உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

நச்சுக்கோப்பை

காட்சி 9 · 9 / 18

ஏனடி மௌனம் சாதிக்கிறாய்?

அதிருக்கட்டும். ஏன் கூப்பிட்டீர்கள்? கூப்பிட்ட சமாச்சாரத்தைச் சொல்லுங்கோ.

எப்பொழுது பார்த்தாலும் கடுகடுத்த முகம் தானா? வெடு வெடுத்த பேச்சுத்தானா? ஏன் இந்த வெறுப்பு?

ஆ! தாங்கள் நடந்து கொள்ளும் காரியத்திற்காக நான் மகிழ்ச்சியடைய வேண்டுமா?

மகிழ்ச்சியடையாவிட்டாலும் வெறுக்காமலாவது இருக்கலாம் அல்லவா?

அது நானாகச் செய்து கொள்ளவில்லை.

வேறே யாரு-ஆண்டவன் கீண்டவன் உள்ளே பூர்ந்துவிட்டு உன்னை ஆட்டிப் படைக்குறானா?

நான் தாசியல்ல!

வேறே யாரு ...தேவடியாளா?

இதற்கெல்லாம் பதில் சொல்லத் தயாராயில்லை. செய்தியைச் சொல்லுங்கள்.

நீ என் அடிமை!

அன்பிற்கு! அதிகாரத்திற்கல்ல!

நீ என் வீட்டில் கொட்டிக் கொள்கிறாயே சோறு, அதற்காவது நீ அடிமைப்பட்டவள் தானேடி.

சோற்றைக் கண்டு வாலைக் குழைக்கும் பிராணி வேறு. அதிகமாகப் பேசவேண்டாம்.

சீ! நன்றி கெட்டவளே.

ஆ! தாங்கள் செய்த எந்த நன்றியை நான் மறந்தேன். மாட மாளிகையிலே, மணந்தரும் மலர்ச் சோலையிலே காதலைப் பருகக் காமக்கிழத்தியாக்கினீர். இது தானே என்னிடம் காட்டும் அன்பும் வாஞ்சையும்.

அடேடே டே......இதை யெல்லாம் எப்படி கத்துக்கிட்டே. மாடமாளிகையாம். கூட கோபுரமாம். என்னடிது- சரிதான். உன் அண்ணன் சொல்லிக் கொடுத்திட்டான் போலிருக்கே . எங்கே பிகின்-ஒன்சுமோர்.

தங்களைச் சொல்லி என்ன பயன்? என்னை இப்படுகுழியில் தள்ளிய பாதகர்களையல்லவோ சொல்ல வேண்டும்.

ஓ! போய் கோட்டை எடுத்துட்டு வா

(சாந்தா கோட்டை எடுத்து வரல்)

ஏய்! என்னைக் கொண்டுபோய் வெளியே விடு. ஏண்டி, என்னை வெளியே அழைச்சிட்டுப் போறையா? கொல்லைப் பக்கம் அழைச்சிட்டு போறயா? என்னை அங்கே அழைச்சிட்டுப்போய் கொல்லப் பார்க்கிறீயா?

இல்லை. தெருப்பக்கம்தானே இது?

தெருப்பக்கமா. நல்லா பாருடி. சரி இப்படியெல்லாம் செய்யாதே. தூங்கும் போது தலையிலே கல்லைத் தூக்கிப்போடு. நான் இப்போ வெளியிலே போறேன் வந்து பேசிக்கிறேன். நீ மதுவருந்தி விட்டுப் பேசுகிறாய் குடிவெறியிலே பேசற. நான் வந்து போகிறேன் பிலடிபகர்.

(போதல்)

மதுவருந்தி விட்டுப் பேசுகிறேன். மதுவல்ல எனக்குக் கொடுக்கப்பட்டது. கொடிய நஞ்சு. அதை உண்ட மயக்கத்தில் உளறுகிறேன். துருப்பிடித்துப் போன சமூகமே! நீ கொடுத்த நஞ்சு என்னை உயிரோடு வைத்துக் கொல்லுகிறதே. நானாகத் தேடிக் கொண்டேன் நாச காலத்தை! கடல் அழிந்தாலும் காதல் அழியாது என்றேன். கருத்தழிந்தேன். ஏகாம்பரத்தின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டேன். என் வாழ்வை வெட்டிப் பிரித்த ஏ வேற்றுமைப் பிசாசே! உனக்கு அழிவு காலம் அண்மையில் இல்லையா?

இது நீதியா? நியாயமா? நேர்மையா?

சீன் முடிவு.

ரோடு

(சின்னையா பிள்ளை, கன்னையா செட்டி வருகை)

ஏனப்பா பழனி, எங்கே போகிறாய்?

இன்று ஒரு பொதுக்கூட்டம். அதில் பேச வேண்டும். அதற்காகப் போகிறேன்.

சாமியைப் பழித்துத்தானே பேசப்போகிறீர்கள்?

சாமியைப் பழிக்கிற கயவர்களைப்பற்றிப் பேசப் போகிறேன். ஆமாம், நீங்கள் எங்கே போகிறீர்கள்?

நாளைக்கு என் பொண்ணுக்குக் கலியாணம். மழை பெய்யக்கூடாதுன்னு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைச்சிட்டு வரலாம்னு போறேன்.

அப்போ, செய்யுங்கோ.

(கன்னையா வருகை)

என்ன! கன்னையா செட்டியவர்களே, எங்கே இவ்வளவு தூரம்?

மழையில்லாமே நிலமெல்லாம் வறண்டு விட்டது. நாளைக்கினாலும் மழை பெய்யட்டுமின்னு மாரியம்மனுக்கு ஒரு தேங்காய் உடைக்கப்போகிறேன்.