நச்சுக்கோப்பை
காட்சி 7 · 7 / 18
அடே, சொர்ணை கெட்டவனே! உன்னைப்பெத்து வளர்த்து போதித்து, சோறு போட்டு,இந்தத் தசையை வளர்த்த என்னிடம் இப்படித்தான் பேசவேண்டும். விதி மற்ற வீணனுக்கு வீராப்பு வேறு. உன்னை எவ்வளவோ மரியாதையாக நடத்தணும்னு நினைச்சேண்டா. நீயே கெடுத்துக்கிட்டே. இப்பப் பேசக் கத்துக்கிட்டு மூச்சு விடாமே பேசறே. போடா, மடப்பய மகனே! (உள்ளே போதல்)
ஏம்பா ஏகாம்பரம்! அப்பா கிட்டே இப்படிப் பேசலாமா? அப்பாவும் கோவிச்சிக்கிட்டுப் போயிட்டாரு வா, போகலாம்.
அம்மா! எனக்கு வேண்டாம் போங்கள்.
உன்னைப் பெத்த வைத்திலே பிரண்டையைத்தான் வச்சுக்கணும். இனி என் மகன் என்பதைத் தொலச்சுட்டேன் போ.
(உள்ளே போதல்)
சண்டாளர்கள்! ஐயோ! காதலியும் கைவிட்டாள். தந்தையோ மந்தை மாடென எண்ணிவிட்டார். தாயோ பேயெனப் பிதற்றுகிறாள். நிலையறியாத கொலைஞர்கள்! இனி இங்கிருப்பது சரியல்ல. எங்காவது ஓடிப்போய் விட வேண்டியதுதான்.
காடு
(ஏகாம்பரம் சாந்தா படத்தை வைத்து அழல்)
சாமியார் பாட்டு.
சாந்தா! நீ என்னை இப்படி ஏமாற்றுவாய் என்று நான் கனவிலும் நினைக்கவில்லையே! எனது குமுறும் உள்ளத்தை உன்னிடம் எப்படிக் காட்ட முடியும் ? நான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன்? என் உண்மை உள்ளத்தோடு உன்னைக் காதலித்தேன். நீயும் உன் காதலை வாரி வாரி வழங்கினாய். என் உள்ளத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். ஆனால் நீ ஏமாறவில்லை. நான் ஏமாற்றம் அடைந்தேன். அன்று நீ பேசிய கொஞ்சும் மொழி விருந்து இன்னும் என் நெஞ்சை இனிக்கத்தான் செய்கிறது .கரும்பே என்றாய்!
கரும்பு இன்று உனக்கு வேம்பாயிற்று! மண்ணும் விண்ணும் வீழினும் மறவேன் என்றாய்!
சாந்தா! நீ என்னை உண்மையாகவே காதலித்தாயோ அல்லது உனது அன்பு வெறும் வேசிகளின் அன்புதானா? காதலாம், கண்ணாம், மூக்காம், அதற்குத் தெய்வீக சக்தியாம்! இதுதானா அந்தச் சக்தி? ஓ!
ஒரு இளைஞனை இன்முகம் காட்டி இழுத்து கண்களால் பேசி, கடிதங்களால் மயக்கி,வாய் மொழியால் வாட்டி கடைசியில் கலங்கவிடுவதென்றால் இதை உலகம் பார்த்துக்கொண்டா இருக்கும்? சாந்தா ! உன் மனமே உனக்கு நீதி வழங்கும். உன்னையே நம்பி உனக்காகவே உலகில் வாழ்ந்து உன்னாலேயே ஏமாற்றப்பட்டு உள்ளம் உடைந்து ஓடும் ஏகாம்பரத்தின் நெஞ்சின் சாபத்தை நீ ஏற்றே தீர வேண்டும். இதிலிருந்து நீ மீளமுடியாது.சாந்தா! அன்பனையா மறந்தாய்?
அழகப்பனுக்கா மாலையிட்டாய்? இதோ போகிறேன்-உலகை விட்டு அல்ல, இந்த ஊரைவிட்டு! சாந்தா! உனக்கு உலகம் அளிக்கும் தண்டனையைப் பார்க்காமலா சாவேன். சாந்தா?
அழகப்பன் வீடு
(நண்பர்கள் வருகை. கந்தன் இருத்தல்)
(சிவகுரு, கந்தன், அழகப்பன்,சீட்டாட்டம்: மதுவிருந்து)
என்ன பிரதர்! இன்னைக்கு பிளே ஒன்றும் சுகமில்லை.
பிரதர்!.ராஜால்லாம் ராணியா தெரியுது.ராணி எல்லாம் ராஜாவா தெரியுது. என்ன பிரதர்! இண்ட்ரஸ்டே இல்லை
ஏய் கந்தா! போடு.
என்ன பிரதர்! எங்கே இன்னும் கணபதியும் ஜம்புவும் வரலே.
வந்திடுவாங்க பிரதர்.
குட்மார்னிங் பிரதர்.
(ஜம்பு வரல்)
ஓ! குட்மார்னிங்! ஏய் கந்தா! சேர் எடுத்துப் போடுடா. ஏன் பிரதர், இவ்வளவு நாழி?
கொஞ்சம் வீட்ல வேல இருந்தது.
எங்கப்பா கணபதியைக் காணோம்.
அவன் கோயிலுக்குப் போயிருக்கான் பிரதர் .
இன்னைக்கு என்னப்பா புதிசாயிருக்கு; என்னைக்கும் இல்லாத திருநாளாக இருக்கு.
ஓ! இன்னைக்கு திருவாதிரை உற்சவமில்ல.
ஆமாங்க எஜமான்! பட்டுப் புடைவைகள் நடமாட, வாலிபக் கண்கள் தாண்டவமாட பஸ்ட்கிளாசு காட்சியின்னு பேப்பரில் போட்டிருக்கு ஏஜமான்.
அது என்னடா பஸ்ட்கிளாசு காட்சி?
அதுதாங்க எஜமான், பார்வதி பருவம் அடைஞ்சிட்டான்னு அந்தப் பரமசிவம் நெற்றியிலே வழியுது பாருங்க திருச்சாந்து,அடடா! பஸ்ட் கிளாசு காட்சி.
என்னப்பா அழகப்பா, உன் வேலைக்காரன் இவ்வளவு மேலே போயிட்டான்.
அதுவா ! அவன் இப்ப எல்லாம் 'திராவிடநாடு' பேப்பரு படிக்க ஆரம்பிச்சிட்டான். அதனாலேதான் பேசுறான்.
(கணபதி வரல்)
குட்மார்னிங் அழகப்பன்!
எப்பா,இவ்வளவு நாழி?
கோவிலுக்குப் போயிட்டு அப்படியே நம்ப ஒய்ப் ஊருக்குப் போகணும்னு சொன்னாள்.அப்படியே அனுப்பிச்சிட்டு வர்ரேன்.
