உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 24
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 24 · 24 / 33

என்னடா புலிபோலப் பார்க்கிறாய்? புயல்போல மூச்சு விடுகிறாய்?

எரிமலையின் குமுறல்!

எரிமலையைக்கூட வேரோடு பிடுங்கி எறியும் பூகம்பம் நான்!

நீ தத்திக்குத்திக்கும் தவளை. சிங்கநடை போடாதே!

தூண்டுச் சேர்த்துக் கடலில் மிதக்க விடுவேன். நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறிவேன். சதை சதைகளாகக் கிழித்து எடுப்பேன். புத்தா! உன் உயிர் என் கைவிரலில் இருக்கிறது. அளந்து பேசு.

அளந்து பேசுகிறேன். இன்பபுரியின் இளவரசனைத் தூணில் கட்டிவிட்டோமென்ற இறுமாப்பில், வெறியாட்டம் போடுகிறாய்...... விபீஷணா! இதன் விளைவு விபரீதமாயிருக்கும்.

ஜோஸ்யரே! உமது ஜாதகத்தை முதலில் பார்த்துக் கொள்ளும். விளைவாவது, அறுவடையாவது, விபீஷணன் பாதையில் வெற்றியைத் தவிர வேறு எதுவும் கிடையாது. புத்தா! நீ சிறுவன். அரசாங்கம் என்றால் என்னவென்று அறியாதவன். இந்த லட்சணத்தில், நீ துப்பறியக் கிளம்பினாய். பார்! துப்பு கெட்டவனே!

துரோகி! நாக்கை மடக்கு.

மடக்காமல் பேசமுடியுமா? மடக்கித்தான் பேசுகிறேன். மடமையின் சிகரமே! மதிகெட்ட மன்னனுக்குப் பிறந்த மண்டூகமே!

விபீஷணா! நீ ஓணான் குஞ்சு! ஓதிய மிளார். என் உடைய உணர்ச்சி அலைகளையும், தூணில் கட்டிவிட்டதாக எண்ணி உளறுகிறாய். என் உணர்ச்சி வெள்ளத்தின் முன், இந்தத் தூண் ஒரு துரும்பு!

ஓஹோ! விசுவரூபம் எடுப்பீர்களோ? சற்றுப் பொறுங்கள் குட்டி மகாராஜாவே! நீங்கள் எடுக்கிற விசுவரூபத்திற்குத் தகுந்தாற்போல், இந்த மாளிகையை இடித்துக் கட்டுகிறேன். ஒரு வார்த்தை, உங்கள் விசுவரூபத்தின் அகலங்களின் அளவை இப்பொழுதே கூறிவிடுங்கள்.

(ஆவேசத்தோடு) அளவு! உன்னுடைய ரத்தத்தைக் கொட்டிவைக்கும் தொட்டிக்கு அளவெடுத்துக்கொள்! உன் பிணத்திற்குக் கட்டப்படும் பாடைக்கு அளவெடுத்துக்கொள்!

(ஆவேசத்தில், கயிறு தெறிக்கும்படி துள்ளி இளவரசன் வெளிப்படுகிறான். அதற்குள் பல வீரர்கள் அவனைப் பிடித்து, மீண்டும் சங்கிலி முதலியவைகளால் கட்டித் தூணோடு இறுக்கப் பிணித்து விடுகிறார்கள்)

அஹ்ஹ்ஹா! கன்றுக்குட்டி துள்ளி ஓடும், கட்டிப் போட்டால் சும்மா கிடக்கும்.

(பொன்னி விலங்கோடு இழுத்துவரப்படல்)

வாடி... வா!

(பொன்னியைக் கண்டு வியப்பினோடு) பொன்னி!

ஆ!.... (பொன்னி புத்தனிடம் ஓடிவர எத்தனிக்கிறாள். அதற்குள்)

நில்லடி கள்ளி! (தடுக்கிறான் வாளை உருவி)

உன் வாள்!.... கோழைகளைக் தடுக்குமா? நீ வெட்டிப் போடுகிற என் தலையாவது அவர் காலடியில் உருளட்டும். உம். உறையில் போடாதே! நடக்கட்டும்.

முதலில்......இந்த வாயாடியின் வாயைக் கட்டுங்கள்.

(பொன்னியின் வாய் கட்டப்படுதல்)

இவருக்காக, இந்தத் தூண் காத்திருக்கிறது.

விபீஷணா! சாவோடு விளையாடுகிறாய்.

விளையாட்டு சுகமாக முடிந்துவிட்டது. இனி வேலை ஆரம்பம். புத்தா! பூந்தோட்டத்தின் ராஜபிரதிநிதி யாளித்துறை, இங்கு வரப்போகிறார்.

ஏதாவது உளறு.

உளறலாகத்தான் தெரியும். ஊர்ஜிதமற்ற செய்தியை விபீஷணன் சொல்லவேமாட்டான் அதை இப்போது நீயே தெரிந்துகொள்வாய். அதுவும் உன்னைக் காண்பதற்காகவே யாளித்துறை வரப்போகிறார்.

வரட்டும்.

அப்படியானால் இதை எழுது. (மடல் ஒன்றைக் காட்டி எழுதச் சொல்லுகிறான். புத்தன் அதைத் தள்ளிவிடுகிறான்) அழிவை ஆலிங்கனம் செய்யாதே! நான் சொல்வதை எழுது. பாவம்! பருவத்தோடு கூடிய உன் அழகை நான் பாழ்படுத்த விரும்பவில்லை.

என்ன பரிவு! பாம்புக்குக் கரியின் மேல் பிறக்கிற பரிவு! விபீஷணா! ஒரு அடிமையிடம் பேசுகிற வார்த்தைகளே என்னிடம் பேசுகிறாய். ஒரு கோழையிடம் வீரப் பயமுறுத்தல் கூட, என்னிடம் கொட்டுகிறாய். நன்றாக நினைவுபடுத்திக்கொள். இருதயத்தின் கடைசி துடிப்புள்ள வரையில்...... உன் அதிகாரத்திற்கு புத்தன் அடிபணியமாட்டான்.

அதையும் பார்க்கிறேன். (விபீஷணன் வாளை உருவிப் பொன்னியின் மேல் வீசுந்தோரணையில் நின்றுகொண்டு) இப்பொழுது சொல். பொன்னியின் உயிரைப் பந்தயமாகக் காட்டிச் சொல்! என் அதிகாரமா? உன் பிடிவாதமா?

வேண்டாம்! வேண்டாம்!

உம்... எழுது. (எழுதும் மடல், புத்தன் வாங்குகிறான்)

அன்புள்ள யாளித்துறைக்கு......

உம். சீக்கிரம் எழுது. (புத்தன் எழுதுகிறான்)

புத்தன் எழுதிய அவசர அழைப்பு. இம் மடல் கண்டதும், இமைக்கொட்டும் நேரங்கூடத் தாமதியாமல், வரும் வீரரோடு வந்து சேரவும். சில முக்கியமான ஏற்பாடுகள் உடன் செய்யப்பட வேண்டியிருக்கின்றன.

உம்... கையெழுத்துப் போடு.

இந்த ஓலை எதற்காக?

உன் நன்மைக்குத்தான்.

என் நன்மைக்கா?

பேசாதே! வாள் முன் கட்டளை இருக்கிறது. அதற்கு வணங்கு.

வணங்காவிட்டால்?

பொன்னி வானுலகம் செல்வாள்.

(வாளை உருவி அவள் பக்கம் நீட்டவே)

நிறுத்து! நிறுத்து.