ஒரே முத்தம்
காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 10 · 10 / 33
ஆம், புயல்காற்றைப் புருஷனாகப் பெற்றிருக்கும் தென்றல். இரவு அவள் இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்ளவேண்டியதுதான். விபீஷணன் வலையில் நான் மாட்டிக்கொண்டேன் என்பதைச் சித்ரா தெரிந்து கொண்டாள். நான் அங்கு போனது முதல் என்னிடம் வாஞ்சையாகத்தான் இருந்தாள். அந்தக் கொடியவனுக்கு அவளும் உடந்தையென நான் முதலில் நினைத்தேன். அவள் பேசிய பாகு மொழியில் பாஷாணம் கலந்திருக்குமோ என்ற பலத்தசந்தேகம் எனக்கு.
ஆனால் நேற்றிரவு விபீஷணனின் விஷப் பற்களுக்கிடையே அகப்பட்டுக்கொண்ட என்னை வெகு தந்திரமாக விடுவித்தாள்!
அதிருக்கட்டும் நீ போன காரியம்?
வெற்றிதான் இளவரசே! இது மாதவன் எழுதிய கடிதம். (விபீஷணன் காவிகள் இருவர் இதைக் கவனிக்கின்றனர்)
(படித்துவிட்டு) மாதவன் - மனசாட்சியை அடகு
வைக்கும் மனித மிருகம். மகாராஜாவின் சோற்றைத் தின்று அவருக்கே துரோகம் நினைக்கிறான்.
இது சிங்கநாகன் கடிதம்.
சண்டமாருத நடையில் எழுதியிருக்கிறான். இந்தப் புலிகள் புத்தன் இருப்பதை மறந்துவிட்டார்கள்.
இளவரசே! அமோகமான ஆதாரங்கள்.
ஆம்! குமரிக்குச் சரியான பரிசு தரவேண்டும்.
பரிசு வேண்டி நான் பணிபுரியவில்லை.
(தனியிடத்தில் காவிகள் ரகசியமாய்)
இளவரசன் புத்தன்!
ஆமாம்! அந்தத் தெரு நடனக்காரி யார்?
எல்லாம் வேஷம். இதை உடனே விபீஷணரிடம் தெரிவிக்க வேண்டும்.
(இங்கே)
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களைக் கைது செய்யவேண்டும். ஆதாரங்களுக்காக அலைந்தோம். அகப்பட்டுவிட்டன. இனி அந்த விஷமக்காரர்களை விட்டு வைக்கக்கூடாது. நாளை காலையில் நமது வேலையை முடிக்க வேண்டும். நாட்டுக்கும் சமூகத்துக்கும் கேடு செய்யும் அந்த நாசசர்ப்பங்களின் நச்சுப்பற்களைப் பிடுங்கி எறியவேண்டும்! தேசத் துரோகிகள், சமூகத் துரோகிகள், நாசகாலர்கள். அவர்களைச் சுட்டெரிக்க வேண்டும்! விட்டுவைப்பது விவேகமல்ல!
வீரர்களே!
ஒழிப்போம் துரோகத்தை!
(அனைவரும் முழங்குகின்றனர்)
(விபீஷணன் "ஹ! ஹ! ஹ!" என்ற உரத்த குரலில் சிரித்தபடி திரை ஆரம்பம். சித்ரா கோபமாக நிற்கிறாள்)
சித்ரா......வா.
போதும், சித்ராவின் வாழ்வைச் சிதைத்தது.
சினம் பொல்லாதது. பஞ்சமா பாதகங்களில் அது ஒன்று.
பஞ்சமா பாதகம்! அநியாயத்திற்கும், அக்கிரமத்திற்கும் ஆசை மகுடைப் பிறந்த நீங்கள், பஞ்சமா பாதகத்தைப்பற்றி பேசுகிறீர்கள்.
என்ன! அநியாயமாவது அக்கிரமமாவது. அப்படி என்றால்?
பசப்பாதீர்கள்! பச்சைக் குழந்தைகளின் பரிதாப மரணத்துக்குக் காரணமாய் இருந்துவிட்டுப் பசப்பாதீர்கள்! பருவ மங்கைகளின் பரிசுத்த வாழ்வைப் பாழ்படுத்திவிட்டுப் பசப்பாதீர்கள்!
அட ஆண்டவனே.
ஆண்டவன் கேட்டதாயிருந்தால் உலகத்தில் கொடுமையே முளைக்காதே. ஆண்டவன் குருடன் — அல்லது செவிடன் — அல்லது ஊமையாக இருக்கவேண்டும்.
உம்.....! ஒவ்வொன்றுக்குச் சொல்! எண்ணிப் பார்க்கிறேன்.
எண்ணிப்பாருங்கள், உங்கள் காமவெறிக்கு ஆளாகி வாழ்விழந்த கன்னிப் பெண்கள் எத்தனையோ? எண்ணிப் பாருங்கள்.
கற்பழித்தேனா? இராமனைப்போல் ஏகபத்தினி விரதனையா நான்?
இராமனென்ன? கற்பைக் காப்பாற்றுவதில் நீங்கள் இந்திரனுக்கு அண்ணனுயிற்றே. தெரியும்.
பெண்கள் அகல்யாவாக இருந்தால் ஆண்களும் இந்திரராக இருக்கவேண்டியதுதானே.....
கதை கிடக்கட்டும், உங்கள் காமசேஷ்டைகள் எவ்வளவு கொடுமைகளைச் சிருஷ்டிக்கின்றன. யோசித்துப் பாருங்கள்.
என்ன சித்ரா! விளங்காத பாஷைகளே அள்ளி வீசுகிறாய். காமசேஷ்டையாவது, கொடுமையாவது, நானாவது செய்யவாவது, நான் ஏக பத்தினிக் கொள்கையில் சாக்ஷாத் பரந்தாமன்.
பரந்தாமன் கொள்கையை கோபிகா ஸ்திரீகளிடமல்லவா கேட்கவேண்டும்!
சித்ரா நீ என்னதான் சொல்கிறாய்? உன் கணவன் விபீஷணன் காமாந்தகாரன், காதகன், கடையன், இதுதானே உன் தீர்ப்பு?
தீர்ப்பு, இந்த மோதிரத்தைக் கேளுங்கள் சொல்லும்.
(திகைத்து) இந்த மோதிரம். (விரல்களத் தடவித் தேடுகிறான்.)
தெரு நடனக்காரிக்குப் போட்டமோதிரமே, அந்த திவ்ய மோதிரம்.
(விபீஷணன் ஸ்தம்பித்து நின்றதும், இரவு நினைவுகள் சில உருண்டோடுதல், மயக்கம் தெளிந்தவனாய்.)
ஏமாற்றம்! எங்கே அவள்?
அவள் அப்பொழுதே பறந்துவிட்டாள்.
இரு கள்ளிகளும் என்னைச் சதிசெய்திருக்கிறீர்கள்.
[சித்ரா கலகல, விபீஷணன் ஆத்திரம், பயங்கரமான அமைதி நிலவுகிறது. இரு காவிகள் வருதல்.]
