உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 33
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 33 · 33 / 33

காலையிலே பேசிக்கிட்டு இருந்தேன்.

உம். அவன் பேரு?

சொல்லக்கூடாது!

சொல்லடி கள்ளி!

உங்கபேரை நான் சொல்லலாமா?

அதைக் கேட்கலேடி அரட்டை! வேறு ஒரு ஆம்பளை உனக்கு ஆசைநாயகன் உண்டா? இல்லையா?

ஆம்பளையா? அன்னிய ஆம்பளை முகத்தை நான் பார்த்ததே கிடையாதே...

பசப்பாதே!... சந்தேகப்பட்டு கேக்கிறேன். பட்டுப் பட்டுன்னு பதில் சொல்லு!

உங்களுக்காகவே அல்லும் பகலும் அம்பாள்கிட்டே தவங்கிடக்கிறேன். அதிர்ஷ்டம் வரணும் வரணும்னு வேண்டிக்கிறேன். பாஞ்சாலியம்மா! பாவமான வார்த்தையெல்லாம் என் காதில் விழுதே!

வேஷக்கார நாயே! விபசாரி!

இரண்டு பேரு முகத்தைத் தவிர நான் வேறு முகத்தைப் பார்த்ததில்லியே! ஐயோ தெய்வமே!

இரண்டு பேரு முகமா? ஆ! ஐய்யோ! என் கொலப் பெருமையே போச்சு!

உங்கள் முகம் ஒண்ணு. அம்பாள் முகம் ஒண்ணு.

வேடிக்கையா பேசறே? இதபாரு! உன் சங்கதி எல்லாம் தெரிஞ்சுபோச்சு, உண்மையைச் சொன்னு பிழைச்சுக்குவே. இல்ல, இந்த மரப்பட்டியாலேயே உன் மண்டையைப் பொளந்துடுவேன் (ஓங்குதல்)

ஏ பாஞ்சாலியம்மா! என் புருசன் உண்மையை சொல்லச்சொல்லுறு! நான் பதிவிரதை என்பது உண்மையானால் நான் சமைச்சிவந்த சோறு அரிசியாகவும், குழம்பு பச்ச கோழி உயிராகவும் போகக்கடவது!

(தூக்கி வீசுகிறான். அரிசி கொட்டுகிறது. கோழி பறக்கிறது)

(பெரிய குதிர், கோழி, ஏர், கலப்பை, விரட்டி அடுக்கு. கோழியை வைத்துக்கொண்டு "புறாப் பாட்டு" மெட்டில் கோழியால் தப்பித்ததை சமயோசிதமும், அதிர்ஷ்டமும் பாடிக் கொண்டிருக்கையில், சந்தேகம் கதவைத் தட்டிக் கூப்பிடுகிறான். அதிர்ஷ்டத்தைக் குதிரில் ஒளியவைத்துக் கதவைத் திறக்கிறாள்)

சாவித்திரி!

ஏன் சத்தியவானே?

இந்தக் குதிரை வித்துட்டுப் பெரிய குதிர வாங்கணும்னு சொன்னில்ல!

ஆமாம்!

இதை வில பேசி முடிச்சிட்டேன். வாங்கிறவன் வெளியே நிற்கிறான். இப்ப இதைத் தூக்கியாணும்.

உங்களுக்கு முன்னேயே நான் வேறே ஆளுகிட்டே வித்துப்பிட்டேன். ஓட்டைக்கட்டை இருக்கான்னு உள்ளே இறங்கி பார்த்துக்கிட்டு இருக்காரு! (குதிரிடம்) என்னங்க! இன்னுமா பார்க்கிறீங்க?

இல்லை...பார்த்தாச்சு. (வெளியே வந்து) குதிரு நல்ல வசதியான குதிரு. இது இல்லேன்னு உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே?

ஆமாம்! (அவனிடம் கேட்கிறாள்) வசதி ரொம்பத்தான்! ஆறு ரொம்பச் சின்னது. இதைவிடப் பெரிசா இருந்தாதான் ஒரு ஆளு கஷ்டமில்லாமே உள்ளே இறங்கலாம்

இறங்கக் கஷ்டமே இல்லியே. நான் எத்தனையோ தடவை எறங்கி நெல்லு தள்ளியிருக்கேனே.

நெல்லு தள்ள இறங்கலாம்...

இந்தா பாருங்க! எவ்வளவு தாராளமா இறங்க முடியுதுன்னு!

(இறங்குகிறான். அவன் குதிரில் இறங்கியதும் அதிர்ஷ்டம் சமயோசிதத்தை அணைத்துக் கொள்ளுதல்)

(உள்ளிருந்து) எப்படியிருக்கு பாத்தீங்களா குதிரு, வழ வழன்னு?

(சமயோசிதத்தின் கன்னத்தைத் தடவி) ஆமாம் கண்ணாடிமாதிரி இருக்கு!

(உள்ளிருந்து) இதுக்கு ஒரு குத்தம் சொல்ல முடியாதுங்க.

(அவளை அணைத்தபடி) முடியாது, முடியாது. குத்தம் சொல்றவன் முட்டாள்.

அதிர்ஷ்டமான சாமான். நீங்க எவ்வளவு பணம் கொடுத்தாலும் தகும். மதிப்பில்லாதது; எவ்வளவு சித்தடக்கமா எவ்வளவு லட்சணமா இருக்கு பாத்தீங்களா?

ஆமாம். இந்த லட்சணந்தானே, என் மனசைக் கவருது.

இந்தக் குதிரிலே நெல் எடுக்க எடுக்கக் குறையாதுங்க. இது உங்களப்போல கூட்டாளிகளுக்குக் கட்டாயம் இருக்கணும்.

அதுக்குத்தானே வந்தேன். இது நம்ப வீட்டிலே இருந்தா, அப்புறம் கவலையே இல்லை.

(அவனை நோக்கிச் செல்கிறாள்)

அப்ப; நீங்களே எடுத்துக்கிறீங்களே?

ஆகா, ஆகா! நீங்களே கொடுக்கும்போது.

குதிரு விலையிலே மட்டும் குறைக்காதீங்க.

வில கிடக்குதுங்க, வில! விரும்புன சாமான் கிடைச்சா சரி!

அப்ப தூக்கிக் கொள்ளுங்க!

(அதிர்ஷ்டம் சமயோசிதத்தை தூக்கிக்கொண்டு மெய்மறந்து ஆடுகிறான். இருவரும் ஆனந்தத்தில் இருக்கின்றனர். சந்தேகம் குதிருக்குள் வெளியே தலையை நீட்டுகிறான்)

[முடிவில் சமயோசிதம் குஷ்டரோகி ஆகிறாள். தன் கேவல நடத்தையை நினைத்து வருந்துகிறாள்.......... துறவியான சித்ராவைச் சந்தித்து....... அவள் வழி பின்பற்றுகிறாள்]