ஒரே முத்தம்
காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 2 · 2 / 33
அதுதான் சுத்த வீரனின் பண்பு. அமைச்சரே! இனி நான் சாகமாட்டேன். என் மைந்தனின் புகழ் சீவித்திருக்கும் வரையில், என் பெயரும் சீவித்திருக்கும்.
(புத்தன் வருகிறான்)
அப்பா!
புத்தா! இந்த ஆண்டு பிறந்தநாள் பரிசாக (புத்தன் சுற்று முற்றும் பார்க்கிறான்) ஒருவேலை தரப்போகிறேன் உனக்கு.
ஆணை
முல்லைக்காட்டின், நமது ராஜப் பிரதிநிதியைத் தெரியுமல்லவா?
ஆம். இமயா. அவர் இன்று விழாவுக்குக்கூட வரவில்லை.
வரமாட்டான் வக்கிர மூளைக்காரன். உனக்கு விபீஷணன்கூடத் தெரிந்திருக்குமே.
நன்றாகத் தெரியும். இமயாவின் ஆலோசக மந்திரி.
இருவரும் சேர்ந்துகொண்டு, முல்லைக் காட்டில் கொடுங்கோல் நடத்துகிறார்களாம்.
கொடுங்கோல்! நம்பவம்ச வரலாற்றிலேயே இல்லாத வார்த்தை! (ரமேலாவும், குமரியும், அந்தப்பக்கம் வந்தவர்கள் நின்று கவனிக்கிறார்கள்.)
அதற்காகத்தான் உன்னை அழைத்தேன். நீ
உடனே முல்லைக்காடு சென்று. அந்த அரசியலைத் திருத்தி யமைக்க வேண்டும். கொடுங்கோல் வளரக்கூடாது.
ஆணை.
அவர்கள் செய்யும் அநியாயங்கள், அளவிட முடியாதாம். ஆதாரங்களோடு அகப்பட்டுவிட்டால், ஆயுள் தண்டனைதான் அவர்களுக்குச் சன்மானம்!
ஆதாரம்!........ அப்படியானால், இளவரசர் மறைமுகமாக இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.
ஆம். அப்படித்தான் செய்யவேண்டும்.
முல்லைக் காட்டெங்கும், மூர்க்கர்கள் உலாவுகிறார்களாம். அவர்களைக் கூடவே அழிக்கவேண்டும்.
எல்லோரும் இமயாவின் ஆட்கள்தானும். எதற்கும், முதலில் ஆதாரங்கள் தேடுவது அவசியம். இளவரசன் சென்று துப்பறிவதுதான் சிறந்த வழி.
ஆபத்தான வேலை. அவருக்குத் துணையாக யாரையாவது அனுப்பினால்......
உண்மை. யாரை அனுப்புவது?
“நான் போகிறேன்” (என்று கூறியபடி குமரி அருகே வருகிறாள்)
இல்லை யாரும் தேவையில்லை. நானே செல்லு கிறேன்.
இளவரசர், யோசிக்காமல் கூறுகிறார் மாமா!
ஆம்! இமயாவைப்பற்றி வந்திருக்கும் செய்திகள் அதிபயங்கரமானவை!
வேண்டுமானால், சில வீரர்களோடு செல்லுகிறேன்.
வீரர்களும் வேண்டியதுதான். அதோடு....
வீரம் போருக்கு முக்கியமானது. ஆனால், சிங்கத்தையும் நரி ஏமாற்றிவிடும்.
அதற்காக?
நாமும் நரிகளாய் மாறி நடிக்கவேண்டும்.
நடிப்பது பிரமாதம்?
அதில் ஆண்களைவிடப் பெண்கள் திறமைசாலிகள். சதிகாரர்களைப் பிடிக்க, பெண்களின் சாகசம் நல்ல வழி.
உண்மை! உண்மை! புத்தா! பகைவரின் நெஞ்சில் நுழையக்கூட பெண்களுக்குப் பயிற்சி உண்டு. அதிலும், குமரி உன் நலத்தையே நாடுபவள்.
மாமா! நான் அவரோடு போகலாமல்லவா?
நீ இளவரசனுடனேயே இருக்கத்தானே நான் ஆசைப்படுகிறேன்.
கொடுமையாளரின் குகைக்குள் நுழையவேண்டும். அதற்குக் குமரி ஏற்றவளல்ல.
குமரியைக் கோழையாக நினைக்கிறாய் புத்தா!
அப்படியில்லை மாமா! பெண் வர்க்கத்தையே பேதைகளாக நினைக்கிறார். மாமா!. அவர் என்னை அழைத்துச் செல்லவேண்டாம். நான் தனியே செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்.
வேண்டாம், வேண்டாம். என்னுடனேயே வரட்டும்.
புத்தா! ஜாக்கிரதை! குமரியை அழைத்துச் செல்கிறாய். விபீஷணன் இமயா வெறியாட்டங்கள், மது, மங்கை இரண்டுந்தானும்!
(புத்தன் வணங்கிச் செல்ல)
புத்தா! ஆதாரமில்லாமல் யாரையும் அவஸ்தைப் படுத்தாதே!
தந்தையே! நீதியின் மேல் ஆணை! நேர்மை தவறி நடக்கமாட்டேன்.
வாழ்க!......வெல்க!
