உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 3
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 3 · 3 / 33

(எல்லோரும் செல்லல். குமரியை ஜாடையாகப் பார்த்து, ரமேலா சிரித்தல். குமரியின் ஆனந்தகீதம்)

(மது விருந்துக் காட்சி-இரு பெண்களின் சில நிமிட நடனம்)

மது, மங்கை, இரண்டுந்தான் கவலை தீர்க்கும் மருந்துகள்.

ஆமாம். மருந்துகள்! கடலெல்லாம் மதுவாகி விட்டால்..........

மணல்களெல்லாம் மங்கையராக்கி, மதுக்கடலில் ஜலக்கிரீடை செய்யலாம்!

மாளிகை முழுவதும் மாதர்கள், மாதர்கள் கையிலே மதுக்குடங்கள். விபீஷணரே! அந்த இடம்......?

அசல் இந்திரலோகந்தான்! மதுக்கோப்பைகள்;

அதைப் பிடித்திருக்கும் மலர்க் கரங்கள், அடா! டா டா! இன்பம்! இன்பம்! இன்பம்!!

இன்பம்! இன்பம்! இன்பம்!! மதுவை அந்த மாதர்களின் வாயில் ஊற்றி, அதை உறிஞ்சிக் குடித்தால்?

மலரில் வழியும் தேனே, வண்டு குடிப்பதுபோல், மநோகரமாய் இருக்கும்.

பேஷ்; விபீஷணரே! கவிஞன்போல் பேசுகிறீர்.

(மதுவைக்காட்டி) எல்லாம் இந்த மகேஸ்வரியின் அருள்.

ஆஹா! அருளே அருள்!

(ஒரு பெண்ணின் சிலையை உற்று நோக்க, அது மகாவீரர் போலத் தெரியவே)

மகாராஜா! மகாவீரர் நம்மையே பார்க்கிறார். மடையர்.

(சிரித்தபடி) மண்ணங்கட்டி ராஜா!

(சிலையை உதைக்கவே, அது விழுகிறது)

நன்றுகச் சொன்னீர். இந்தச் சிலை இருக்குமிடத்தில், என் சிலையல்லவா இருக்க வேண்டும்?

இங்கென்ன! இமயாவை இன்பபுரியின் ரத்ன சிம்மாசனத்தில் இருக்கவைக்கிறேன்.

இருக்கவைப்பீர். ரத்ன சிம்மாசனம்! அதனருகே பொன் குடத்தில் புதிய மது. வைரக் கிண்ணத்தால், அதை மொண்டு என் வாயில் ஊற்றும் வனிதாமணிகள், விபீஷணரே, விரைவில் அந்தப் பதவி வரவேண்டும்.

வந்தே தீரும்.

வந்தே தீரும்.

வலையை வீசிவிட்டேன். விரைவில் சதிவேலைகள் முடிந்துவிடும். பாக்கியிருப்பது படையெடுப்பு. இன்பபுரிக் கோட்டையின் முற்றுகை! மன்னன் ஓட்டம்! நமது ஆட்சியின் ஆரம்பம்.

புத்தனை மறந்துவிட்டீர்.

அவன் கன்றுக்குட்டி, என்னைக் கண்டாலே கலங்கிவிடுவான்.

கலங்கிவிடுவான் கோழை! விபீஷணரே! படையெடுப்பதென்றால், நானும் வரவேண்டுமோ?

வேண்டாம், வேண்டாம்!

வேண்டியதில்லை. அற்ப விஷயத்திற்கு நான் வேறு.

இமயா! நீர் பாதுகாப்பிலிருக்கலாம்.

பாதுகாப்பென்ன! ஒரு பத்தாயிரம் வீரர்களோடு, ஒரு குகைக்குள் இருந்தால் போகிறது. எனக்கொன்றும் பயமில்லை.

நீர்தான் அஞ்சா நெஞ்சம் படைத்த வீர சிங்கமென்று, நாடெல்லாம் சொல்கிறார்களே!

ஆ! அப்படியா சொல்கிறார்கள்? (நெஞ்சைத் தடவிக்கொண்டு)

ஆமாம்.

உம். படைத்திட்ட நிறைய பணம் வேண்டுமே!

பண வசூல், நடந்துகொண்டுதானிருக்கிறது. போரை முன்னிட்டு, நம் பொக்கிஷத்தைப் பாதி நிரப்பிவிட்டேன். (மதுவைக் கோப்பையில் ஊற்றுகிறான்) எங்கு பார்த்தாலும் நம் ஆட்கள், வரி வசூல் செய்கிறார்கள்.

வரியா?

ஆம்! பிறந்தால் வரி, வாழ்ந்தால் வரி! இறந்தாலும் வரி! ஒரே வரி மயம்.

வரி! மகாராஜாவுக்குத் தெரிந்தால், மகா ஆபத்தாயிற்றே!

பைத்தியம்! உளறாதீர்! மகாராஜாவின் ஆணிவேரையே பிடுங்க அருமையான திட்டம் போட்டிருக்கிறேன்.

குடிஜனங்கள் சக்ரவர்த்தியிடம் முறையிட்டால்?

குடிஜனங்கள்! குடலைப் பிடுங்கிவிடுவேன். வாயைத் திறக்கவே மாட்டார்கள்!

உஸ், பேசாதீர்! முல்லைக் காட்டின் சாதாரண ராஜப் பிரதிநிதி............இன்பபுரியின் மகுடம், இதில் எது வேண்டும்??

(இரண்டு மதுக்கோப்பைகளை, தனித் தனியே சுட்டிக் காட்டுகிறான்)

மகுடம்! மகுடம்! இன்பபுரி மகுடம்!

மகுடம்!