உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 30
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 30 · 30 / 33

மக்களாட்சியிலும் மண்டைகர்வம் பிடித்தவர்கள், மமதைக்காரர்கள், அதிகாரங்களை அள்ளி வீசுவார்கள்! மன்னராட்சியே போதும் என்று மக்கள் நினைக்குமளவுக்குக் கொடுமைகளைக் கொட்டும் கோராட்சியாக மக்களாட்சி அமைந்தால்...?

மாற்றி அமைக்கும் அதிகாரம் மக்கள் கையில். அக்கிரமம் செய்பவர் ஆண்டுவேரோடு பிடுங்கி எறியப்படுவார்கள்.

என்ன இருந்தாலும்...

மகுடப் பைத்தியம் உங்களை விடவில்லை. அப்பா! சாகும்வரை நீங்களே மன்னராக இருங்கள்.

அதன் பிறகு நீ...?

நான் மக்களோடு கலந்து வாழப்போகிறேன். மக்களுக்காகத் தொண்டு செய்யப் போகிறேன். மக்களின் மனமயக்கத்தை ஒழிக்கும் வரையில் எனக்கு ஓய்வு கிடையாது.

என் காலத்திற்குப் பிறகு நாடு?

நாசமாகி விடாது. கவலைப்படாதீர்கள். நல்லதொரு மக்களாட்சி மலரும். அந்த மலர்ச்சி கருகிவிடாமலிருக்க...... நான் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துகிறேன்.

மைந்தா! உன் தியாக புத்தி இந்த உலகிற்கே ஒரு உதாரணம்.

(காவலாளி வந்து)

மன்னர் மன்ன! குமரிதேவிக்கு ரொம்ப ஆபத்தாயிருக்கிறது, கூப்பிடருங்க.

ஆ!...

(பரபரப்போடு புறப்படுகிறார்கள்)

(மகாவீரர், வைத்தியர் நிற்கின்றனர். குமரி மார்பில் பெரிய கட்டோடு திணறிக்கொண்டு படுத்திருக்கிறாள். பக்கத்தில் சித்ராவும், பொன்னியும் இருக்கிறார்கள். புத்தன் வருகிறான். ஆதரவோடு அவளை எடுத்து மடியில் கிடத்தி)

குமரி! குமரி!

(கண் விழித்து)

அத்தான்! உங்கள் நெஞ்சில் எனக்கு இடமில்லா விட்டாலும், மடியிலாவது கிடைத்ததே!

இந்நாட்டு தமிழர் இதயமெல்லாம் இடம் பெற்று விட்டாய். குமரி! நீ சாகாதவள். என்னை மன்னித்துவிடு. உன் காதலைக் கொலைசெய்த குற்றம் என்னை விடாது.

இதோ. நான் அனுபவிக்கும் இன்பம், உங்கள் குற்றத்தையெல்லாம் பொசுக்கிவிடும். அணையப்போகும் விளக்கின் பெருஞ்சோதியல்லவா இந்த இன்பம்!

குமரி!

அத்தான்! எங்கே...உங்கள் உள்ளத்தில் நான் இடம் பெற்றேனென்பதற்கு அடையாளம்? ஆசை முத்தம்... ஆம். ஒரு முத்தம்! ஒரே முத்தம்! நான் பிணமாவதற்குள் ...

குமரி! இன்பபுரியின் வரலாற்றில் அழிக்கமுடியாத இடம் பெற்றாய். மக்கள் மனத்தில் மறைக்க முடியாத இடம் பெற்றாய். என் கல்நெஞ்சைக் கரைத்து, என் வாழ்வுக்கே ஒளி தந்த காதல் விளக்காகி, என் ரத்த ஓட்டத்தோடு கலந்து என் இதயப்பெட்டியில் இடம் பெற்றாய். இதோ..... அதன் அடையாளம்........

(முத்தமிடக் குனிவதற்குள், நிமிர் காட்டி)

“ஒரே முத்தம்”

(அதையொட்டி மெதுவாக எழுகிறது. “சமாதி” அதைச் சுற்றி வருகிறார்கள். நிழல் மாறுகிறது. குமரியின் சமாதிக்கு இளவரசனும், பொன்னியும் மாலையிடுதல். இசைப்பாடல்)

தியாகப் பெருவிளக்கே தீந்தமிழ்ப் பெண்ணமுதே!

காதல் சுவைத்தறியாக் கன்னித் திருமகளே!

சாதிமதம் செய்துவிட்ட நீதிப்பிழை மாற்றிடவோ

நல்லுயிரை இழந்தாயே? நானிலத்தை மறந்தாயே?

(பெரிய குதிர். கோழி, விரட்டி, அடுக்கு, ஏர்க் கலப்பை, மண்வெட்டி இருக்கின்றன. பாஞ்சாலியம்மன் சிலைக்குமுன் சமயோசிதம் பாடிக்கொண்டிருக்க, சந்தேகம் வருகிறான்)

சமயோசிதம்! சமயோசிதம்! என்ன சமயோசிதம் எப்பப் பார்த்தாலும் பூசையிலேயே இருக்கிறே? புருஷனோடு பேசரத்துக்கு உனக்குப் பிடிக்கலியா? நாம்ம இளந்தம்பதிகள் சந்தோஷமா இருக்கவேண்டிய நேரத்திலே, சதா பாஞ்சாலியம்மனும் பாட்டுமா இருந்தா, நான் என்னதான் பண்றது?

உங்களோட பேசிக்கிட்டே இருந்தா சரியா போச்சாக்கும்? என் மாங்கல்யத்துக்கு ஒரு கெடுதியும் வராமல் பாதுகாக்கத்தான் பாஞ்சாலி அம்மங்கிட்டே தவங்கிடக்கிறேன்.

என்னடி! மாங்கல்யம்...கொஞ்சம் அழுத்தமான கயிறுபோட்டா ஒரு கெடுதியும் வராம பத்திரமா இருக்கு! இதுக்கா பயப்படறே?

என்னமோ, உங்களுக்குப் பரிகாசமா இருக்கு. திடீர்னு உங்களுக்கு ஏதாச்சும் ஆயிட்டா, நான் மஞ்சளிழந்து பூவிழந்து, மாங்கல்யமிழந்து தவிக்கவேண்டாமா?

சரிதான். சரிதான்! மஞ்சளும், பூவும் போய்விடுமேன்னுதான் சஞ்சலப்படறே; நான் சாவதைப்பத்தி கவலை இல்லே?

ஐயோ! என் காதிலே ஈயத்தை காய்ச்சி ஊத்துறீங்களே! உங்க உயிருக்கு ஆபத்துன்னு என் உயிரு இந்த உடம்பிலே தங்குமா?

வேறே உடம்பிலே பாஞ்சுடுமாக்கும்?

(அம்மனிடம்) பாஞ்சாலியம்மா! என் மாங்கல்யத்தை காப்பாத்தடி அம்மா! திரெளபதியாத்தா! என் புருஷன்தான் எனக்குச் சொத்து. நீ அஞ்சு பேருக்கு ஒரு மாங்கல்யம் போட்டிருந்தே. அழியாத பத்தினி! நான் ஒருத்தருக்கு ஒரு மாங்கல்யம் போட்டிருக்கேன். என் மாங்கல்யத்துக்கு ஒரு கொறவும் வராமல் காப்பாத்தடி.

மாங்கல்யம் மாங்கல்யம்னு உயிரை விடு. என் மனசுக்குச் சந்தோஷமா ஒரு வார்த்தை பேசறியா? காலையிலே எழுந்திருக்கிறேன், கஞ்சியை குடிக்கிறேன் வயலுக்குப் போயி வெய்யிலே காயறேன். அந்திசாஞ்சிவர்றேன். அகப்பட்டதைத் திங்கிறேன். நீ பூசை பண்ண ஆரம்பிச்சுடறே. உன் பாட்டைக் கேட்டுக்கிட்டே தூங்கறேன். அப்புறம் பொழுது விடியறதுதான் தெரியுது. ஒரு நாளைக்கு என்னோடு சிரிச்சுப் பேசி சிங்காரமா விளையாடி சந்தோஷப் படுத்துறியா?

உம்! மழையில்லாம வெடிச்சுப்போய்க் கிடக்கிற வயலும் சரி. என் வாழ்க்கையும் சரி! உனக்குக் கட்டின தாலியை ஒரு மரத்துக் கிளையிலே மாட்டி வைக்கலாம்.

இந்தா பாருங்க, இதெல்லாம் பேசாதீங்க! நான் சாவித்திரி ஆகப்போறேன்.

என்ன! சாவித்திரி ஆகப்போறியா? இதென்னடி வம்பு?

ஆமாம் சத்தியவான் உயிரை, சாவித்திரி யமன் கையிலேருந்து வாங்கினதுமாதிரி, நீங்க செத்துப்போனாலும், உங்க உயிரை யமன்கிட்டேருந்து வாங்கப் போறேன்.

ஆ!...(சந்தோஷம்)

அதுக்காகத்தான், அம்மாகிட்டே தவம்பண்ணி வரம் கேக்கறேன்.

ஏய் சமயோசிதம்! நீ உயிர் வாங்கற வரத்தைப் பரிசோதிச்சுப் பாக்கிறேன்னு, என்னை சாகடிச்சுப் பாத்துடாதே!