உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 4
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 4 · 4 / 33

மகுடம்!

மது!

மது!

மங்கை!

மங்கை!

வேண்டுமானால் எதிர்த்துப் பேசாதீர்.

பேசவில்லை.

(இரண்டு மதுக் கோப்பைகளையும், ஆளுக்கொன்று எடுத்துச் சுவைக்கின்றார்கள்)

(விபீஷணன் ஆட்கள், ஒரு வாலிபனைக் கட்டி இழுத்து வருகின்றனர். (திரை, “எதிர்த்துப் பேசாதே” என்ற அதிகாரக் குரலுடன் ஆரம்பமாகிறது))

“எதிர்த்துப் பேசாதே”

ராஜப் பிரதிநிதி இமயாவின் உத்தரவு. எடு வரியை! (மீண்டும் அடித்தல்)

கடவுளே! இந்த மிருக ஆட்சிக்கு முடிவு கிடையாதா?

ஹ ஹ ஹா! கடவுள், பக்தர் அவதிப்படுகிறீர்; வந்து காப்பாற்றப்பா!

[வாலிபன் மனைவி ஓடிவந்து, கணவன் மேல் விழுகிறாள். அந்த அடிகளை அவள் வாங்குகிறாள். பிறகு அவன் வீராவேசம் கொண்டு]

இந்தா! உன் வரி. அவரை உயிரோடாவது விடு!

[தன் தாலியைக் கழற்றிக் கொடுக்கிறாள்]

தாலி, நான் கட்டிய தாலி! ஆ! அக்கிரம ஆட்சியே! உனக்கு அழிவு கிடையாதா?

இல்லையப்பா இல்லை! இமயாவின் ஆட்சி, சிரஞ்சீவி வரம் பெற்றது.

மகாவீரச் சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யத்திலா இந்த மகாபாதகங்கள்? இதைக் கேட்பாரில்லையா? இந்த ஏழையின் கூச்சல் உன் காதில் விழவில்லையா?

கடவுள் செவிடப்பா செவிடு. (பயங்கர சிரிப்பு)

(ஒரு பகவதர் காலக்ஷேபம்)

வாழை, கமுகு முதலிய மரங்கள் வான் நோக்கி நிற்க, வண்ண மலர்கள் வரிசை வரிசையாகத் தோரணம் கட்டி, கனிகளைக் குலை குலையாகவும், கொத்துக் கொத்தாகவும் தொங்கவிட்டு அலங்கரித்த பந்தலில், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும் அமர்ந்து யாகம் வளர்த்து, ஆடுகளை வெட்டி, அக்கினிக் குண்டத்தில் குடம் குடமாக நெய்யைக் கொட்டிப் பொசுக்கித் தின்று, சோமரச பானங்களைக் குடித்து, அதிவிரிசையாக, ஆரவமோடு மந்திர கோஷம் முழங்கும்போது, இரக்கமற்ற அரக்கர் கூட்டம் திடீரெனப்புகுந்தது, (விபீஷணன் ஆட்கள் திடீரெனப்பிரவேசித்தல். ஆர்ப்பாட்டம், அல்லல், ரகளை, கொள்ளை, வீடுகள் கொளுத்தப்பட்டு குழந்தை குட்டிகள் ஓட்டம், தொட்டிலில் கிடந்த பிள்ளையைத் தூக்கி எறிந்து கொல்லுதல்)

வரி கொடுக்காத நாய்களுக்கு வீடு ஏன்? கொளுத்தி எரியுங்கள்!

(ஆணவத்தின் கோரத் தாண்டவம்)

[புத்தன். குமரி, சில வீரர்கள், குமரி தெரு நடனக்காரி வேடத்தில் இருக்கிறாள். வீரர்கள் அவள் சொந்தக்காரர்போல் இருக்கிறார்கள். புத்தன் சாதாரண உடையில் காணப்படுதல்)

பத்திரம்! பவளமலைச் சாரலுக்கு வந்து சேருங்கள். நானும் இரவு அங்கு வந்துவிடுகிறேன்

எதிரிகள் கையில் சிக்கிவிடாமல்......

எல்லாம் தெரியும், நீங்கள் ஜாக்கிரதை!

ஒருவேளை அரண்மனைக்குள் நுழையவேண்டி இருந்தால்?

தந்திரம் அதிகம் வேண்டும். முடிந்தவரையில் முயற்சித்துப்பார். நான் வருகிறேன்.

(புத்தன் போய்விடுகிறான். ஒருவன் மிருதங்கம் அடிக்கத் துவங்குகிறான்)

எல்லாரும் வாங்க! ஆடப்போறுங்க, ஆடப்போறுங்க! (கூட்டம் சேர்கிறது. குமரி தெருக்கூத்துப்போல் ஆடுகிறாள். இன்னொருவனும் ஆடுகிறான். குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்கிறது. விபீஷணன் காலிகோஷ்டி என்பது தெரிகிறது மக்களுக்கு.)

ராஜாங்கத்து காலிகள்.

விபீஷணன் ஆட்கள்.

சரி, இந்தக் குட்டியை சனியன் பிடிச்சது!

(கோபமாய்) என்னப்பா! வாரானுங்க. பார்த்து கிட்டிருக்கிறீங்க?

ஏன்? என்ன செய்ய?

வாங்க, ஓடிப்போயிடுவோம்!

(காவலன் வந்து தூர நின்று, நடனத்தை ரசித்தல்)

மயில் மாதிரி ஆடுகிறாள்!

புயலைப்போல மிளிர்கிறாள்!

கச்சிதமான முகம், கட்டுக்கோப்பான தேகம்.

இந்த ரம்பையை, நம்ம எஜமானிடம் கொண்டுபோனால்?

உயிரை விட்டுவார்.