நச்சுக்கோப்பை
காட்சி 6 · 6 / 18
வேண்டாம்.
(அய்யர் உள்ளே போதல்,)
ஏய் கந்தா! ஆகவேண்டிய காரியத்தை எல்லாம் பாருடா.
இடம் ரோடு
(கந்தனும் அய்யரும் வாது பேசல்)
(அய்யர் மூட்டையுடன்)
ஓய் அய்யரே! இப்படி வாரும்! என்ன மூட்டை அது?
அதுவா... கல்யாணத்திலே கொடுத்த சாமான்கள்.
எவ்வளவு அரிசி இருக்கும்?
ஏன்? 5 படி இருக்கு.
ஓய்! உனக்கு எதுக்கு 5 படி அரிசி? இப்பத்தான் ரேஷன் காலம்னு தெரியுமல்ல?
எந்தக் காலமா இருந்தா எனக்கென்ன? ரேஷன் ஆபீஸர் வீட்டிலேயே நான் போய் வாங்கிவருவேனே.
தொலைஞ்சு போ. அரிசியை நீ எடுத்துக்கோ பணம் ஐந்து ரூபாயையும் கொடு.
எதுக்கப்பா நீ கேக்கறே!
கொடுக்கிறியா இல்லையா?
ஐயோ! கொடுக்கிறேன். நீ கிட்டவராதே, பாருங்க. கொடுக்குறத்துக்கு அவங்களையும் படைச்சி, வாங்கறத்துக்கு எங்களையும் உண்டு பண்ணி, அடிச்சிப் பிடுங்கறத்துக்கு ஆண்டவன் இவங்களையும் படைச்சிருக்கானு. ஏ, கடவுளே! காலம் கெட்டுப் போச்சின்னு.
ஆமா! கருப்புக்கோழி வெள்ளை முட்டை மிட்டுச்சு ஏ பணமே! பகல் இரவு என்று பாராது பாடுபட்டுப் பசி பசி என்று ஏங்கி நடு நிசியிலே நின்றாலும் இதோ கொஞ்சம் புசி புசி என்று கூறிடாத இரும்பு நெஞ்சரின் இரும்புப் பெட்டியில் தூங்கும் பணமே! குச்சி வீட்டில் ஏழை உணவின்றி ஓய்ந்து கிடக்கவும், மச்சி வீட்டில் பணக்காரர்கள் மதுரகீதம் பாடவும் பாழும் நிலையை உண்டாக்கிய பணமே! உலகத்தின் உயிரே! இன்னும் எத்தனை நாளைக்கு இந்தச் சோம்பேறிகளின் வீட்டில் வாழப் போகிறாய்?
வரப்போகிறது பாட்டாளியின் படையெடுப்பு! வந்து சேர். பார்த்துக் கொள்ளுகிறேன். (பழனி வருதல்)
ஆஹா! இம்மாதிரியான உண்மையான தோழர்கள் ஓராயிரம் பேர்கள் இருந்தால் போதுமே, இந்நாட்டிற்கு! கனல் கக்கும்படி பேசி ஐயரை மடக்கிய கந்தன் அழகப்பனின் வேலைக்காரன். இவனுக்கு இருக்கும் அளவு இவன் எஜமானனுக்கு இருந்தால்...? என்னவோ, மாணவரையும்,தொழிலாளரையும் நம்பித்தான் இருக்கிறது நாடு. பார்ப்போம் ஒருகை.
ஏகாம்பரம் வீடு
(சாந்தா படத்தைப் பார்த்து அழல்)
(பாட்டு, மீனாக்ஷி வந்தல்)
ஏகா — பாட்டு. சாந்தா
(மீனாக்ஷி வரல்)
ஏம்பா, ஏகாம்பரம்! இப்படி இரண்டு நாளாய்ப் பட்டினியாய் இருக்கிறாயே, உடம்பு என்னத்துக்கு ஆகும்? வா சாப்பிடலாம்.
அம்மா! எனக்கு இப்பொழுது சாப்பாடு வேண்டாம்.
நீ என்னவோ, சாந்தா, சாந்தான்னு அழுது கிட்டு இருக்கே. அவள் என்னவோ சுகமா புருஷன் வீட்டிலே இருக்கிறாள்.இப்ப நீதான் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய்.சரி! சாப்பிடவா.
ஐயோ! என்னைத் தொந்தரவு செய்யாதிங்களேன் எனக்கு இப்பொழுது வேண்டாம் போங்கள்.
(ஆதிகேச முதலியார் வருதல்)
ஏய் மீனாட்சி! ஏகாம்பரம் சாப்பிட்டானா?
அதுக்குத்தான் கூப்பிடுகிறேன். சாப்பாடு வேண்டாமாம்!
சாப்பாடு வேண்டாமா? வேறென்ன, சாந்தா வேணுமா?
அப்பா, மீண்டும் மீண்டும் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள், வேண்டாம். விட்டு விடுங்கள்.
என்னவோ சாது எனப் பெயர் வாங்குவாய்ன்னு நினைச்சேன்.
ஆமாம்! சூது செய்பவன் கூடத்தான் சாது எனப் பெயர் வாங்குகிறான்!
அதிகமாய்ப் பேசவேண்டாம் - அதிகப் பிரசங்கி நாயே!
அறிவோடு பேசுங்கள் அப்பா.
அறிவாவது! கிறிவாவது! அடிச்சேன்னா, பல்லு கில்லு எல்லாம் உடைஞ்சுடும்.
அப்பா! ஏன் அடிக்க மாட்டீர்கள். இனி நான் உங்களிடம் பேசத் தயாராயில்லை. பகல் முழுதும் உழைத்து அலுத்த பாட்டாளியின் மனைவி பாம்பு கடித்திருக்கும் சமயம், பட்ட கடனைத் தீர்ப்பாய் என்று பார்ப்பான் வந்து போலவும், கப்பல் மூழ்கிய காரணத்தால் கரையை அடைய கடலில் நீந்தும்போது மகா மீன் வாய் பிளந்து வரவேற்பது போலவும் வேதனையிலே வாடும் என்னிடம் பாதகமாக நீர் பேசுகிறீர். தந்தையே! கட்டக் கந்தையுமில்லையே என்று கதறும் கபோதியிடம் விந்தை மொழி பேசுவரோ?
என் செய்வது! போரின் புகைச்சல் நம் ஊரை அணுகும் வேளையில், யுத்த வாடை இந்தியக் கரையை மோதும் நேரத்தில் நாச வேலையை நடாத்திய நேசர்களின் தொண்டர் அல்லவா தாங்கள்! ஏன் பேசமாட்டீர்கள்? இன்னமும் பேசுவீர்கள்.
