உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

நச்சுக்கோப்பை

காட்சி 8 · 8 / 18

ஏய் கந்தா,அய்யருக்கு போட்டு கொடுடா.

சாமி,சும்மா சாப்பிடுங்க.

கந்தா! சிகிரெட் எடுடா.

பிரதர்! இன்னைக்கு எல்லாம் ஜாலியா இருக்கோம். ஒரு பாட்டு பாடுங்கோ.

என்ன பிரதர்! என்னைப் பாடச் சொல்றீங்க. நான் பாடி யாரு கேக்கறது. டோன் வேறே கெட்டுடுத்து. சின்னப் பையனாக இருக்கும்போது ஸ்கூல்ல நாடகத்திலே நடிச்சது. கந்தா, என்ன நடத்தினோம்?

நாடகம் நடத்தினீங்க.

அப்ப நல்லதங்காள் நாடகம் நடந்தது. அதுலே நான் லோகிதாஸனாக நடித்தேன்.

எஜமான்! நல்லதங்காவிலே லோகிதாசன்...!

டேய்! கதைப் போக்கு உனக்கென்னடா தெரியும்?

ஏய்! அவரு நடிக்காமேயா சொல்றாரு. அப்போ நீங்க பாடுங்க பிரதர்.

பாடத்தெரிஞ்சா பாடுங்க. இல்லேன்னா கத்துங்க பிரதர் ஜாலியா

ஏய் ஜம்பு! நம்ப அழகப்பன் பாடினா கிட்டப்பா எல்லாம் எட்டப்பான்னு போயிடணும்.

நீங்களும் பாடித்தான் ஆகணும்னு ரொம்ப டிரபுள் பண்றீங்க. பாடலேன்னு நமக்குள்ள பார்மால்டி கெட்டுடும். பாடுறேன்:

"பாலத்தின்மீது ரயிலோடக் கண்டேன் ரயில், மெயிலாச்சுதடி- குயிலே ஸ்டேஷனை விட்டுப் புறப்பட்ட ரயிலும் வேகமாய்ப் போகுதடி - குயிலே "

இது தாண்டா ராமலிங்க சுவாமி அருட்பா .

அருட்பாவா. அப்போ பாடுங்க பிரதர்.

(பாட்டு)

என்ன பிரதர்! நான் அப்போ பாடினேன். நீங்க எல்லாம் கேட்டு ரசிச்சிங்க. இப்போ சாரீரம் கழுதை மாதிரி இருக்கு.

ரொம்ப நல்லா இருக்கு. இந்தப் பாட்டே ரிகார்டு கொடுக்கலாமே.

பிரதர் டைம் ஆச்சி.நான் வர்றேன். அழகப்பன்! நான் வரேம்பா.

போறிங்களா ... அப்ப போங்கோ.

பிரதர்! நான் இன்னிக்கு சினிமாவுக்குப் போகலாம்ணு இருக்கிறேன். நீயும் வாரியா?

எனக்கு நெஞ்சு வலி ஜாஸ்தியாய் இருக்கு. நீயே போயிட்டுவா.

என்னப்பா வருஷம் 300 நாளும் நெஞ்சுவலின்னு சொல்றே இன்னிக்கு ஒருநாளைக்குத்தானே. ஜாலியா போயிட்டு வரலாம்.

என்ன படம் நடக்குது.

தாராசசாங்கம்.

என்ன பிரதர்! இருந்து இருந்து தாராசசாங்கத்துக்கா போறது? யாரோ எண்ணெய் தேக்கிறாங்களாம், அதுக்கா போறது?

புராணப்பட மப்பா புராணப் படம்.

அப்போ சரி . போகலாம். ஒரு சீட் ரிசர்வட் செய்-பஸ்ட் கிளாஸ்.

எஜமான்! நானும் வர்றேன்.

அப்போ இரண்டு சீட் ரிசர்வ் செய்.

அவன் சர்வண்ட் தானே.ப்ளோர் போதும்பா.

அவன் சர்வண்ட் -வேலைநேரத்திலே! மத்த நேரத்திலே என் டியரஸ்ட் பிரண்டு.

அப்போ நான் வர்றேன்.

சிவகுரு! 3 சீட்டா ரிசர்வட் செய். அதோட பஸ்ட்கிளாஸ் செடன்பாடி டேக்ஸ் ஒன்னும் அனுப்பு.

(சிவகுரு போதல்)

ஏய் சாந்தா! சாந்தா! ஏய் சாந்தா! எங்கே போய்ட்டா அவள்?

ஏன்?