உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 22
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 22 · 22 / 33

கிண்டல்வேண்டாம். தண்டனை நடைபெறட்டும்.

நீ தங்கக் கொடி! தண்டனையால் வாட விடமாட்டேன்.

ஆ!.....

பொன்னி! உன்னை மன்னித்துவிட்டேன். ஒரு வார்த்தை சொல். எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன்.

முதலில் இந்த எண்ணத்தை மறந்துவிடும்.

நீ வேசியல்ல 'வைரச்சிலை!' போதுமா? பொன்னி, "நாதா!" என்று ஒரு அன்புச் சொல்லை உன் பொன்னுதரங்களால் சிந்தினால் போதும், பூரித்துப் போவேன். புளகாங்கிதமடைவேன். பிறகு உன்னைக் குடிசையில் வாழவிடமாட்டேன். கூடகோபுரங்களில் வாழலாம். அந்த மண் வீட்டை இடித்தெறிவேன். மாடமாளிகைகளில் உலாவலாம். ஏன்? உன்னை மகாராணி யாக்கிவிடுவேன்!

கனவு காண்கிறீர். காமவெள்ளத்தில் கருத்திழந்து உளறுகிறீர். கையில் சிக்கிவிட்டேன் என்பதற்காகக் கண்ணை மூடிக்கொண்டு பேசாதீர்.

பொன்னி! உன் உயிர் என் கையில்!

மானம் பெரிது உயிரல்ல! நான் தமிழச்சி!

நானும் தமிழன்தான்.

நீ.... தமிழினத்தில்.... விபீஷணன்!

மரியாதை கெட்டுப் பேசுகிறாய், மடநாயே! மானம் பெரிதாம். மானம்! எது பெரிது என்பதை இப்போது காட்டுகிறேன்.

[உள்ளே சென்று மலையனை இழுத்து வருகிறான். வரும்போதே]

பூச்சாண்டி காட்டாதீர். பொன்னியை எமன் வாயில் ஒப்படைப்பேன். உமக்கு மனைவியாக்கமாட்டேன்.

வலியவரும் அதிர்ஷ்டத்தை, வேண்டாமென்று தள்ளுகிறாய், மலையா! யோசித்துப்பார்.

யோசிப்பதென்ன! இதுதான் முடிவு.

என்னுடைய முடிவு, கடுமையாக இருக்கும்.

எந்த முடிவையும் வரவேற்கச் சித்தமாக இருக்கிறோம்.

உன் கண் முன்னேயே பொன்னியைக் கண்ட துண்டமாக்க எனக்கு அதிகாரமிருக்கிறது.

அவளைக் கண்டதுண்டமாக்கலாம். அவள் கற்பைக் களங்கப்படுத்தக் கடவுளுக்குக்கூட அதிகாரமில்லை.

அதிகாரம்! அது யாருக்கு இருக்கிறதென்பதைப் பார்.

(விபீஷணன் ஜாடை காட்ட. சிப்பாய்கள் மலையனை அடிக்கிறார்கள். பொன்னி அலறுகிறாள்)

அப்பாவுக்கும் விடுதலை, உனக்கும் விடுதலை. பொன்னி! ஒருவார்த்தை மட்டும் சொல்லிவிடு.

நாங்கள் இருவருமே சம்மதிக்கிறோம்.

(மகிழ்வுடன்) அப்படியா?

உலக விடுதலைக்கு நாங்கள் தயார். உன் கொடுவாளால் எங்களைக் கொன்று குவித்துவிடு. எங்கள் உடல்களைக் துண்டுகளாகக் கிழித்துத் தணலில் போட்டுவிடு. உன் அதிகார வெறியில் என்னென்ன அக்கிரமம் செய்ய முடியுமோ; அதையெல்லாம் செய்துவிடு.

அதைத்தான் செய்கிறேன். உம்..! நடக்கட்டும்.

(மலையன் தாக்கப்படவே, பொன்னி மூர்ச்சித்தல்)

இவளைப் பாதாளச் சிறையில் தள்ளுங்கள். (மலையன் நோக்கி) இது நடந்துகொண்டே இருக்கட்டும்.

(மீண்டும் அடிகள், மண்டை பிய்ந்து விடுகிறது. பைத்தியம்போல் ஆகிறான்)

அடித்துத் துரத்துங்கள்; எங்கேயாவது ஓடிச் சாகட்டும் நாய்!

(மலையன் ஓடுகிறான். அடி தாங்காமல்)

(புத்தன் ஆத்திரமாக அமர்ந்திருக்கிறான். குமரி, சோகமாக இருக்கிறாள்)

(ஓடி வந்துகொண்டே) பொன்னி! பொன்னி!

ஆ! பொன்னிக்கு என்ன ஆயிற்று?

பொன்னி போய்விட்டாள்! பொன்னி போய் விட்டாள்!

எங்கே போய்விட்டாள்?

விபீஷணன் சிறையில், நீங்கதான் முன்னே அவளைக் காப்பாத்தினீங்க. இப்ப காப்பாத்துங்க, கடவுளே! என் குல விளக்கு அணைஞ்சு போகாமல் காப்பாத்துங்க! (சாய்கிறான்)

பொன்னி இருக்குமிடம்?

புலியின் வாயில்! அந்தப் பொல்லாத விபீஷணன் கையில் என் பொன்னி அகப்பட்டுக் கொண்டாள்.

(திகைக்கும் குமரியிடம்) குமரி! இவரைப் பார்த்துக்கொள். நான் வருகிறேன்.

(புத்தன் செல்ல, குமரி மலையனைத் தூக்கிப்படுக்க வைத்தல்)

பொன்னி! பொன்னி!

அப்பா! பொன்னி உங்கள் மகள்தானே?