ஒரே முத்தம்
காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 14 · 14 / 33
அவனுக்கு இளையவன்?
விபீஷணன்!
அவனைச் சிலர் வெறுக்கிறார்களே, காரணம்?
அண்ணனைக் காட்டிக்கொடுத்தானாம்.
இல்லை அதைவிட மேலான, அருமையான நாட்டைக் காட்டிக்கொடுத்தானாம்.
சித்ரா! பீடிகை பலமாக இருக்கிறதே!
அன்பா! உங்கள் வாழ்வில் வளவு ஏற்பட்டால் என் வாழ்வு வாடிவிடுமல்லவா?
நல்ல கேள்வி. நல்ல பதில். சித்ரா! சொல்ல வந்ததைச் சுருக்கமாகச் சொல்.
இனிமேலாவது......
மேலாவது, கீழாவது?
துரோகம் பாவமல்லவா?
உம்..... வேதாந்த விசாரணை! பிறகு?
பயங்கரமான இந்தச் சதிவேலை நமக்கே ஆபத்தாக முடிந்துவிட்டால்?
சதிவேலை—சித்ரா! சிம்மாசனத்திற்காகப் படை யெடுப்பதும்—ஆளும் அரசனை மாளச் செய்வதும் சதியல்ல; சரியான ராஜதந்திரம். நான் செய்வது சரி. அன்று சந்நியாசிகளாகத் திரிந்து பாண்டவர்கள் கெளரவர்களின் நாட்டைக் கைப்பற்றியதற்கு என்ன பெயர்?
அது அவர்களுக்குச் சொந்தமான நாடு.
சூதில் தோற்றபிறகு சொந்தங் கொண்டாடுவது சரியான சூதாட்டம். சித்ரா! உன் வாதப்படியே பார்த்தாலும் இந்த நாடு எல்லோருக்கும் சொந்தம். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் மகாவீரனுக்கு மட்டும் மகாராஜப் பட்டம் ஏன்?
நீங்கள் விரும்புவதும் அந்த மகாராஜப் பட்டம் தானே?
சித்ரா! பேசாமலிரு. அரசியல் விஷயங்களில் உனக்கு அனுபவம் போதாது.
நீங்கள் தவறி நடந்தால் நான் சொல்லக் கூடாதோ?
கூடாது. திரௌபதியைப் பார். அவளையே பந்தயமாக வைத்துச் சூதாடினார்கள். அதில் தோற்றால், தான்
துரியோதனனுக்கு அடிமையாகவேண்டும் என்பது தெரிந்தும் சும்மா இருந்தாள்.
கதை வேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள்,
பேசாதே! அடுத்த மாதம் நீ இளவரசியின் மகாராணி, நான் மகாராஜா!
“இமயா பராக்”
[என்று சேவகன் சொல்ல, சித்ரா போய்விடுகிறாள்]
விபீஷணரே! ஒரு புதுமையான பெண் வந்திருக்கிறாள். அடடா! அவள் என்னென்ன வித்தை செய்கிறாள்.
அது யார் அவள்?
நல்ல அழகு, நல்ல முகம், நல்ல உடல்!
எங்கே அவள்?
அவள் பேச்சு வீணையின் ஓசை! அவள் பார்வை குளிர்ந்த நீரோடை?
இப்பொழுது எங்கே இருக்கிறாள்?
அவள் நடக்கும்போது அசல் மயிலின் சாயல்தான்.
அடக்கம்மே! அவள் எங்கே இருந்து தொலைக்கிறாள்?
இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன். மிக முக்கியமான விஷயம்.
என்ன அது?
நடனமாடிக்கொண்டே மதுவைக் கோப்பையில் மொண்டு மொண்டு தருகிறாள் அந்த மங்கையர்க்கரசி.
இமயா! இனிப் பொறுக்க முடியாது. அவளைக் காணவேண்டும். ஒரே வார்த்தையில் பதில்; எங்கே அவள்?
இதோ வருவாள் (சேவகனிடம்) ஏய்! அழைத்து வா அவளை. (சேவகன் போக ஆரம்பிப்பதற்குள் இளவரசர் புத்தனும், வீரர்களும், குமரியும் பிரவேசிக்கிறார்கள்)
(திகைத்து) இளவரசே! அமருங்கள், அமருங்கள்.
அமருங்கள். (உபசரிக்கிறாள்)
இளவரசே! என்ன திடீர் விஜயம்?
உங்களை, அரண்மனை விருந்துக்கு அழைக்க வந்தேன்.
விருந்தா? (ஆசையுடன்)
ஆம். உங்கள் ஆட்சி முறையைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்துள்ள விருந்து.
