உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 31
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 31 · 31 / 33

நான் சாவித்திரி மாதிரி சக்தி அடையற வரைக்கும், இப்படிப் பூசை பண்ணிக்கிட்டுத்தான் இருப்பேன்.

வேணும்னு. நானாவது உன்னை இனிமேல் சாவித்திரின்னு கூப்பிடறேன். இந்தப் பூசையை விட்டுடு!

சரி ஆகட்டும், நீங்க வயலுக்குப் போங்க, நேரமாவது.

எங்கே...என்கிட்டே ஒருதரம் கொஞ்சு! உம்! கொஞ்சடி! கொஞ்சமாட்டியா?

போங்க...என் பிராணநாதா!

ஆருயிரே! ஆலம்பழமே! ஆக! ஆக!! இந்த ஆசை வார்த்தைகளென்ன இந்திரலோகத்துக்கே இட்டுக்கிட்டுப் போகுதே!

உம், போதும்! வயலுக்குப் புறப்படுங்க.

[ஏர் கலப்பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டவன், திரும்பி கோழியைக் கையில் எடுத்து]

சமயோசிதம்! இன்னைக்கு கோழிக்கறி சமையல்! தெரியுமா? சீக்கிரம் சமையலை முடிச்சு வயலுக்கு சாப்பாட்டை எடுத்துக்கிட்டு வா!

பாவம்! ஒரு கோழிதானே மிச்சமிருக்கு!

இருந்தா என்ன? வேறே வாங்கிக்கலாம். சீக்கிரம் வேலையைப்பாரு! (கோழியிடம்) ஏ கோழியே! இன்னைக்கு நீ

சாகப்போகிறாய்! இந்த ஏழந்தம்பதிகள் வயிற்றுக்குள் போகப் போகிறாய்! என் பிராணநாயகியே! வரட்டுமா?

[நிற்கிறான். அவள் பாஞ்சாலியம்மனிடம் பூசை செய்வதுபோல் பாட்டு ஆரம்பிக்கிறாள்]

(தனக்குள்) ஆக! என்ன கற்பு, என்ன கற்பு! பெரிய பெரிய ரிஷிபத்தினியெல்லாம், கற்பு விஷயத்திலே இவகிட்டே பிச்சை வாங்கணும்!

(போகிறான்)

அப்பாடா! தொலைஞ்சது பீடை! இதோட அழுக்கு நான் இதோட கொஞ்சிக்கிட்டே இருக்கணுமாம். நல்லவேளை, இந்தப் பாஞ்சாலியம்மனும், இந்தக் குதிரும் இல்லன்னு...

“நம்ப தப்பிக்கவே முடியாது”

(என்று சொல்லிக்கொண்டே குதிருக்குள்ளிருந்து புறப்படுகிறான் அதிர்ஷ்டம்)

பாவம்! ராத்திரியெல்லாம் ரொம்பக் கஷ்டமா இருந்திருக்குமே?

இல்ல, இல்ல. குளிர்காலம் பாரு, ரொம்ப அடக்கமாயிருந்தது. ஆமாம், உன் புருஷன் ஊருக்குப் போயிருக்கானே, அர்த்தராத்திரியிலே வந்துட்டானே. ஏன் வந்தான்?

என்னை விட்டுத்தான் அவருக்குப் பிரிஞ்சு இருக்கவே முடியாதே. அதான் உடனே ஓடியாந்துட்டாரு.

குதிருக்குள்ளே ஒரு பெருச்சாளி, அது என்கிட்டே காதல் பண்ண வந்துட்டுது... பாரேன். பாதி தலைமயிரைக் கத்திரிச்சுக்கிட்டு போய்ட்டுது!

உங்களாலே எனக்கு எவ்வளவு கஷ்டம் பார்த்தீங்களா?

காதல் பாதை கஷ்டமாகத்தான் இருக்கும். இந்த சிங்காரிக்காக, நான் இந்தச் சிறையிலே கிடந்தேனே, இதை விட ஒரு கஷ்டம் இருக்கா?

ஆம, உங்களைப் பார்த்தோடனே என் கஷ்டமெல்லாம் ஓடிப்போவது.

உன் கஷ்டம் ஓடுது. உன்னைப் பார்த்ததும் என் கஷ்டம் பறக்குது.

நம்ப ரெண்டு பேரும்...

கரும்பும் எறும்பும் போல-இரும்பும் துரும்பும் போல வாழுவோம்.

விஷயம் வெளிச்சமாயிட்டா?

வேற ஊருக்கு ஓடுவோம்.

அதான் முடியாது. என் புருஷன் பொல்லாதவன். வந்து கொலையே பண்ணிடுவான்.

கொல்!... நம்மைக் கொல்லும். நம்முடைய பரிசுத்தமான காதலைக் கொல்லுமா? பிறகு சொர்க்கலோகத்திலே சென்று, நாம் சுகமாக வாழலாம். பயப்படாதே!

அவரும் தற்கொலை பண்ணிக்கிட்டு சொர்க்கலோகம் வந்தா?

வரமுடியாது. கொலைபாதகம் செய்தவன் நரகத்திற்குத்தான் போவான், கள்ளமற்ற காதலராகிய நாம், சொர்க்கத்தில் சொக்கிக் கிடக்கலாம்.

உங்களை ஆசை நாயகராக அடைஞ்ச என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்.

என் பேரே அதிர்ஷ்டந்தானே!

(இருவரும் பாட்டு, மெய்மறந்த நிலை)

(திடுக்கிட்டெழுந்து) ஐயோ! சமைக்கறதுக்கு மறந்துட்டேனே, சூரியன் கூட மேற்கே சாஞ்சுட்டுதே!

இந்த லோகத்திலே பசிவேறையா தெரியுது!

நமக்குத் தெரியலே! வயலில் கிடக்கிற என் புருஷன்...இந்நேரம் துடிச்சுடுவானே!

புருஷன் மேலே அவ்வளவு கவலை இருக்கா?

கவலை ஒண்ணுமில்லே! பயந்தான்! பசி வந்தா அவன் ராட்சசன் மாதிரிதான்! இதுலே வேறே கோழிக்கறி ஆக்கிக்கிட்டு வரச்சொன்னான்.

சரி! இனிமே என்ன செய்யப்போறே? ஒரு மாதிரியா ராத்திரிக்குவந்து சாப்பிடுறேன்.

ஐயோ! கொலை பண்ணிடுவான்! (யோசித்து) உம். ஒரு வேலை செய்றேன்.