உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 19 · 19 / 38

சிரிக்கிறாள் பொக்கைவாய்த் திறந்து!]

சிரிப்பைப்பார்—சிரிப்பை! மாதவி! மணிமேகலை, உன்னைப் பார்த்து எழுதிய சித்திரம் போலவே இல்ல...?

இல்லை!... எல்லோரும் சொல்லுகிறர்கள்; மணிமேகலை, கண்ணகி யக்காளை உரித்து வைத்ததுபோல் இருக்கிறாளென்று...

[கேலியாக] ஊம்.......

ஆமாம்!... நான்கூட இவள் அக்காளின் குழந்தையாகவே கருதுகிறேன்.

சரி ... நேரமாகிறது ... வா... போகலாம்.

[குழந்தையை முத்தமிட்டு ... தொட்டிலில் கிடத்திவிட்டு... ஆங்குள்ள தோழிகளை அருகே விட்டுப் புறப்படுகிறாள்.]

[பல பகுதிகளில் விழாக் காட்சிகள்— கூத்து...உற்சாகம்!... மாதவியும் கோவலனும் கலந்துகொள்கிறார்கள்.]

விழா நடக்கும் ஒலி, கண்ணகியின் காதைப் பிளக்கிறது!

ஆகாயத்தில் கிளம்பும் வாண வேடிக்கை மின்னல்போல் அவள் கண்ணைப் பறிக்கிறது!...

மகளிர் ஆட்டபாட்டங்கள் ... பேய்க்கூத்து போல் தோன்றுகின்றன. இசைவாணர் இசைவாணிகளின் பாட்டுக்கள்....ஆந்தை, கோட்டான் அலறுவதுபோலத் தெரிகின்றன...

கண்ணகி கண்ணையும், காதையும் பொத்திக்கொண்டு அலறி விழுகிறாள்.

அவள் நினைவில் ... இந்திர விழாவன்று தானும் தன் கணவன் கோவலனும் ஆடிப்பாடி மகிழ்ந்தது—நினைவுக்கு வருகிறது.

இந்திர விழா நிகழ்ச்சிகள் அவள் மேலும் துயரக் கடலில் ஆழ்த்துகின்றன: துடிக்கிறாள்,

...துவளுகிறாள்...கோவலன் படத்தருகே ஓடுகிறாள்....]

அத்தான்!... இன்று எப்படியும் விழாவுக்கு வந்திருப்பீர்கள். ஒரு முறையாவது உங்கள் திருமுகத்தைப் பார்த்தால்தான் இனி இந்த உயிர் தங்கும்!... இதோ வருகிறேன்...நீங்கள் எங்கிருந்தாலும்...தொலவில் நின்றாவது பார்த்துவிட்டு வருகிறேன்...

அத்தான்!.... அத்தான்!!... அத்தான்!!!...

[வீட்டுக்கு வெளியே ஓடுகிறாள்—தேவந்தி பார்த்துவிட்டுப் பின்னால் ஓடுகிறாள் “கண்ணகி” ... “கண்ணகி” என்று அலறியபடியே!...

கண்ணகி “அத்தான்”....“அத்தான்”.... என ஓடுகிறாள்.... தேவந்தியும் தொடர்கிறாள்.]

[மாதவியும் கோவலனும் உல்லாசமாக நடை போடுகிறார்கள்; அலைகள் கால்களால் உதைத்தவாறு]

[கண்ணகி ஓடிவருகிறாள். தேவந்தி தொடர்கிறாள்]

கண்ணகி!... நில்!...

[என்று பெருங் கூச்சலிட்டவே, கண்ணகி அப்படியே திரும்பாமல் அசைவற்று நிற்கிறாள்]

கண்ணகி!... உனக்கு எப்படி ஏற்பட்டது இவ்வளவு துணிவு? ஊரெல்லாம் இந்திரவிழா!...இப்போது நான் பார்த்தாய்; குடும்பத்துக்கு இழிவு தேட?

இழிவு... என் அத்தானை நான் பார்க்கப்போவது இழிவா?

இந்தச் சமயத்தில்...இந்தக் கோலத்தில்...வாழ்ந்த குடும்பத்துப் பெண் போகலாமா? யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்? உன் கணவன் கோவலனே பார்த்து விட்டால் எவ்வளவு கோபம் அடைவார்?

வேதனையை வெளிக்காட்டாமல் நடந்து கொள்கிறாயே; தாய் தந்தையரிடம்...அவர்கள் பார்த்தால் உன்னை நினைத்து உருகிவிடமாட்டார்களா?...

பெரிய குடும்பத்திலே பிறந்து...பெரிய குடும்பபத்திலே புகுந்தவள் நீ; மானங் காக்கும் தமிழச்சி நீ மனம் தளரலாமா?

வா...கண்ணகி!...வீட்டுக்குத் திரும்பு!...

நேரில் பார்த்தால்தானு அத்தான்?... நெஞ்சிலே இல்லையா அவர்!......

[கண்ணகி பெருமூச்சும் கண்ணீரும்]

வா...கண்ணகி...

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை