ஒரே முத்தம்
காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 5 · 5 / 33
நமக்குச் சரியான பரிசு கிடைக்கும்!
சரி, நம்மவளிலே ஒரு மான் விழுந்தது, வாங்க, வாங்க.
(அருகே வந்து) நீ ஆடினாயே, அதற்குப் பெயர்?
நாட்டியம்.
உம், கேலி செய்யவும் தெரியுமா?
கொஞ்சம் தெரியும்.
உன் நாட்டியக் கலையின் கௌரவத்தையே கெடுத்துக்கொள்கிறாய். இந்த ஆபரண நாட்டியத்தை, இப்படித் தெருவிலா ஆடுவது?
ஏழைகள்! வேறெங்கே சாமி, அரண்மனையிலா ஆட முடியும்?
பொம்புள மனம் வைத்தால், அரண்மனை மட்டுமல்ல, அரசர் தலையிலேயும் ஆடலாம்.
பரமசிவன் தலையிலே, கங்காதேவி ஆடுற மாதிரி.
அதற்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணுங்க சாமி.
அதிர்ஷ்டம், உன் மாதிரிப் பெண்களுக்குத்தானே முதலில் அடிக்கும். இதோ பார், நீ இந்தமாதிரி கந்தலுங் கிழிசலுமா உடுத்தி, சங்கு மணிகளை மாட்டிக்கொண்டிருப்பதை என்னால் சகிக்க முடியவில்லை! உன் உடம்பெல்லாம் ரத்தின மாலைகள் போட்டுப் பார்க்கவேண்டும்.
ஆசை இருக்கு. ஆனா, ஆளு என்னுட்டந்தான் இருக்குங்க!
(குமரியை அருகே கூப்பிட்டு மெதுவாக) எங்கள் எஜமான் விபீஷணர் உன்னைக் கண்டால், கடித்துத் தின்றுவிடுவார்.
ஆ! ராட்சஸன் போல் இருக்கு!
இல்லை. உன் அழகிலும், ஆட்டத்திலும், அப்படியே மயங்கி, அள்ளி அள்ளிக் கொடுப்பார்.
நிஜமாகவா?
அவர் ஆஸ்தியா செலவாகுது? இன்பபுரி சாம்ராஜ்யத்துப் பணம். அதற்கு ராஜப்பிரதிநிதி இமயாவிடம் இரும்புப்பெட்டி; விபீஷணரிடம் திறவுகோல். அவர் இஷ்டம்போல் செலவு. இன்பச் செலவு. அதிலும் உனக்குப் பொன்னபிஷேகம் செய்யச் சொல்றேன். போதுமா?
அப்படியானால் நீங்கள் எல்லாம் யார்?
நாங்கள் வரி வசூலிக்கும் உத்தியோகஸ்தர்கள். வழியில் உன்னைப்போல யாராவது அகப்பட்டால், எஜமானுக்குப் பரிசாகத் தருவது வழக்கம்.
பெண்கள் வர மறுத்தால்...?
குரங்குக் கையில் அகப்பட்ட பூமாலைதான்! ஆனால் நாங்கள் சொல்வதைக் கேட்டுவிட்டால், கண்ணை இமை காப்பது போல் காப்பாற்றி, விபீஷணரிடம் விடுவோம்.
நீங்கள் ரொம்ப நல்லவங்க.
(2-வது காவியைக் காட்டி) ஆமாம்! இவன் கூட அப்படித்தான் சொன்னான்.
சரி புறப்படு.
(தனிந்த குரலில்) நல்ல சந்தர்ப்பம். நரியை அதன் வளையிலேயே சந்தித்து நசுக்கிவிடலாம்.
விபீஷணன் சண்டாளன்! ஏதாவது சதி செய்து விட்டால்?
தந்திரமாகத் தப்பித்துக்கொள்வேன். இளவரசர் வந்ததும், இதைச் சொல்லுங்கள்: நாளை காலையில் நான் திரும்பாவிட்டால், அது ஆபத்தின் அறிகுறி.
[காவலரோடு புறப்படுகிறாள் குமரி]
[இமயாவும் விபீஷணனும்]
அடுத்த மாதம் படையெடுப்பு. மகா வீரருக்குச் சிறை. புத்தன் சித்திரவதை. இன்பபுரியில் நமது ஆட்சி
இன்பபுரிக் கோட்டைக்குள் நுழைவது!....
சுலபம், சுலபம்! குதிரைக்குள் எலி இருப்பது போல், கோட்டைக்குள் நமது ஆள் வைத்திருக்கிறேன். கோட்டையை முற்றுகையிடும் வழிகள், இன்று குறித்தனுப்பிவிட்டான், இனிமேல் என்ன?
ஒன்றுமில்லை.
வெற்றி நமக்குத்தான். சந்தேகமில்லை.
ஆமாம். சந்தேகமில்லை. வெற்றி நமக்குத்தான்.
இன்பபுரியில் நமது ஆட்சி எப்படி இருக்கும்?
எப்படி இருக்கும்?
அழியாத ஏகாதிபத்தியமாக இருக்கும்.
ஆமாம்! அப்படித்தான் இருக்கும். ஆனால் விபீஷணரே! பிரஜைகள் புரட்சி செய்தால்?
செய்யவிடமாட்டேன்.
விடமாட்டீர்! அடக்குமுறைச் சட்டத்தைப் போட்டு......
அல்ல அல்ல! ஆயுதம் வேறு இருக்கிறது.
இருக்கும், இருக்கும், வைத்திருப்பீர்.
