ஒரே முத்தம்
காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 7 · 7 / 33
நாங்கள் ராஜாங்க அதிகாரிகள். முல்லைக் காட்டில் நாங்கள் வைத்ததுதான் சட்டம்.
மயிலே, மயிலே என்றால் இறகு போடாது.
உம், அடுத்தது பலாத்காரம்.
(“பலாத்காரம்” ஆண் பெண் போராட்டம் நடைபெறுகிறது. பொன்னியைக் காவிகள் கைப்பற்றி விடுகிறார்கள். பெண்கள் ஓட்டம். திடீரென அங்கு தோன்றிய புத்தன் காவிகளை எதிர்க்கிறான். நீண்ட எதிர்ப்புக்குப்பின், காவிகள் ஓட்டம். பொன்னி தப்புகிறாள். புத்தன் பொன்னியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான்.)
கரடிக் கூட்டத்திலிருந்து காப்பாற்றினீர்கள்.
கடமையைச் செய்தேன்.
மறக்கமுடியாத உதவி.
மலர் வனத்தில் மாட்டு மந்தை நுழைந்தது. அதை மனிதத்தன்மை தடுத்தது.
மனமார்ந்த என் நன்றி, ஏற்றுக்கொள்ளவேண்டும்.
(மலையன் பொன்னியின் தந்தை, பொன்னியைத் தேடிக்கொண்டு வருதல்)
பொன்னி! பொன்னி! பொன்னி!
(ஓடி வருகிறாள்)
அப்பா!
இங்கு என்ன நடந்தது?
மந்திரி விபீஷணன்.........
ஆ! விபீஷணா?
ஆமாம். விபீஷண வண்டுக்குக் காமதாகம்! தேன் மலர் தேடுவதற்காகச் சில பூச்சி வண்டுகள் பறந்துவந்தன.
என்னு? என்னு? வண்டாவது நண்டாவது? ஏம்மா, இவரு யாரு?
அப்பா! இவர், என்னை இம்சிக்கும்போது......
ஆ! இம்சித்தானா? சாது போலிருக்கானே? சண்டாளன்!
[பொன்னி தடுக்க, கோபத்துடன் புத்தன்மேல் பாய்கிறான்.]
“பொன்னி விடு என்னை”
அவசரப்படாதீர்கள், இவரில்லை. அந்தப் பேடிகள் ஓடிவிட்டார்கள்.
இப்பொழுது சொன்னியே, இம்சித்தான்னு.
அவர்கள் என்னை இம்சிக்கும்போது, இவர் காப்பாற்றினார் என்றேனப்பா!
ஓ! அப்படியா? வணக்கம்! என் மவளே மலைப்பாம்பு வாயிலேருந்து மீட்டிங்க. ஐயோ, நீங்க இல்லன்னு இந்நேரம் என் குடும்பமே நாஸ்தியாகிவிடும். தெரியாம ஏதோ சொல்லிட்டேன்.
பரவாயில்லை, இந்த மாதிரி பாக்கியம் கிடைக்க வேண்டுமே!
உம், தெய்வந்தான் கண்பார்த்திருக்கு.
ஆமப்பா! இவர்கூட தெய்வலோகத்திலிருந்து...
அப்படித்தான் பொன்னி, உன்னைக்கூட அங்கு பார்த்திருக்கிறேன்; இல்ல, இல்ல உன் ஜாடையாக ஒரு பெண்.
[பொன்னி, புத்தன், பார்வையில் காதல் வெளிப்படுத்தக் காண்கிறான் மலையன்]
பொன்னி! பெரிய இடத்துப் பிள்ளையாண்டான், இவரோட நட்பு இவ்வளவு நாளி நிற்கிறதே பாவம். வா போகலாம்.
வேடிக்கை.
வேடிக்கையில்ல. நாங்கள்ளாம் தீண்டத்தகாதவர்கள்!
தீண்டத்தகாதவர்கள்! தூய உள்ளம் படைத்த நீங்களில்லை. தங்கள் வயிறு நிறைவதற்காக உங்களை ஜாதிவாரியாகப் பிரித்தாளும் வஞ்சகர்கள் தீண்டத்தகாதவர்கள்! நாய்களுக்கு அளிக்கும் உரிமைகூட நாட்டுமக்களுக்கு அளிக்க மறுக்கும் நச்சுக் கொள்கையினர் தீண்டத்தகாதவர்கள்! எந்த மனிதனுடைய உழைப்பைத் தங்கள் வாழ்விற்குத் தேவையாகக் கொள்கிறார்களோ; அதே மனிதனை ஜாதியின் பேரால் அடிமையாக்கி வைத்திருக்கும் சதிகாரர்கள் தீண்டத்தகாதவர்கள்!
என்னமோ, பெரியவங்க சொல்லியிருக்காங்க.
பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள், “சாதி இரண்டொழிய வேறில்லை” என்ற சன்மார்க்க போதனை, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனு” மென்ற கீதம்.
ஆம் அப்பா! அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள்.
உம். பொன்னி! இவர் வாடை உனக்கும் அடிச்சுட்டுதா? அவர் மேல் சாதிக்காரர், எதும் பேசுவார், நீ பேசலாமா?
ஏன்? என்னைப்போலத்தான் அவரும் இருக்கிறார்?
ஆப்! உன்னைப் போலவே நான். உன் உள்ளத்தைப்போலவே என் உள்ளம். ஜாதிவேறுபாட்டால் இவை மாறுவதில்லை.
ஜாதிக் கொடுமை, எத்தனையோ ஒன்றுபட்ட உள்ளங்களைத் துண்டித்திருக்கிறதே.
[எங்கேயோ கவனித்திருக்க]
என்ன? என்ன?
