ஒரே முத்தம்
காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 16 · 16 / 33
அந்த ஈட்டியில் இரத்தம் காய்வதற்குள், அது என் மார்பில் பாய்ந்துவிடும்!
நான் சாவதில் உனக்கேன் பொன்னி கவலை?
என்னை அவர்கள் தூக்கிச் செல்வதில் உங்களுக்கேன் கவலை?
கண்ணே இமைகள் காப்பது இயற்கை;
இமையில் பாயும் ஈட்டி, கண்ணில் பாய்வதும் இயற்கை.
[காதல் கீதம்]
பொன்னி ....
பொன்னி! நம்மை யாரும் எப்பொழுதும் பிரிக்க முடியாதல்லவா?
முடியும். நம்மைப் பிரிப்பதற்கு ஒரு பயங்கரமான கருவி இருக்கிறது.
கருவியா?
ஆம், அது என் உயிரையே உலகத்திலிருந்து பிரித்துவிடும்.
எது பொன்னி! அவ்வளவு பயங்கரமான கருவி?
உங்கள் மறதி,
மறதி, மானிலத்தில் பகல் வர மறந்துவிட்டால், மாவீரன் வாளை எடுத்துப்போக மறந்துவிட்டால், மல்லிகை மணம் வீச மறந்துவிட்டால், பொன்னியைப் புத்தன் மறந்து விடுவான்!
அன்பா! என்னைப் பிரியவே மாட்டீர்களே?
பிரிவதா மணியை விட்டு ஒலி பிரியுமா? ஆனால் இப்பொழுது மட்டும் ஒரு அவசர வேலை.
ஆரம்பித்து விட்டீர்களே!
இல்லை. போனதும் திரும்பிவிடுவேன்.
அப்படி என்ன அவசரம்?
அரசாங்க சமாச்சாரம்.
அரசாங்கமா! நீங்கள்....?
அரசகுமாரன்.
அரசகுமாரர்! (தனக்குள்) ஆபத்தான காதல். ஆழம் தெரியாது கால் வைத்துவிட்டேன் அரசகுமார்.....
(கலங்கி) பொன்னி! அரசகுமாரன் என்றால் ஏன் அவ்வளவு அருவருப்பு?
இல்லை. என் காதல், காலப்பனிபோல் கலைந்து விடுமோ என்று கலங்குகிறேன்.
அரசகுமாரன் என்றால் அவனுக்குக் காதலிக்கத் தெரியாது. இது அம்மையார் அபிப்பிராயம், அவ்வளவுதானே?
காதலிக்கிற அளவுக்குக் கைவிடவும் தெரியும்.
அப்படிக் கதைகள் கேட்டிருப்பாய் பொன்னி! காலமெல்லாம் கரைபுரண்டு வந்தாலும், நம் காதல் அணையைக் கரைக்க முடியாது.
அணையில் அந்தஸ்து என்னும் பிளவு ஏற்பட்டால்?
தியாகத்தால் அடைத்துவிடலாம். காதலுக்காகச் செய்யும் தியாகத்தில், காதலர் வேண்டுமானால் சாவார்கள். காதல் சாகாது. பொன்னி! நாம் வீணையும் நாதமும்.
அன்பெனும் தந்தி அறுந்துவிட்டதே அன்பா?
தடாகத்து நீரும், அதன் தெளிந்த அமைதியும் போல வாழலாம்.
காலம் அதில் கல்லை வீசிவிட்டதே கண்ணா?
இந்தா, இந்தக் கணையாழி நம் காதலின் அறிகுறி. மலைகள் உருண்டுவந்து எதிர்த்தாலும் நிலைகுலையாது நம் காதல். என் மகுடத்தின் மேல் ஆணை. (கணையாழியை விரலில் மாட்டுகிறான்.)
சகுந்தலை கதையாகிவிட்டதே?
நான் என்ன துஷ்யந்தன்போல குருடனா? அல்
லது துரோகியா? கணையாழி காணாமற் போனாலும், நீ என் காதலிதான். நான் வருகிறேன் பொன்னி!
[பொன்னியின் சேலைத் தலைப்பில் புத்தன் பிரிகிறான்]
(குற்றவாளிக் கூண்டில் இமயாவும், விபீஷணனும்)
வரி அளவுக்கு மீறி வசூல் செய்ததாக ஒரு குற்றம். அப்பாவி மக்களைப் படுகொலை செய்ததாக ஒரு குற்றம். அரசரைக் கவிழ்க்கச் சதி செய்ததாக ஒரு குற்றம். மூன்று குற்றங்களுக்கும் நான் பொறுப்பாளியல்ல.
ஆம். இதுவரையில் உமது கொடுமைகளை மறக்காமலிருந்த நாங்கள் பொறுப்பாளிகள்?
இமயா சொல்லட்டும். இந்த அக்கிரமங்கள் நடந்தது உண்மைதானே?
இதையெல்லாம் அக்கிரமம் என்று இவர் (விபீஷணனைக் காட்டி) சொல்லவில்லை மகாராஜா!
ஆம். அதர்மம் என்று சொன்னேன்.
