உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 12
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 12 · 12 / 33

எங்கள் ஜாகை கிட்டத்தான் இருக்கும்மா. அங்கே தங்கலாம். ஒருவேளை ஏழைக் குடிசை உங்களுக்குப் பிடிக்காது.

அதெல்லாம் பார்த்தால் காரியம் நடக்குமா?

நல்லவேளை, நான் பார்த்தேன். இல்லாவிட்டால் காட்டுப் பாதையில் போய் கஷ்டப்படவேண்டும்.

ஆமாம். என் நல்ல காலந்தான் உன்னைப் பார்த்தேன்.

அதெல்லாம் கடவுளே காட்டிவிடுவாரம்மா. அன்னைக்கு கடல்மாதிரி என் மனசு கொந்தளிக்கும்போது காப்பாத்தினீங்களே; நீங்கள் செய்த உதவியை மறக்க மாட்டேன்.

இப்போது நீ செய்வதுதான் பெரிய உதவி. நீ தென்படாவிட்டால் எங்கெங்கே திண்டாடவேண்டும்தெரியுமா?

சரி புறப்படுங்கள் அம்மா. அதுதான் எங்கள் குடில்.

[பல்லக்குப் புறப்படவே திரைமாறுகிறது.முகாம் உட்புறம் புத்தனுக்கும், மற்றவர்களுக்கும் சித்ராவை அறிமுகப்படுத்திக் கொண்டே குமரி முதலியோர் வருதல்]

இந்தப் புண்ணியவதிதான் என்னைக் காப்பாத்தினங்க.

விபீஷண எஜமானுடைய மனைவியாவார்க்கும். வணக்கமுங்க.

[சித்ராவிடம் புத்தனைக்காட்டி]

இவரு எனக்கு மச்சான் முறைங்க.

[புத்தன் முகத்தில் மாறுபாடு]

பார்த்தாலே புரிகிறது!

(பழங்கள் முதலிய ஆகாரங்களைக் கொடுத்துக் கொண்டே)

ஏழை வீட்டுச் சாப்பாடு.

நான் சாப்பாட்டை உத்தேசித்து வரவில்லை. உங்கள் அன்பு இருந்தால் போதும்.

(சாப்பிட்டானதும் உள்ளே சித்ராவுக்குப் படுக்கையை விரித்துக்கொண்டே)

நெருப்புக்கோழியை மயில் கல்யாணம் பண்ணிக்கிட்டமாதிரி, நீங்க போயி அவரைக் கல்யாணம் பண்ணிக் கொண்டீங்கம்மா!

என்ன செய்வது? என் தலையில் கடவுள் அப்படி எழுதிவிட்டான்.

(சித்ரா படுக்கிறாள். வெளியே புத்தனும் வீரர்களும்)

எனக்கென்னமோ சந்தேகமாயிருக்கிறது.

(குமரி வருகிறாள்)

சந்தேகத்திற்கு அவசியமில்லை.

வெடிமருந்துச் சாலையில் நெருப்புக்கு இடந்தருவது தவறு.

நிறை நெருப்பு என்கிறீர்கள். (சித்ரா படுக்கையை விட்டு எழுந்து கேட்டல்)

நீர் - நெருப்பு, இரண்டுமே வெடிமருந்துக்கு விரோதிகள்தான்.

என்ன இருந்தாலும் விபீஷணன் மனைவிதானே?

விபீஷணன் விஷப்பொய்கை. சித்ரா அன்பு ஊற்று.

(உள்ளே)

(தனக்குள்) இவள் நம்பிக்கையில் கல்லைப் போடுவதா? பாவம், மாசற்ற மல்லிகை மலர்.

dialogue

விபீஷணன் குரலும் நிழலும்

:-

“ஆம். மலரைக் காப்பாற்றினாய், மணவாளனைக் காட்டிக் கொடுத்தாய்.”

இல்லை. என் அன்பரைக் காட்டிக்கொடுக்க மாட்டேன்.

(வெளியில்)

உம், பாம்பின் மனைவி பாம்புதான்.

அப்படியிருந்தால் என்னைக் காப்பாற்றியிருக்க மாட்டாள். நீங்கள் நம்புங்கள் இளவரசே!

(உள்ளே)

களங்கமற்ற இந்த உள்ளத்தை எப்படி ஏமாற்றுவது? முடியாது, அன்பா! என்னை மன்னித்துவிடுங்கள்.

dialogue

விபீஷணன் குரலும் நிழலும்

:-

“மன்னிப்பதென்ன? மகுடத் தைக் கைப்பற்றச் சதி செய்த தாக நாளை வழக்கு; மரண தண் டனை அதற்குத் தீர்ப்பு”