ஒரே முத்தம்
காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 6 · 6 / 33
மக்களைப் பல ஜாதிகளாக இன்னும் பிரித்துக் கொண்டே போகவேண்டும்.
ஆமாம். பிரித்துக்கொண்டே போகவேண்டும்.
அதுவும் கடவுள் பேரால் செய்யவேண்டும்.
ஆமாம்! கடவுள் பேரால் செய்யவேண்டும்.
அவர்களுக்குள் புகைச்சல் ஏற்பட்டால்தான், புரட்சி ஏற்படாது. நாம் வாழலாம்.
புத்தன் அவர்களை ஒன்று சேர்த்துவிட்டால்?
கனவு! கனவு! கள்ளையும், சாராயத்தையும் கலக்க எண்ணுகிறான் மூடன்.
மூடன்!
பிறகு நாட்டில் அவர்களுக்குள்ளேயே புரட்சி. அரசன் அதை அடக்க ஆரம்பிப்பான். நாம் சுலபமாக உள்ளே நுழைந்துவிடலாம்.
அப்படியானால்; அடுத்தமாதம் நான் சக்கரவர்த்தி!
சந்தேகமா? முதலில் துரோக வேலையில் வெற்றி பெறவேண்டும். பிறகு சிம்மாசனம் தானே வரும்.
தானே வரும்!
இந்தக் கொள்கைக்குப் பெயர்தான்.....
விபீஷணக் கொள்கை!
இமயா! பழைய விபீஷணர் கொள்கையே இது தான்!
நல்ல கொள்கை. நாட்டுக்குத் தேவையான கொள்கை.
(குமரி வருகை. 1-வது காலி விபீஷணனிடம் கூறுதல்.)
என்ன ரகசியம்?
ஒன்றுமில்லை, தனிப்பட்ட விஷயம்.
ராஜப் பிரதிநிதி, இமயாவுக்குத் தெரியாத ரகசியமா?
இமயாவுக்கு வேண்டியது, இன்பபுரியின் மகுடம்.
ஆமாம்! மகுடம்!
மகுடம்! மங்கை! வேண்டுமானால் பேசாதீர்.
பேசவில்லை.
(இமயா வாயில் கைவைத்து பொத்திக் கொள்கிறான்)
(ஒரு கிராமசந்திரசுற்றுப்புறத்தில் பொன்னியும், அவள் தோழிகளும் கண்ணாமூச்சு ஆடிக் கொண்டிருக்கிறார்கள் பல பல விளையாட்டுகள், பாடலுடன். காலிகள் ஒருபுறமிருந்து இதைக் கவனிக்கிறார்கள் .)
ஏய்! இந்தக் குயிலுக்குக் குறி வையுங்கள்!
விபீஷணருக்கு விருப்பமான பறவை!
பறந்துவிடப் போகிறாள்.
(பொன்னியின் அருகே நெருங்க, பொன்னி கோஷ்டி வேறு பக்கம் திரும்ப எத்தனிக்க)
நில்லுங்கள்!
யார் நீங்கள்?
நாங்கள் வேடர்கள்.
வேட்டையாடுவதில் வெகு சமர்த்தர்கள்.
ஆமாம். எங்கள் குறிக்கு எந்த மானும் தப்பியதில்லை.
இங்கு வந்த விஷயம்?
எல்லாம் உங்கள் நன்மைக்குத்தான்.
நன்மையா?
ஆமாம், நீங்கள் சகல செளபாக்கியங்களோடு, சகல சம்பத்தோடு, சகல செல்வாக்கோடு, சகல சல்லாபங்களும் பெற்று வாழ, நாங்கள் ஆசைப்படுகிறோம்.
வளர்த்தவேண்டாம், சீக்கிரம்.
மிடுக்காகப் பேசினாலும், மிக அழகாக இருக்கிறது.
விபீஷணரும் இதைத்தான் ரசிப்பார்.
(ஆத்திரமாக) நிறுத்து உன் கிண்டலை! இவள் கிராமத் தலைவியின் மகள். பொன்னி! வா போவோம்.
பொன்னி, ஹ ஹ ஹ! போகவிட எண்ணமில்லை.
(பொன்னி முதலியோர் நகரவே)
