உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 8
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 8 · 8 / 33

கதைகளில் படித்திருக்கிறேன், ஜாதியை எதிர்த்து உயிரையே தியாகம் செய்தவர்கள் எத்தனையோ பேர். அதைச் சொல்லுகிறேன் அப்பா.

ஆமாம், நானுங்கூடப் படித்திருக்கிறேன்.

படிப்பது சுலபம். ஆனால் அதன்படி நடப்பது கஷ்டம்.

நான் அந்த தியாகிகளின் பாதையில் கால்வைத்துப் பல நாட்களாகின்றன.

[மலையன் அவசரமாக]

உம், பொன்னி! புறப்படு (புத்தனிடம்) நாங்க வருகிறோம். உங்கள் உதவிக்கு மறுபடியும்......

வேண்டாம். நீ சென்றால் போதும். பொன்னி! வருகிறேன்.

(பிரியமுடியாத பிரிவு)

(குமரி நிற்கிறாள். விபீஷணன் படுக்கையில் சாய்ந்திருக்கிறான்)

பெயர் என்ன சொன்னாய்?

மின்னல்.

பொருத்தம், பொருத்தம்! கண்ணின் ஒளியில் மின்னல், கன்னத்தின் விளிம்பில் மின்னல், இடுப்பின் ஒவ்வொரு அசைவிலும் மின்னல், வண்ணத்திப் பூச்சியே! உன்னை வருணிக்க வார்த்தைகளே கிடையாது.

(மதுவைக் கையில் கொடுத்து)

இதை அருந்துங்கள். வார்த்தைகள், உங்களை அறியாமலேயே வந்துவிழும்.

ஆமாம், நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை?

எனக்குக் கல்யாணம் ஆகாதுங்க.

ஏங்க?

ஒரு சபதம் வந்து குறுக்கே நிற்குதுங்க.

சபதமா! அதென்ன சங்கடம்?

கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஒரு ராஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிறது. இல்லேன்னு, கன்னியாகவே இருந்துடறது.

அப்படியானால், உன் சபதம் பலித்துவிட்டது.

நிஜமாகவா?

நிஜம், நிஜம்!

(மதுவை ஊற்றிக்கொடுத்து) உம், நிதானித்துச் சொல்லுங்க.

இன்று, நான் முல்லைக்காட்டு ராஜப்பிரதிநிதி இமயாவின் பிரதம மந்திரி! அடுத்தமாதம், இன்பபுரி சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி.

நல்ல ..... அதிர்வேட்டு! நீங்களாவது அரசராவது ஆகவாவது; விளையாடுறீங்க.

விளையாடுகிறேன்! இன்பபுரியின் மகாராணியோடா விளையாடுவேன்? இதைக் கேள், மகாராஜா மகாவீரர் ஆட்சி மங்கிவிட்டது. இன்பபுரியின் மகுடம், இனி விபீஷணன் பரம்பரைக்கு.

கனவா இருந்தாலும், அழகா இருக்குங்க!

நீ நம்பமாட்டாய். சக்கரவர்த்தி விபீஷணரோடு சரியாசனத்தில் வீற்றிருக்கப் போகிறாய்! அது வரையில் நம்ப மாட்டாய்.

நாகலோகம் போவதாக தவளை சொன்னால் நம்ப முடியுமா? (மதுவை மீண்டும் தருதல்)

விபீஷணன் தவளையல்லடி; கருடன், கருடன்! நாகலோகம் போவான், நாகராஜனையும் கொல்லுவான், (நெருங்கி) மின்னல்! வா!

(ஒதுங்கி) மகாவீரர் இளிச்சவாயரா? அவர் சேனைக்கு ஜவாப்பு சொல்லமுடியுமா? கோட்டைக்குள் நுழையத்தான் ஆகுமா? ஹூஹூம்!

நம்பமாட்டாயா என்ன?

ஹூஹூம்! பொய்யெல்லாஞ் சொல்றீங்க. என் சபதத்தைக் கெடுக்க பார்க்கறீங்க.

நான் சொல்வது பொய்! சரி, இந்தக் கடிதங்கள் சொல்வது பொய்தானா? கண்ணைத் திறந்து பார்!

[எடுத்துக் காட்டுகிறான்]

மாணிக்கக் கோட்டை தளபதி மாதவனுடைய கடிதம் இது. இன்பபுரிக்கு எதிராக என்னோடு சேர்ந்துள்ள மாபெரும் வீரன். இதோபார், சித்திரக்கோட்டை சிற்றரசன் சிங்கநாகன் கடிதம். அந்தச் சிங்கம் என்ன எழுதியிருக்கிறான் தெரியுமா? பத்தாயிரம் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கிறானாம்; இன்பபுரிக் கோட்டைக்குள் பிரவேசிக்க நேரம், வழி, எல்லாம் தயார்!

கோட்டைக்குள்ளா? ஹூஹூம்.

பைத்தியம், பைத்தியம்! இதோ எல்லப்பன் என்ற எலி, கோட்டைக்குள்ளே இருந்தே இதை அனுப்பியுள்ளான். இன்னும் சந்தேகமா? இந்தப் பாதையிலே சென்றால், கோட்டை தவிடுபொடி! ஹ ஹ ஹா!

நான் அதிர்ஷ்டக்காரிதான்.

(நெருங்கி) இன்பபுரியின் இராணி, மின்னல்! மின்னல்!

ஒரு வேளை, உங்கள் இமயா அரசராக வந்து விட்டால்?

முடியாது, முடியாது. இமயா என் கைப்பொம்மை, காரியம் சாதிக்க ஒரு கருவியாக உபயோகிக்கிறேன். என் வெற்றிக்குப் பிறகு, அவன் கருவேப்பிலை. நாட்டாசையைக் கிளப்பிவிட்டேன், நாக்கைத் தட்டிக்கொண்டிருக்கிறான் மடையன்! மன்னர் பதவிக்கு இவனு லாயக்கு? மண்டூகம்.. மின்னல்! நான் அரசனை அன்றைக்கே, அப்பொழுதே இமயாவின் தலை உருண்டுவிடும்!

நீங்கள் மகாமேதாவி (மது தருகிறாள்)