ஒரே முத்தம்
காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 13 · 13 / 33
பயங்கரமான தீர்ப்பு! அன்பா! நீங்களில்லாமல் சித்ராவுக்கு வாழ்வு ஏது?
(வெளியே)
சித்ரா, குழந்தை மனம் படைத்தவள். கபடம் இன்னதென்றே தெரியாது. அவளை நீங்கள் நம்பவேண்டும்.
(உள்ளே)
குழந்தை மனம்! எனக்கா அவளுக்கா? சூது தெரியாத பெண், இவளிடம் சூழ்ச்சியை ஆரம்பிப்பது?
(தேடித் தேடிப் பெட்டியைத் திறந்து கடிதங்கள் எடுத்தவள், மீண்டும் வைக்கிறாள்)
dialogue
விபீஷணன் குரலும் நிழலும்
:-
“என்னை உயிரோடு காணவேண்டுமானால். கடிதங்களை மீண்டும் கைப்பற்றியாகவேண்டும்”
[கடிதங்களை எடுத்து ஒளித்துப் பெட்டியில் வெற்றுக் கடிதச்சுருள்களை வைத்துவிட்டு, பெட்டியை முன்போல் மூடிவிடுகிறாள். படுக்கையில் படுத்துத் தூங்குவதுபோல் பாசாங்கு செய்கிறாள். புத்தன் குமரி முதலியோர் உள் வந்து படுக்கிறார்கள்]
(விபீஷணன் காவிகள் இருவர் குடிவெறியில் மோதிக்கொண்டு நடத்தல்)
ஏய்! இன்னிக்கு அகப்பட்டவில்லன்னு அய்யா ரொம்பக் கோபிப்பாரு.
ஏண்டா! பொம்பளை அகப்பட்டதுன்னு சாமான் யாரா? அதிலும் மூக்கு முழி எல்லாம் உருண்டு திரண்டு சுத்தமா ஆளு, அழகிய செந்தாமரைப் பூமாதிரி வேணும்னு என்னடா செய்யறது?
தினம், தினம் புதுசு புடிக்கிறதுன்னு முடியுதா? இந்த வட்டாரத்துக்கு நாம்பளே ஒரு பொம்பளை ஆயிடலாம்போல இருக்கு!
ஏண்டா முட்டாள், ஆம்பளை பொம்பளை யாக முடியுமா? போதையில் உளறுறே.
போடா! சாட்சாத் மகாவிஷ்ணுவே பொம்பளையா ஆனாரு. பரமசிவனும் அவருமா ஒரு பிள்ளையும் பெத்தாங்க!
அவங்கள்லாம் கடவுளுடா? பொம்பளையாவும் மாறுவாங்க, புள்ளையும் பெறுவாங்க!
(கடவுள்கள். விஷ்ணு, நாரதர் பெண்களாய் மாறிப் பிள்ளைபெற்ற கதை 1-வது காலி பாட 2-வது காலி பின்பாட்டுப் பாட கும்மாளமடித்துக்கொண்டே செல்லல்)
ஏய்! அதோ அந்தக் குடிசையில் விளக்குத் தெரியுது!
அது ஒரு விபசாரக் கடையடா.
அப்ப சரி, நம்ப விபீஷணருக்கு சரக்கு வாங்கலாம், வா, வாடா!
(போகிறார்கள்)
(வெளிச்சம். சூரிய உதயமாகிவிட்டது. சித்ரா எழுந்து பயணப்படுகிறாள். சூரிய உதயத்தைக் குறித்து ஒரு துறவி பாடிக்கொண்டு போகிறான். சித்ரா பயணப்படுவதற்கு முன் குமரியும், புத்தனும் பெட்டியைத் திறந்து பார்க்க,அதில் சித்ரா வைத்திருந்த கடிதச் சுருள்களைத் தாங்கள் சேகரித்த உண்மை ஆதாரம் என்று எண்ணி மூடிவிடுகிறார்கள். சித்ரா விடைபெற்றுச் செல்லும் காட்சி மௌனமாகவே நடைபெறுகிறது)
வீரர்களே! சித்ரா தாயார் வீட்டுக்குச் சென்று விட்டாள். விபீஷணன் இமயா இருவரும் தனியேதான் இருப்பார்கள். சித்ரா இருந்தால் அவள் கணவனைக் கைதுசெய்ய மனம் கூசும். அவர்களைக் கைதுசெய்ய இதுதான் நல்ல சந்தர்ப்பம்.
ஆம். ஆதாரங்கள் நாம் அபகரித்திருக்கிற செய்தி தெரிந்தால், விபீஷணன் வேறு சூழ்ச்சியில் இறங்கிவிடுவான்.
அதற்குள் அந்தக் குள்ளநரிகளைக் கூண்டில் நிறுத்திவிட வேண்டும். புறப்படுங்கள்.
(புறப்படுகின்றனர்)
[சித்ரா இருக்கிறாள்]
வீரன் மனைவி வெறுங்கையோடா திரும்புவாள்? வேங்கையின் பத்தினி வெள்ளாடாக இருக்க முடியுமா?
அப்படித்தான் சொன்னீர்கள்.
யார் என்ன சொன்னீர்கள்?
பாம்பின் மனைவி பாம்புதான் என்று, இளவரசர் சொன்னார்!
இளவரசன்! இந்தப் பாம்பின் குணந்தெரியாத பாலகன், பாம்பைப் பிடிக்க வந்தவன் படும் பாட்டைப்பார்.
நான் என் வார்த்தையைக் காப்பாற்றிவிட்டேனல்லவா?
வார்த்தையை மட்டுமா? என் வாழ்வு, வாழ்வின் லட்சியம், எல்லாவற்றையும் காப்பாற்றிவிட்டாய்.
அன்பா!
சித்ரா! என் தயக்கம்? என்ன கேட்கிறாய்?
சில கேள்விகள். பதில் வேண்டும்.
பரீட்சை வைத்திருக்கிறாயா? கேள்,
இந்திரன் அயோக்கியனும்! அதற்குக் காரணம்?
காமவெறி என்பார்கள்.
இராவணன் தம்பியின் பெயர்?
கும்பகர்ணன்.
