உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

நச்சுக்கோப்பை

காட்சி 5 · 5 / 18

அதைத்தான் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன்.

காரணம்?

காரணமா? ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியும்.ஏன் சாந்தா, அழகப்பனைவிட ஏகாம்பரம் எந்த வகையில் உயர்ந்தவன்? அய்யரை ஏசி ஏசி ஒரு சல்லிக்கு வழி இல்லாமல் செய்திட்டான் .இன்னைக்கெல்லாம் இருந்தால் ஒரே ஒரு வெற்றிலை பாக்குக் கடைதான். அழகப்பனை மணந்து கொண்டால் பணத்திலேயே கிடந்து பொரளலாம். காரை விட்டுக் கீழே இறங்கவேண்டியதில்லை. அவன் காலால் இட்ட வேலையைத்தலையால்செய்ய எத்தனையோபேர்காத்துகிட்டு இருக்கிறாங்க.

ஏகாம்பரத்தை மணந்தால் ஒன்னுக்கு இரண்டு பத்திரவத்துக்கு மூணா நீயும் போகவேண்டியது தான். நான் சொல்வதைக் கேளம்மா.என்னம்மா பேசாமே நிக்கறேயே. உன்னிஷ்டந்தான் சொல்லேன்.

சரி அப்பா ! உங்கள் இஷ்டம்போல் செய்யுங்கோ.

அப்படிச் சொல்லு அம்மா! இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு. நீ கெட்டுப் போறத்துக்கா செய்வேன்? நீ தயாரா இரு. நான் ஆகவேண்டியதைக் கவனிக்கிறேன் . (உள்ளே போதல்)

(பாட்டு.)

கல்யாண மண்டபம்

அழகப்பன், சாந்தா, மணியப்பர்

அய்யர், சிஷ்யன்.

(நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் வரல்)

டேய் கந்தா! அய்யர் எங்கேடா?

இதோ வராங்க.

வாங்க சாமி.

வர்ரேன்.

சாமி,நாழியாச்சி.சீக்கிரம் ஆகட்டும்.

என்ன முதலியார்வாள்! எல்லாம் கொண்டு வரச்சொல்லுங்கோ. பெண்ணு மாப்பிள்ளையை அழைத்து வாருங்கோ.

(அய்யர் மந்திரம் சொல்லுதல். பிறகு மாலை போடல். மணவரையைச் சுற்றுதல்.)

சாந்தா ! நமஸ்காரம் செய்துக்கோ.மாப்பிள்ளைவாள் ! நீங்களும் நமஸ்காரம் செய்துகொள்ளுங்கோ.நலுங்கு பாடுங்கோ.

(பாடல்)

முதலியார்வாள்! பொண்ணு மாப்பிள்ளையை உள்ளே அழைச்சுண்டுபோய் பாலும் பழமும் கொடுங்க. சரி, நான் போகட்டுமா?

போய்ட்டு வாருங்கோ.

சரி.வர்றேன். (உள்ளே போதல்)

என்ன சாமி, இப்படியும் அப்படியுமாபோறிங்க. என்ன விஷயம?

ஒன்றுமில்லை, தெக்ஷணை கொடுங்க.

இதை அப்பவே சொன்னா என்னாங்க சாமி? இந்தாங்க.

மாமா! எனக்கும்.

முதலியார்வாள்! பிச்சுமணிக்கும் கொடுங்கோ. (பணம் கொடுத்தல்)

(பிச்சுமணி பணம் வாங்கிக்கொண்டு வெள்ளிக்கிண்ணத்தைத் திருடுதல். கந்தன் பிடித்தல் )

மாமா - மாமா -உ

என்னடா - முதலியார்வாள்!

ஏய்,என்னடா?

இதைத் திருடிட்டாருங்கோ?

ஏன் சாமி,இப்படிச் செய்யலாமா?

இதுக்குப் பேரு திருட்டா?

பின்னே என்ன களவா?

முதலியார்வாள்! பிராமணாள் எதை வேணும்னாலும் எந்த இடத்திலே இருந்தாலும், எடுத்துக் கொள்ளலாம்னு மநுதர்ம சாஸ்திரத்திலே எழுதி இருக்கு.

அப்படியா! அப்போ எடுத்துக்குங்க?