிப்பு வரியும் கற்றவளடி நீ...தெரியும் எனக்கு! குமிழ்ப்பு முகமும் குவின்மலர்க் கண்ணும் கொண்டு கொவ்வைப் பழம்போன்ற வாய்மொழியால்...
இனி இந்தக் கோவலனை ஏமாற்ற ஒருக்காலும் முடியாது! அதோ சிலையாக இருக்கின்றானே உன் இலட்சியக் காதலன்...அவன் வரும்வரை காத்திரு! அவன் பொருள் தரும்வரையில் காத்தியாயிரு! பின் காமக்கடையைக் கட்டி...அவன் எதிரே வேறொரு சீமானிடம் நடையைக் கட்டு! போ...போ...உன் குலத்தொழிலுக் குறைவின்றி நடத்து! கோவலன் மதி படைத்தவனோ!! போ, போ, என் எதிரே நிற்காதே! போ!...போ!
[கண்ணகி, கோவலன் படத்தின் முன்னே நின்று—
பலகணி வழியிலும் பல திசைகளிலும் பார்வையைச் செலுத்தி......இறுதியில் கதவண்டை வந்து நின்று...கதவைத் திறக்கிறாள். கதவு திறந்ததும் சேவல் ஒன்று உள்ளே வருகிறது.
கண்ணகி சேவலைப் பார்த்தவாறு நிற்கிறாள்....அதனைத் தொடர்ந்து கோவலனும்...எதிர் வந்து நிற்கிறான்...
கோவலனைக் கண்ட கண்ணகி அப்படியே அசைவற்று நின்று விடுகிறாள். கோவலனும் மெய்ம்மறந்து தலை குனிந்து நிற்கிறான்.
மரம் போல் நின்றுவிட்ட கண்ணகி...மண்டியிட்டு...கோவலன் காலில் தலை கவிழ்கிறாள். கண்ணீர்த் துளிகள் அவன் காலைக் குளிப்பாட்டுகின்றன.
கோவலன் அவளைத் தூக்கி நிறுத்தி...]
கண்ணகி...என்னை மன்னித்து விடு!....
அத்தான்!....
[பொல பொலவென்று கண்ணீர் உதிர்கிறது]
கற்பின் திருவுருவாம் உனவிடத்துக் கணிகையின் மடியிலே சுகங் கண்ட...இந்தக் கல் நெஞ்சக் கயவன்; கற்றறிந்த மூர்க்கனே...
...திட்டாதீர்கள்!...என் கணவரை...என் கணவரோகூடத் திட்டக் கூடாது!....
