உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 9
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 9 · 9 / 33

இல்லாவிட்டால் மன்னனைக் முடியுமா? (நெருங்குதல்)

சரி! என் சபதம் நிறைவேற்று நாளைக்கே திருமண நாள் குறித்துவிடுங்கள்.

நாள், நட்சத்திரம், பிறகு இருக்கட்டும், மின்னல்! இந்த இரவு வீணாகிவிடுவதா?

ஏ, அப்பா! கல்யாணம் ஆகறதுக்கு முன்னே ஒரு புருஷனத் தொடறது எங்க ஜாதி வழக்கப்படி பாவம்.

நீ தொடவேண்டாம்; நான் தொடுகிறேன்.

(வெறியோடு நெருங்க, குமரி நடனமாடுவதுபோல் சுற்றிச்சுற்றி ஆடிக்கொண்டு மதுவை ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறாள். விபீஷணன் காமவெறியில் தள்ளாடுமாறு அவளை பலாத்காரமாய்க் கட்டி அணைக்கிறான். குமரி கத்திவிடுகிறாள். சித்ரா ஓடிவருகிறாள். அப்பொழுது விபீஷணன் மற்றொரு கோப்பை மதுவை மொண்டு குடிக்கிறான். சித்ரா குமரியின் மேலுடையையை வாங்கி அணிந்து கொண்டு விளக்கையும் சிறிது அடக்குகிறாள். அதற்குள் குமரி பறந்துவிடுகிறாள்.

குமரி ஓடும்போது சதிக்கடிதங்களை எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறாள். சித்ராவை குமரி என்று நினைத்த)

பைத்தியக்காரி! இன்னுமா வெட்கம்?

தொடருங்கள்; கூச்சமா இருக்கு.

ஹ ஹ ஹா! மின்னல்! இதோ நீ மின்னல், நான் இடி, வா! காதல் மழை பொழிவோம். வரமாட்டாயா? இன்பபுரியின் மகாராஜா அழைக்கிறேன்.

மகாராஜா! என்னை ஏமாற்றத்தானே பார்க்கிறீர்கள்?

ஏமாற்றுவதா?

ஆமாம், உங்கள் மனைவி இருக்கும்போது......

(சிரித்து) மனைவியா? எனக்கா? பைத்தியம். நான் பிரம்மச்சாரி!

ஊம், பொய்.

கடவுள்மேல் ஆணை! நான் முதல் முதல் பார்த்தது, முதல் முதல் காதல் கொண்ட கட்டழகி நீ ஒருத்திதான். நீதான் என் மனைவி. நீதான் இன்பபுரியின் ராணி.

(சித்ராவை தழுவ)

கைவிடமாட்டீர்களே?

உனக்காக உயிரை விடுவேன்.

அதற்கு அடையாளமாக ஏதாவது?

இந்தா, காதலின் அடையாளமாக இந்தக் கணையாழியை அணிந்துகொள்.

(சித்ரா விளக்கை நிறுத்துகிறாள்)

(புத்தன். சிந்தனையோடு உட்கார்ந்திருக்கிறான். வீரர்கள் அவனோடு இருக்கிறார்கள்.)

இன்னும் காணவில்லை.

ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தால்?

காலையில் திரும்பாவிட்டால், அது ஆபத்தின் அறிகுறி என்று சொல்லிவிட்டுப் போனீர்கள்!

இளவரசே! நாம் உடனே புறப்பட்டுத் தேட வேண்டும்.

ஆ! பொன்னி...... பைத்தானே!

நம் விஷயம் பேசுகிறேன். இளவரசே, குமரி தேவியைக் காப்பாற்றியாக வேண்டும்.

(தெளிந்து) ஆமாம், தாமதிக்கக்கூடாது. நம்மை எதிர்பார்த்துக் குமரி தத்தளிப்பாள்.

(ஒரு வீரன் வருகிறான்)

ஏதாவது புதுச் செய்திகள்?

இமயாவின் ஆட்கள் ஒரு கிராமத்தையே எரித்துவிட்டனர்.

ஆ!

மக்கள் உயிரோடு வெந்துபோனார்கள்.

காரணம்?

வரி கொடுக்கவில்லை.

வரி கொடுக்கவில்லை வீரர்களே! இனி அந்த வஞ்சகரை வாழவிட உத்தேசமில்லை. அதிகார பலிபீடத்தில் அப்பாவி மக்களின் இரத்தம் வழிந்தோடுவதை இனியும் அனுமதிக்க எண்ணமில்லை. இன்பபுரி சாம்ராஜ்யத்தில் கொடுமை! இப்பொழுதே கிளம்புங்கள். அந்த இரக்கமற்றவருக்கு விலங்கு மாட்டுங்கள்.

கைது செய்வதானால், ஆதாரங்கள் வேண்டுமே இளவரசே?

ஆ! அக்கிரமக்காரர்கள் ஆடும் கோர ஆட்டங்களைக் கண்ணில் கண்டும், அவர்களை நீதி மன்றத்தில் நிறுத்த ஆதாரங்கள் அகப்படவில்லை.

(வந்துகொண்டே) ஏனில்லை? இதோ இருக்கிறது.

குமரி! ஆபத்து எதுவும் ஏற்படவில்லையே?

பூனையின் முன்னே கிளி, ஆபத்தில்லாமல் இருக்குமா?

சிக்கிக்கொண்டாயா?

சிக்கிக்கொண்டேன். சித்ரா விடுவித்துவிட்டாள்.

சித்ராவா?