ஒரே முத்தம்
காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 25 · 25 / 33
உம் வா வழிக்கு! போடு கையெழுத்தை.
(புத்தன் கையொப்பமிட்டு. அதை ஒரு சிப்பாயிடம் கொடுத்து)
ஏ, முருங்கை! மூன்று நாளிகை நேரத்தில் பூந்தோட்டத் தலைநகர் சென்று, அடுத்த மூன்று நாளிகையில் யாளித்துறை திரும்பி வரவேண்டும். (சிப்பாய் செல்லவே) இவர்கள் அதுவரையில் தூணோடு இருக்கட்டும். இளவரசர் பேசிப் பேசி வாய் வலிக்கிறதாம். அவர் வாயையும் கட்டிவையுங்கள்.
(புத்தன் வாயும் கட்டப்படுகிறது. விபீஷணன் கேலியாக இருவரையும் பார்க்கிறான். ஒரு சிப்பாய் வந்து வணங்கி)
வரி கொடுக்கமாட்டேன்னு புரட்சி செய்தவர்கள் சிலர் வந்திருக்கிறார்கள்.
அந்த வம்பாள்களுக்கு வைகுந்தப் பிரயாணச் சீட்டு வேண்டுமாக்கும்?
நம் வசூல் அதிகாரியின் வயிற்றைக் கிழித்தவனைக் கூட இழுத்து வந்திருக்கிறோம்.
அந்த நாய்களின் நாக்கைக் கிழிக்கவேண்டும். நானே வருகிறேன்.
(வேகமாகப் போகிறான்)
(ஒரு கைகாட்டி மரம். ஒரு புறத்தில் `இன்பபுரிக்கு` என்று எழுத்துக்கள். மறுபுறத்தில் `விபீஷணர் மாளிகைக்கு` என்று எழுத்துக்கள். குமரி இதைப் பார்த்து யோசித்தபடி நிற்கிறாள். பிறகு விபீஷணர் மாளிகைக்கு என்ற வழியில் நடக்கிறாள். நிகைத்து நின்று)
(தனக்குள்) இளவரசரை விடுவிப்பது என் கடமை. பொன்னியைப்பற்றி எனக்கு எதற்காகக் கவலை? பொன்னி
என் ஆசையில் விழுந்த இடி! என் இன்ப வாழ்க்கைக்கு முட்டுக் கட்டை. அவளை விடுவிக்காவிட்டால், இளவரசரின் நெஞ்சம் எனக்குச் சொந்தம். இளவரசரை விடுவிக்கும்போது, அவளும் விடுதலையானால்? சரி, இன்பபுரிக்கே செல்கிறேன். இளவரசரை மகாராஜாவே காப்பாற்றட்டும்.
(திரும்பி இன்பபுரி வழியில் நடக்கிறாள்)
(குமரி விபீஷணர் மாளிகை வழியில் செல்கிறாள்)
(பொன்னி. புத்தன் கட்டப்பட்டிருக்கிறார்கள். விபீஷணன் நின்று கொண்டிருக்கிறான். சில சிப்பாய்களால், யாளித்தத்தர் அழைத்து வரப்படுகிறார்)
யாளித்தத்தரே! வருக, வருக.
(புத்தனைக் கண்டதும்) ஆ! இளவரசே! யார் செய்த அநியாயம் இது? விபீஷணரே! என்ன விபரீதம்?
பொறும். பொறுத்தார் பூமி ஆள்வார். நான் கூட்டப்பொறுத்திருந்தேன். இப்பொழுது பூமி ஆளப்போகிறேன்.
பேச்சைக் கேட்க நேரமில்லை (வாளை உருவுதல். சிப்பாய்கள் யாளித்தத்தரை வளைத்துப் பிடித்தல்)
எனக்கும் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை. உம். சீக்கிரம்! (யாளித்தத்தர் தூணில் கட்டப்படல். விபீஷணன் ஒரு மடலை எடுத்து யாளித்தத்தரிடம் நீட்டி) யாளித்தத்தரே! நான் சொல்லிக்கொண்டேயிருப்பேன். நீர் எழுதிக்கொண்டேயிருக்க வேண்டும்.
ஏலி, புலிக்கு ஆணையிடுகிறது. ராஜத் துரோகி! உன் வார்த்தையைக் கேட்டு என் விரல்கூட அசையாது.
உன் ஆத்மாவையே அசைக்கிறேன் பார் (சிப்பாய்களிடம்) ஏய்! ஆளுக்கொரு வில் எடுங்கள். உம், என்றதும் புத்தன் தலை உருளவேண்டும். (வாளை உருவியபடி புத்தன் தலைக்கு நேராக நீட்டிக்கொண்டு சிப்பாய்கள் நிற்கின்றனர்) என்ன யாளித்தத்தரே! இப்பொழுது என்ன சொல்லுகிறீர்? இளவரசரின் உயிர் என் உதடுகளின் அசைவில் இருக்கிறது. சொல்
லப் போனால் என்னுடைய பிடிவாதம். இவனுடைய உயிரைப் பறக்கடித்துவிடும். சீக்கிரம் எழுது. அல்லது புத்தன் உயிரைப் போக்க சம்மதம் கூறு!
(திகைத்து) விபீஷண! நீதியின் பெயரால் கேட்கிறேன்; இது நேர்மையா?
எதன் பெயரால் கேட்டாலும் சரி! என் மனதுக்குப் பட்டதை நான் செய்கிறேன்.
மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம்.
அறிவுரை கேட்க உத்தேசமில்லை. இது அவசரமான நேரம். என் ஆணையை நிறைவேற்று. உம், எழுது!
என்ன எழுது?
சொல்கிறேன்.
இன்பபுரி சாம்ராஜ்ய இளவரசர் அவர்களுக்கு, நிறை வாழ்த்து...
எழுது. (எழுதுகிறார்)
தங்கள் மடல் கிடைத்தது, மகிழ்ந்தேன். மகாராஜா மகாவீரைக் கவிழ்ப்பதென்றால், அவரைக் கொன்றுதான் ஆகவேண்டும்.
[யாளித்தத்தர் எழுதாமல் திகைக்கிறார்]
உம். (சிப்பாய்கள் புத்தனுக்கு மேல் வாளை ஓங்கவே, யாளித்தத்தர் எழுத)
அது பயங்கரமான வேலை. ஆனாலும், பக்குவமாகச் செய்துவிடலாம். பதார்த்தங்
களில் விஷத்தைக் கலந்து, காரியத்தை முடித்துவிட்டால் ..
ஆ!
உம். வாயைத் திறக்காதே.
இன்பபுரியின் மகாராஜா நீங்கள், பொன்னியின் நிபந்தனையும் நிறைவேறும். பகிரங்கமாக எதுவும் செய்யக்கூடாது. அது நமக்கே ஆபத்து. நம் சூழ்ச்சியில் தலையிடும் விபீஷணனையும், வேலை முடிக்க வேண்டும். தாங்கள் நேரில் வரக்கூடாது. இன்பபுரியின் மந்திரி வேலை எனக்கு என்பதை மறந்து விடாதீர்கள்.
வணக்கம், யாளித்தத்தர்.
உம். தயங்காதே! அங்கே தலை போய்விடும்.
ஏ! மனசாட்சியே! நீ மறைந்துவிட்டாய். ஏ! நெஞ்சத் துடிப்புகளே! நீங்கள் தயவுசெய்து நின்று விடக்கூடாதா?
[இளவரசன் கையிலளித்து]
புத்தா! நீ எழுது! பொன்னியின் உயிரில் உனக்கு ஆசையிருந்தால் எழுது!
