உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 15
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 15 · 15 / 33

அதற்கு இளவரசரா வரவேண்டும்? ஓலை அனுப்பினால் ஓடி வருகிறேன்.

ராஜப் பிரதிநிதி இமயாவை அப்படி அலட்சியமாகவா அழைப்பது?

உம்...... ஆஹா! என் பாக்கியமே பாக்கியம்.

நீரே தேடிக்கொண்ட பாக்கியம். கையை நீட்டும்.

(சிப்பாயை ஜாடை காட்ட, விலங்கு கண்ட இமயா)

ஆ! என்ன?

இளவரசர் விளையாடுகிறீர்!

ஆமாம். இதுகூட உம்முடைய விளையாட்டுப் பொம்மைதான்! மாட்டுங்கள், அவருக்கும் நடக்கட்டும். உங்கள் இருவரையும் கைது செய்திருக்கிறேன்.

இருவரையுமா?

இருவரையுமா? விபீஷணன் மட்டுந்தான் குற்றவாளி.

(இமயாவை முறைத்துவிட்டு) இளவரசே! இதென்ன நாடகம்?

நாடகமல்ல நடிகரே! இது விபீஷண புராணம் சிறப்புப் படலம்.

கேலி வேண்டாம். கேள்விக்குப் பதில்.

பதில்! உங்கள் பயங்கர ஆட்சியில் படுகொலைக்கு ஆளான பட்டாளிகளின் பிணங்கள் சொல்லும்! பால் கொடுக்கும் தாய் மாண்டுகிடக்க, பக்கத்தில் அழுது அழுது பிராணனை விட்ட பச்சைக் குழந்தைகளின் பரிதாப முகங்கள் சொல்லும்! பதவி மோகம் தலைக்கேறி ஊராள யோக்கியதையற்ற நீங்கள், பாராளத் திட்டம் போட்டு அதற்கென குவித்திருக்கும் சதிக் கடிதங்கள் சொல்லும்!

நல்ல கற்பனைகள். நாட்டில் நடக்காத கற்பனைகள். இளவரசே! வீண் பழிகளை வாரி இறைக்காதீர், ஆண்டவனுக்கு அடுக்காத அக்கிரம வார்த்தைகள் அள்ளிவீசாதீர்.

ஆண்டவன்—உன் அக்கிரமத்துக்கு அந்தத் திரையைப் போடாதே! கிழிந்துபோன திரை, அப்பாவி இமயாவுக்கு ஆசைகாட்டி அரசியல் பொம்மலாட்டம் ஆட்டியது போதும்.

இளவரசே! எல்லாம் இவர் ஏற்பாடுதான், எனக்கொன்றும் தெரியாது.

உஸ் .... கோழையே! பேசாதீர்.

பேசவில்லை.

பச்சைக் குழந்தைகளாம், பட்டாளிகளாம், பரிதாபமாம், சதியாம், வேலையாம்! புதுப்புது வேடங்கள் இந்த நிரபராதிகளிடத்தில்.

நிரபராதிகள்! பச்சை ருசி பார்த்த வேங்கை, ரத்த நாக்கோடு வேதாந்தம் பேசுகிறது! விபீஷணரே! வரி கொடுக்காதவரை வாழ விடாதே என்று ஆணையிட்ட நீர் நிரபராதி!

குற்றவாளி என்பதற்கு என்ன ஆதாரம்?

ஆதாரமா? அதை விசாரணைமண்டபத்தில் அளிக்கிறேன். உம் ..... கொண்டுபோங்கள்!

(வீரர்கள் இழுத்துச் செல்ல)

(குமரியிடம்) குமரி! நீங்கள் முன்னே செல்லுங்கள். நான் பிறகு வருகிறேன்.

தனியாகவா?

ஆமாம்.

(போகின்றனர்)

(பொன்னியைத் தேடிக்கொண்டு புத்தன் வருகிறான். புத்தன் நினைவில் பொன்னியும் வருகிறாள். ஒருவரையொருவர் கவனிக்கவில்லை. பொன்னி முதல்நாள் புத்தன் நின்ற இடத்தில் நின்று பெருமூச்சு விடுகிறாள். எதிர்பாராமல் இருவரும் பார்த்துத் தங்கள் செய்கைக்கு நாணமடைகிறார்கள்)

பொன்னி!

எங்கே இவ்வளவு தூரம்?

இல்லை. ஒரு கனவு அதில் கலந்து ஓடிவந்தேன்.

கனவா!

ஆம். உன்னை மீண்டும் அந்தக் குண்டர்கள் தூக்கிச் செல்வது போலவும், நீ என்னை அழைப்பது போலவும் பயங்கரமான காட்சி!

அய்யோ! கனவு பலித்துவிட்டது. அதோ மறுபடியும் அவர்கள்!

(பதறி) எங்கே?

அதோ மறைந்து மறைந்து வருகிறார்கள். (புதரைக்காட்டுகிறாள். புத்தன் புதரிடம் ஓடுகிறான். பொன்னி அவனை ஏமாற்றியதற்காகச் சிரிக்கிறாள். ஏமாற்றமடைந்து அங்கிருந்தபடியே)

பொன்னி! உன் விளையாட்டு வீணாகிவிட்டது. இதோ ஈட்டியால் என் மார்பைக்குறிவைக்கிறேன். அசைந்தால் கொன்றுவிடுவதாக ஜாடை காட்டுகிறேன்.

ஆ! ஓடி வாருங்கள். (தவிக்கிறாள்)

ஓடுவதா? பொன்னி! மார்பில் ஈட்டி தாங்கி மடிவேன். புறமுதுகு காட்டமாட்டேன்—(புதரை நோக்கி) உம்.... குத்து, ஏன் பயமுறுத்துகிறாய்? உன் ஈட்டி என் இதயத்தைப் பிளக்கும், அவ்வளவுதானே! உம்...... விட்டெறி. வீரனாகச் சாகிறேன். (திடுக்கிட்ட பொன்னி, அய்யோ என அலறி ஓடிவந்து புத்தனைப் பிடித்துக்கொள்ளவே, புத்தன் இடி இடியெனச் சிரிக்கிறான்)

ஒரு பொய், மூன்று பொய்யாக முளைத்துவிட்டது!

முதல் பொய் எது?

நான் கனவு கண்டேனே அது!

உங்கள் வார்த்தைகள் எல்லாமே இப்படித்தானா?

விளையாட்டு வேளையில் மட்டும். பொன்னி! உண்மையாகவே அவர்கள் என்னை ஈட்டியால் குத்தியிருந்தால்....?