நச்சுக்கோப்பை
காட்சி 10 · 10 / 18
சின்னையா பிள்ளையவர்களே! கன்னையா செட்டி கூறிய வார்த்தைகளைக் கேட்டீரா? நீர் உமது மகளுடைய கல்யாணத்துக்கு மழைபெய்யக் கூடாதுன்னு தேங்காய் உடைக்கப்போகிறீர். அவர் நிலம் வறண்டுவிட்டது. மழை பெய்ய வேண்டுமென்பதற்காகத் தேங்காய் உடைக்கப்போகிறார். இதில் கடவுள் யாருக்கு அனுக்கிரகம் செய்வார்?
ஏன்? நல்லவாளுக்குச் செய்யட்டுமே!
அப்படியின்னு நான் கெட்டவனா?
நாளை தெரிந்துவிடுகிறது.
ஓய்! சொல்லிக் காட்டாதேயும், உமது பெருமையை. என்னைப்போல் யார் பக்திமான் இருக்கிறார்களோ, அவர்களுக்கே கடவுள் அனுக்கிரகம் செய்வார்.
நீர் பெரிய பக்திமானோ?
நீர் பெரிய பக்திமானோ?
ஐயா! வெய்யில் எரிப்பதும் மழைபெய்வதும் இயற்கையின் செயல். இதற்காக நீங்கள் சண்டையிட்டுக் கொள்வது முட்டாள் தனம்!
முட்டாள் தனம் என்று சொல்லாதேயும்.
அதைவிட அழகான வார்த்தை கிடைக்க வில்லையே, ஐயா! நாளை மழை பெய்துவிட்டால் நீர் அயோக்கியன் என்பதை ஒப்புக்கொள்கிறீரா? அல்லது நீர் தான் ஒப்புக் கொள்கிறீரா? மேல் நாட்டிலே மனிதன் யந்திரமும் கையுமாகப் போராடிக் கொண்டிருக்கிறான். நீங்கள் களிமண்ணும் கையுமாக பிள்ளையார் பிடிக்கிறீர்களே, இது அறிவுடையாகுமா?
சரி. சரி. இப்ப நீ எங்கே போறே?
பொதுக் கூட்டத்திற்கு.
அப்ப நாங்க கோவிலுக்குப் போயி தேங்காயை உடைத்துக் கொண்டு வருகிறோம்.
மணியப்ப முதலியார் வீடு
(அய்யர் வருகை)
என்னது, சாந்தாவீட்டிலிருந்து தபாலா கிபாலா ஒண்ணும் காணோம். ஒன்றும் புரியலையே!
(அய்யர் வரல்)
என்ன முதலியார்வாள்! வெளியே புறப்பட்டாப்போல இருக்கு.
ஆமாஞ்சாமி! நம்பள மறந்திட்டீங்களா என்ன?
என்ன முதலியார்வாள்! இவ்வளவு சுலபமா சொல்லிட்டீரே. எப்படி தங்களை மறக்க முடியும்?
ஆமாம். இப்போ எங்கே வந்தீங்க?
காரியம் இல்லாமலா வருவேன்.
அப்ப என்ன விஷயம்?
இம். இருக்கு.
என்ன விஷயம்! சொல்லுங்கோ?
அதாவது ராதா கல்யாணம் வர்றது.
யாருக்கு? தங்கள் மகளுக்கா?
சே! சே? என்னென்னு... இப்படிக் கேட்டேள். இவ்வளவு பக்திமானாக இருந்தும். நீரும் உம் மகனுட சேர்ந்துட்டயோ?
யாராவது சொல்றதை கேக்றது. அதைக் கொண்டுதான் எனக்கு எல்லாம் தெரியும்.
அதாவது ராதாவுக்கும் கிருஷ்ணனுக்கும் போன யுகத்தில் நடந்த ஐதீகத்தை இப்பொழுது உற்சவமாக நடத்துறோம். அதுதான் ராதா கல்யாணம்.
அதுக்கு நான் என்ன சாமி செய்யணும்?
ஏதோ ஒரு தொகை கொடுத்து உதவினும் தங்களுக்கு பகவத் கிருபை கிட்டும். அதுவுமல்லாமல் சுடகோடி சூர்ய நாராயண அய்யர் கதா காலக்ஷேபமும் இருக்கு. நீங்களும் அவசியம் வரணும்.
அடேடே! என்ன சாமி! நான் வராமலா இருப்பேன். (பணம் கொடுத்தல்)
ஆமாம். மூணு மரக்கா பச்சரிசி வேணும்.
ஏன் சாமி?
பகவானுக்குத் துத்திவண்ணம் செய்யணும்.
சாமி, நெல்லு அடிக்கலிங்க. அடுத்த மாசம் தான் அடிக்கணும்- அடிச்சன்னு கொடுத்தனுப்புறேன்.
