ஒரே முத்தம்
காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 23 · 23 / 33
என் மாணிக்கம் அம்மா, என் மாணிக்கம்.
பாவம். கவலைப்படாதீர். பொன்னிக்கு எந்த ஆபத்தும் வராது. பெரியவரே! இவரை உமக்கு முன்னமேயே தெரியுமா?
இவரால் வந்த வினைதானம்மா இது. இவர்தான் என்மகளை மயக்கி, கடைசியிலே விபசாரிப் பட்டம் வாங்கிக் கொடுத்தாரு. விபசாரி! விபசாரி! பொன்னி நம்ம வம்சத்திலேயே இல்லாத பட்டம். என் கண்ணே! நீ விபசாரியா? உலகமே! நீ சொல்! பாரபட்சமற்ற ஏ சூரியனே! நீ சொல். காற்றே! நீ சொல். என் மகள் விபசாரியா? ஏழையென்று பெயருண்டு, அடிமை என்று பெயருண்டு, முட்டாள் என்று பெயருண்டு, இந்தப் பரம்பரையில், விபசாரி என்று பெயர் கிடையாதே! அய்யோ!
அடிவயிறு எரிகிறதே! அய்யோ!......
அழாதீர்! ஆத்திரத்துக்கு முடிவு உண்டு. அந்த முடிவைக் காண்பதற்காகத்தான் நாங்கள் புறப்பட்டிருக்கிறோம். அய்யா! பொன்னியை இவர் மணந்துகொள்வதாகச் சொல்லிவிட்டாரா?
அம்மா! நாங்களோ தாழ்ந்த சாதி. இவரோ ராஜ குடும்பம். இரண்டும் ஒத்துவராதுன்னு பொன்னிக்கு எவ்வளவோ உதாரணம் சொன்னேன்; அவள் ஊ...கும்.. கேட்கவேயில்லை. கடைசியில்......
இளவரசர் பொன்னியைக் கைவிடமாட்டார். பயப்படாதீர்.
நான் செத்தாலும் கவலையில்லை. என் மகள் மன இச்சை சாக அடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்களம்மா.
உம், படுத்துக்கொள்ளுங்கள்
(படுக்க வைத்து சிகிச்சை செய்தல்)
இளவரசுக்கு நீங்க......?
தங்கை!
(குமரி பெருமூச்சு விடுகிறாள்)
[விபீஷணன் புத்தனை வரவேற்கிறான்]
இளவரசே! உங்களை இப்படியா வரவேற்பது? தாங்கள் வருவதாக இருந்தால் ... தங்கத் தட்டில் வைரக் கற்களால் வரவேற்புப் பத்திரம் எழுதி, இரதகஜதுரகபதாதிகள் அணிவகுத்து நிற்க, ஆட்டங்கள் சூழ, அதிர்வேடிகள் முழங்க, எவ்வளவு ஆடம்பரமாக வரவேற்பேன்!
ஆடம்பரம், எனக்கு அடியோடு பிடிப்பதில்லை.
ஆடம்பரத்தில்தானே உலகம் ஆடுகிறது!
ஆடுகிறது என்று சொல்லாதீர். ஆட்டங்கொடுத்திருக்கிறது என்று சொல்லும்.
அதென்னமோ! அரசகுமாரரை ஆடம்பரமாக வரவேற்காவிட்டால், என் அதிகாரத்திற்கே பெருமையில்லை.
உமது அதிகாரத்தில், பெண்கள்கூடச் சிறை செல்கிறார்களாமே?
ஆம். சட்டத்தைச் சரியானபடி பிரயோகிக்கிறேன். குற்றவாளிகளுக்குச் சண்டமாருத வேகத்தில் நீதி வழங்குகிறேன். ஆண் என்றும், பெண் என்றும் பார்ப்பதில்லை.
போகிறது. ஆண் பெண் சமத்துவத்தை இப்படி யாவது நிலைநாட்டுகிறீரே! சரியான ஆட்சி! நீதி முறை தெரிந்த சமதர்ம ஆட்சி.
நாட்டில் கொலை, களவு, பொய், சூழ்ச்சி எந்தப் பிரச்சனை தலை எடுப்பதில்லை ஒரே அமைதி நிலவுகிறது.
சரிதான்.
இன்னுகடை ஒரு விபசாரியைப் பாதாளச் சிறையில் போட்டிருக்கிறேன்.
விபசாரியா?
ஆம், வேசி. உயர்ந்த குடும்பத்து உதாரப் பையன்களோடு, விபசாரம் நடத்துபவள்.
விபசாரி! விபத்தைவிடக் கொடியது. ஆமாம், அவள் விபசாரி என்பது நன்றாகத் தெரியுமா?
சந்தேகம் வேறு?
ஆலோசித்து எதையும் செய்வதுதான் ஆட்சி முறை! அவள் விபசாரி என்பதற்கு என்ன ஆதாரம்?
அவள் முகமே சொல்லுகிறதே!
(விபீஷணன் சிப்பாய்களுக்கு ஜாடை காட்டவே — அவர்கள் புத்தனுக்குப் பின் மறைந்து நெருங்குதல்)
முகக் குறிப்பில் குற்றவாளியைக் கண்டு பிடிக்கிறீர். ரேகை சாஸ்திரம் படித்திருக்கிறீரோ?
ஆமாம். முகத்தில் காணப்படும் சுருக்கங்கள், அவள் வாழ்வின் அமைப்பைக் காட்டும் ரேகைகள். உதாரணமாக, முகத்தைப் பார்த்ததுமே இது கிழம், இது வாலிபம், என்று
சொல்லுகிறோம் அல்லவா? இளவரசர் இளைஞர். உலகப் படிப்பு போதாது.
(மறைந்து வருபவரில் ஒருவன், இளவரசனின் வாளை விபீஷணனுக்குச் சுட்டிக் காட்டுதல்)
இதைப் பாருங்கள் (புத்தன் உறையிலிருந்து வாளை எடுத்து) பார்க்கும்போதே இந்த வாளின் பள பளப்பிலிருந்து இதன் கூர்மை தெரிகிறது.
(புத்தன் நிராயுதபாணியாகக் கை செய்யப்படுதல்)
எப்படி ரேகை சாஸ்திர விளக்கம்?
விபீஷணா?
ஏண்டா கும்பகர்ணா! எலியே! என் பொறியில் இருக்கிறாய். கத்தாதே! உம். இளவரசர் அவர்களோ வேண்டுமென்று ஒரு வழக்கை சிருஷ்டித்து, என்னை மேற்பதவிக்கு உயர்த்தினீர்களே, அந்த நன்றியை இந்த நாய் மறக்குமா?
விபீஷணா! எரிமலையின் மேல் விளையாடுகிறாய்?
விளையாட்டா? இது விளையாட்டா? ஆஹ்ஹ்ஹா! விலங்கு இளவரசே! விலங்கு!
(ஒருவன் விலங்கு மாட்டப் போகிறான்)
விலங்கை மாட்டாதே! இன்னும் வேலை இருக்கிறது அந்த வேசியை இழுத்து வாருங்கள். (ஒருவன் போகிறான்) இவனை இந்தத் தூணில் கட்டுங்கள். (இளவரசன் கட்டப்படுதல்)
