ஒரே முத்தம்
காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 1 · 1 / 33
ஒரே முத்தம்
சரித்திரக் கற்பனை நாடகம்
கலைஞர் மு. கருணாநிதி
(இளவரசர் புத்தன் பிறந்தநாள் கொண்டாட்டம் ஊர்வலம் வருகிறது மக்கள் புத்தனைக் காண ஆவலாக ஓடி வருதல்)
“இளவரசர் வாழ்க!” “எங்கே இளவரசர்?”
(என்று கூவிக்கொண்டு வரும் மக்கள், மகிழ்ச்சிப் பெருக்கால் சீமான்கள்மேல் மோதி விட, அவர்கள் வெறுப்பும் இருமாப்பும் கொள்கின்றனர்)
அறிவுகெட்டவர்கள், அடித்துவிரட்டுங்கள்!
(ஒரு கிழவனின் மண்டையில் பலத்த அடி விழ, அவன் அலறுகிறான்)
நிறுத்துங்கள்! இது என்ன அக்கிரமம்?
நான் தான் விரட்டச் சொன்னேன். வெறிநாய்கள் மாதிரி வந்து விழுகிறார்கள்.
அதற்காக நாமும் அப்படி மாறிவிடுவதா? அதுவும் மகிழ்ச்சிகரமான இந்த நாளில்!
சாதாரணப் பிரஜை, சமஸ்தானச் சீமான்களின் மேல்......
சாதாரணப் பிரஜை! அந்தப் பிரஜையின் ரத்த வியர்வைதான் பிரபுக்களின் மாளிகை, பிரபுக்களின் மகிழ்ச்சி, பிரபுக்களின் வாழ்வு! என்னைப் பார்க்க ஆவலுடன் ஓடிவரும் இந்தப் பாட்டாளிக்கு இதுதானு பரிசு? (என்று கிழவனிடம் நெருங்கி பரிவோடு) பெரியவரே! வருந்தாதீர். அறியாமல் நடந்துவிட்டது. இதை வைத்துக்கொள்ளுங்கள். (முத்துமாலை யளித்தல்)
(கிழவனிடம்) அடிச்சாலும் அடிச்சாங்க அந்த முகூர்த்தமா உனக்கு அதிர்ஷ்டம் அடிச்சது தாத்தா!
புண்ணியவான்! என்ன இரக்கம், என்ன தயவு, என்ன கருணை, நீடூழி வாழணும்!
(ஊர்வலம் மீண்டும் வாத்தியங்களுடனே நகர்கின்றது)
(அரசர் மகாவீரர், அமைச்சர், யாளித்தத்தர் மற்றும் சேனாதிபதி, குடிமக்களும், பெண்கள் பகுதியில் குமரி, ரமேலா மற்றும் பலரும், நடனம் நடைபெறுகிறது முடிந்ததும்)
வணக்கம். அன்புடையீர்! இளவரசர் புத்தரின் பிறந்ததினமாகிய இந்தப் புனிதமான விழாவில், இன்பபுரி மக்களின் சார்பாகப் பல்லாண்டு கூறுகிறேன்.
(சபையில் வாழ்த்தொலி கிளம்புகிறது)
“இளவரசர் வாழ்க!”
(எழுந்து) பூந்தோட்டத்தின் ராஜப் பிரதிநிதி என்ற முறையில், இளவரசருக்கு இந்தப் பரிசை வழங்குகிறேன். சமத்துவத்தைக் குறிக்கும் இந்தப் பரிசு, எதிர்கால இன்பபுரி பற்றிய என் கனவு! சக்கரவர்த்தி மகாவீரருக்குப்பிறகு மகுடம் சூடப்போகும் இளவரசரின் காலத்தில், என் கனவு பலித்துவிடும் என்று நம்புகிறேன். இந்தப் பிறந்த தினத்திலே நானும் நம் நாட்டின் மேன்மைக்குப் பாடுபடுவதாகப் பிரதிக்ஞை எடுத்துக்கொள்வோம்.
வாழ்க இளவரசர்!
(பாட்டாளி, பணக்காரன், சமங்குறிக்கும் ‘தராசு’ பரிசு தருதல். மற்றும் சேல மாவட்டம், மயில்பண்ணை, வசநாடு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பரிசு வழங்குதல்)
அன்புள்ளவர்களே! உங்கள் ஆர்வத்திற்கு என் நன்றி. நண்பர் யாளித்தத்தர் குறிப்பிட்டதுபோல், இது என் பிறந்தநாள் மட்டுமல்ல; இன்பபுரியின் இன்ப வாழ்வுக்காகப் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ள, ஆண்டுதோறும் நடைபெறும் விழா. இந்நாட்டின் வருங்காலம் யாளித்தத்தருக்குக் கனவு, எனக்கு என் வாழ்வின் லட்சியம். உயர்ந்த லட்சியம். உன்னதமான லட்சியம்! என் உயிரோடு உயிராக உறைந்துகிடப்பது இந்நாட்டு மக்களின் இன்ப வாழ்வு, பேதமற்றப் பெருவாழ்வு, சீமான் ஏழை என்னும் நிலையொழிந்த சிங்கார வாழ்வு.
இதுவே என் மூச்சு. என் இதயகீதம். இந்த லட்சியத்தில் வெற்றிபெற, எதையும் தியாகம் செய்வேன். வேண்டுமானால் இன்பபுரியின் மகுடத்தைக்கூட! (கைத்தட்டலும், வாழ்த்தொலியும்) வருங்கால இன்பபுரி சாம்ராஜ்யத்தில், ஏழை, பணக்காரன் இருக்கமாட்டான். ஆண்டான், அடிமை இருக்கமாட்டான். மனிதன் தான் இருப்பான்!
[மீண்டும் வாழ்த்தொலி கிளம்புகிறது. கூட்டம் கலைகிறது. விழா முடிந்து எல்லோரும் செல்கின்றனர் குமரியும், தோழி ரமேலாவும் மட்டும் மிஞ்சுகிறார்கள். பரிசுகளையே கவனித்த குமரியின் முகக்கோணல் ரமேலாவை கவனிக்கிறது]
என்னம்மா, விம்முகிறாய்? நீ ஒன்றும் பரிசளிக்கவில்லை என்றுதானே? இளவரசர் உன்னையே பரிசாக ஏற்றுக் கொள்வார், கவலைப்படாதே.
ரமேலா! என் உயிரோடு உயிராக உறைந்துகிடப்பது இந்நாட்டு மக்களின் இன்பவாழ்வு. பேதமற்ற பெருவாழ்வு, சீமான் ஏழை என்னும் நிலையொழிந்த சிங்கார வாழ்வு!
ஓ! அதோடு குமரியையும் சேர்த்துக்கொள்ளவில்லை, அதுதானே?
(கோபமாக) ரமேலா!
குமரி! கூட்டத்தில் சொல்லும் விஷயமா அது? ஒருகாலம் வரும், அப்போது மஞ்சத்தில் கொஞ்சலோடு சொல்
ளார். அப்போது இந்நாடு, மக்கள், சீமான், ஏழை, எல்லாம் வாயில் வராது. (புத்தன்போல் நடித்துக்கொண்டு) என் உயிரோடு உயிராக உறைந்து கிடப்பது குமரி என்ற குயில்! அவள் அழகு, அவள் மஞ்சம்......
ரமேலா! பேசாமலிருக்கமாட்டாய்?
[குமரி புத்தனின் படத்தில் மெய்மறந்திருக்கிறாள்]
ஓ! இளவரசரோடு பேசுகிறாயா? அது படம்.
இந்தப் படத்திற்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால்......?
இங்கிருந்து என்னை விரட்டி அடிப்பாய்.
[குமரி பெருமூச்சோடு நகர்கிறாள்]
இப்படி வாடுகிறாயே ஒருவார்த்தை அவரிடம் கூறிவிடேன். உன் அத்தான்தானே?
மறுத்துவிட்டால்?
மறுப்பது, மனோரஞ்சித மலரையா?
ரமேலா! இளவரசர் எண்ணமெல்லாம்......
(என்று ரமேலாவைப் பார்க்கிறாள் ஆசையோடு)
(அமைச்சர், அரசர் மகாவீரர்)
இளவரசரின் எண்ணமெல்லாம், இன்பபுரியின் எதிர்காலத்தைப் பற்றியது. நாட்டை இன்பலோகமாகச்
சிருஷ்டிப்பதே அவரது லட்சியம். அந்தப் பாதையில், யார் குறுக்கிட்டாலும் பொருட்படுத்தமாட்டார்.
