உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 32
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 32 · 32 / 33

நீ இப்ப சமைச்சுக்கிட்டுப் போனாலும், நாழி ஆயிட்டு துன்னு நாலு போட்டுத்தான் போறான்.

பேசாம இருங்க சொல்றேன்.

(ஒரு கலயத்தில் அரிசியை எடுத்துக் கொட்டிக் கொண்டு, ஒரு சட்டியில் கோழியை வைத்து மற்றொரு சட்டியால் மூடிக்கொள்கிறாள்)

இது என்ன வெறும் அரிசியை கொட்டறே?...உயிர்க் கோழியைக் கவுக்கறே?

அப்புறம் சொல்றேன். (புறப்படுதல்)

அப்ப நான் போகட்டுமா? விபீஷணருக்குப் பெண் தேடப் புறப்படணும்.

நாளைக்கு...?

வர்றேன். எலும்புத்துண்டை நாய் மறக்குமா?

(திரும்பிப் பார்த்தவண்ணம் போகிறான்)

(குடியானவர் சாப்பிடுதல், சந்தேகம் பசியோடு களைத்து உட்கார்ந்திருக்கிறான்)

ஏண்ணே சந்தேகம்! இன்னும் சாப்பிடாம உட்கார்ந்திருக்கிறே?

சாப்பாடு வந்தாவல்ல சாப்பிட.

(கருப்பன் முதலியோர் எழுந்து போகல்)

(தனக்குள்) என்ன இன்னும் காணோம்? ஒரு வேளை குழம்பு வைக்க நேரமாயிட்டதோ? உம். பசி வயத்தைக் கிள்ளுதே! அட எழவு வயிறே! செத்த சும்மா இரேன். சமைக்கிறாளா? இல்ல பாஞ்சாலியம்மன்கிட்டே உட்கார்ந்து பாடுறாளா?

(வந்து) ஏண்ணே, இன்னும் சாப்பாடு வல்லியா?

சாப்பாடு வல்லே, சாக்காடுதான் வரப்போவது.

உன் சம்சாரம் யாரோடவாவது பேசிக்கிட்டு இருக்குதோ?

பக்கத்திலே கூட வீடு இல்லே. எந்த பொம்பளையோட பேசப்போற?

பொம்பளையோடத்தான் பேசணுமா?

என்ன சொன்னே?

உன் சம்சாரம் ஆம்பளையோடவும் பேசுதுன்னு சொன்னேன்.

என் சம்சாரமா? பதிவிரதையைப்பார்த்து அப்படிச் சொல்லாதேடா பாவி! நாக்கு அழுகிப் போயிடும்.

பதிவிரதை! (சிரித்து) ஏய் சந்தேகம்! நீ என் கூட்டாளி ஆச்சேன்னு சொல்றேன். சொல்லக்கூடாது. இருந்தாலும் சொல்றேன். உன் பொஞ்சாதிக்கும், இன்னொருத்தனுக்கும் சிநேகம்.

ஆ! நிஜமாவா?

ஆமாம்.

அப்படிச் சொல்லாதேடா! அவள பாஞ்சாலியம்மன் மாதிரி நினைச்சு இருக்கேன். எப்படிப் பார்த்தாலும் அம்மன் கிட்டேயே தவங்கிடக்கிறாளேடா!

எல்லாம் வேஷம்! நீ இளிச்சவாயன். நம்பி மோசம் போறே.

ஏய்! உண்மையைச் சொல்லுடா. என்னாலே நம்ப முடியலியேடா!

நம்பவேண்டாம். நீயே அவள சோதிச்சுப் பார்த்து தெரிஞ்சுக்க. உன்பேரு மாத்திரம் சந்தேகம்! உன்கிட்டே சந்தேகப்படற குணமே இல்லியே.

இன்னிக்கு வரட்டும், சந்தேகப்பட்டுப் பார்க்கிறேன்.

பாரு! பாரு!

(போகிறான்)

(தனக்குள்) பதிவிரதை மாதிரி பாசாங்கு பண்ணி, என்ன ஏமாத்திட்டாளே பாவிசெருக்கி! வரட்டும் பார்க்கிறேன்.

(உட்காருகிறான். சமயோசிதம் கையில் மூடிய சட்டியுடன் வருதல். சந்தேகம் அவளை ஏற இறங்க உற்றுப்பார்க்கிறான்)

என்ன பாக்கிறீங்க?

சந்தேகப்படறேன், சரியா நில்லு. சண்டாளி! என்ன ஏமாத்திட்டாயே!

என்ன சொல்றீங்க?

என்ன சொல்றுங்க? ஏன் சாப்பாடு கொண்டுவர இவ்வளவு நாழி? பதில் சொல்லு. சந்தேகப்பட்டு கேக்கிறேன்.

அரிசி வேக மாட்டேன்னுட்டுது!

ஏன்? அரிசிக்கு என்ன கோபம்? சந்தேகப்பட்டு கேக்கிறேன், சொல்லடி!

சங்கடமான சந்தேகமாயிருக்கே!

நீ ஒரு ஆம்பளையோட பேசிக்கிட்டு இருந்தியா? சந்தேகப்பட்டு கேக்கிறேன். சொல்லு!

இருந்தேன்.

உம்......அதானே கேட்டேன்! எப்ப பேசிக்கிட்டு இருந்தே?