சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்
காட்சி 20 · 20 / 38
[கைப்பிடித்து அழைக்கிறாள் தேவந்தி... உயிரற்ற பொருள்போலக் கண்ணகி திரும்புகிறாள்...]
[விழா தொடர்ந்து நடைபெறுகிறது... இருபத்தெட்டு நாள் இந்திரவிழா நடந்து முடிவு பெறுகிறது....புலிக்கொடி இறக்கப்படுகிறது...]
[மாதவியும், கோவலனும் மஞ்சத்தில்... விளக்கு எரிகிறது. விடியவில்லே இன்னும், கோழி கூவுகிறது...காலச் சங்கு முழங்குகிறது...மாதவி விழித்தெழுகிறாள்...]
அத்தான்!...
[என்கிறாள்...கோவலன் எழவில்லை...]
(யாழை எடுத்து மீட்டுகிறாள்; கோவலன் எழுகிறான்...)
அத்தான் ... இன்றோடு இருபத்தெட்டு நாள்...இந்திர விழா முடிவுறுகிறது...வாருங்கள்...கடற்கரைக்குப் போய் அருணோதயக் காட்சியைச் சுவைக்கலாம்!
வருகிறேன் ... அங்கு நீ கானல்வரி பாடி என்னை மகிழ்விக்க வேண்டும்...
நீங்களும் பாடவேண்டும்...
உன்னைப்பற்றி பெண்ணுள்... நான் பாடுவேன்...கடற்கரையைப் பற்றிப் பாடும் கானல் வரி பாடுவதென்றுல்...
அப்படியானுல் ... நானும் பாடமாட்டேன்.....
சரி ... சரி... வா! இருவரும் பாடுவோம்....
வசந்தமாலை!
(வருகிறாள்)
யாழ் தயாராகட்டும் ... நாங்கள் அருணோதயத்திற்குள் கடற்கரைக்குச் செல்ல வேண்டும்...அதற்குப் புரவி பூட்டிய தேரும் தயாராகட்டும்!... கடற்கரையில் ... நாங்கள் அமர்ந்து கானல்வரி பாடப் புன்னை மரத்து நிழலில் ... புதுமணற் பரப்பில் ... சித்திரத் திரைகட்டி விதானம் விரித்த வெண்காற் கட்டில் ஏற்பாடாகட்டும்!...
இதோ, ஒரு நொடியில்.......
[கோவலனும் மாதவியும் புகார் பூம்புகார் தேரில் ஏறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்...
விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும் புகார் நகரின் தெருக்களில் தேர் போகிறது.
வெளி நாட்டார் வாணிப நிலையங்கள்... பண்டகசாலைகள்...விளக்குகளால் மின்னுகின்றன...
கடற்கரையில், ஆடவர் பெண்டிர்... விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்...
கோவலனும், மாதவியும் புன்னை மரத்தடிக்கு வருகிறார்கள்...
அங்கே அழகிய வேலைப்பாடமைந்த திரை கட்டப்பட்டு அதன் மறைவில்...
கடற்கரையையும், காவிரி கடலில் கலக்குமிடத்தையும் பார்த்தவாறு...அமைந்த எழில் மிக்க கட்டிலில் அமர்கிறார்கள்.
அமர்ந்ததும்...
வசந்தமாலை...யாழை எடுத்துக் கொடுக்கிறாள்...மாதவியிடம்...]
மாதவி யாழைப்பெற்று...இசை கூட்டுகிறாள், தன் செங்காந்தள் விரல்களால்...சிறிது நேரம் பாட்டின்றி யாழொலியால் கோவலனை மயக்குகிறாள்...
கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் யாழ் ஒலியின் இனிமையில் மெய்மறந்து நின்று விடுகிறார்கள்...
கடல் அலைகூட அமைதி பெறுகிறது—குளத்தைப்போல், கடல் மெதுவாக அலைக்கரங்கள் அசைக்கிறது.
யாழ் ஒலி...கடற்கரையையே தன் வயப்படுத்திய பின்...மாதவி, யாழைக் கோவலன் கையில் தந்து...]
ம்...முதலில் நீங்கள் பாடுங்கள்!
[கோவலன், மாதவியின் விழிக்கண் எடுத்துக் குளிர்பார்வையை அவை மீது வீசி...அவைகளைக் கண்களில் ஒற்றிக்கொண்டு...]
இந்த விரல்களால் விழிகளைக் கூடக் குத்திக் கொள்ளலாம்...காயம் ஏற்படாது—அவ்வளவு மென்மையான அனிச்ச மலர் விரல்கள்!...
இந்த விரல்பட்ட யாழின் நரம்புகளத் தொடுவதற்கு...என்ன...முரட்டு விரல்களுக்குத் தகுதியுண்டா மாதவி?...
இந்த யாழுக்கு மாத்திரம் என்னப்போல உயிர் இருந்தால்...உங்கள் விரல் மேலே படும்போது ஏற்படும் சுகத்தை—ஒரு கவிதையாகவே பாடிவிடும்.
அப்படியா? மாதவி...
அதுதான்...பாடுங்கள்...கண் பெற்ற இன்பம்...என் செவியும் பெறட்டும்...
[கோவலன் யாழ் மீட்டிப் பாடுகிறான்]
“திங்கள் மாலை வெண்குடையான் சென்னிச் செங்கோலது வோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும், புலவாய் வாழி! காவேரி!
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய்! மங்கை மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன், வாழி! காவேரி!
மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோலது வோச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி! காவேரி!
