உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

நச்சுக்கோப்பை

காட்சி 4 · 4 / 18

பயப்படவேண்டாம்.

நீங்க ஒன்றுக்கும் இனிமேதான் உமக்கு நல்லகாலம். நான் வீட்டைவிட்டுப் புறப்படும்போதே கருடன் வட்டம் இட்டது. அதிலே எனக்குப் பரம திருப்தின்னா.

கருட சகுனம் கைகண்ட சகுனம்னு சொல்லுவாங்களே. சரி சாமி, ஒரு நல்ல நாளா பாருங்கோ. கல்யாணம் சீக்கிரம் ஆகணும்.

முதலியார்வாள்! திங்கள் கிழமை சோமவாரம் 5½ - மணிக்கு மேல்பட்டு 6½ - மணிக்குள்ளாக முடித்துவிட்டால் நல்லது.

சாமி, நீங்க சொல்லும்போதே கவுளி சொல்லுது. அந்த நாள் எனக்குப் பிடிக்கல்லே.

வேறே நாள் வைக்கலாம். எனக்கு வேறொரு இடத்திலே ஒரு கருமாதிக்குப் போகணும்.

சாமி! என்னது? என் வீட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு கருமாதிக்கும் கல்லெடுப்புக்கும் சாதகம் பார்க்கிறிங்க

நான் எதுக்கு சொல்றேன்னா, ஒத்துக்கொண்ட நாள் போக, பாக்கி நாளில்தானே ஒத்துக்கொள்ளணும். அதனாலே தான் சொல்றேன்.

அப்படியா! அப்பேர் உங்க இஷ்டத்துக்கே செய்ங்க சாமி.

சரி, நாழியாயிடுத்து. நான் போகணும். உங்காத்து வேலைக்காரனே நம்ப ஆத்துப் பக்கம் கொஞ்சம் வரச் சொல்லுங்கோ. கல்யாணத்துக்கு வேண்டிய சாமான்களை எல்லாம் எழுதி அனுப்புகிறேன்.

அப்போ சரி சாமி! பணம் கொடுத்து

(சிரித்து) இதுக்கு இப்ப என்ன அவசரம்?

அப்ப சரி.

அடடே, அதுக்குள்ளே, போடுங்கன்னா பர்சிலே கொண்டு வைக்கிறேளே. (பணம் கொடுத்தல்)

நான் போய்ட்டு வர்றேன்.

சரி சாமி.

(சாந்தா பள்ளியிலிருந்து வரல்)

அம்மா சாந்தா! பள்ளிக்கூடம் போய்ட்டு வரியா அம்மா?

ஆமாம்பா.

எல்லாம் படிச்சி முடிச்சிட்டியா அம்மா?

இன்னும் கொஞ்சம் இருக்கு அப்பா.

படிச்சது போதும். இனி பள்ளிக்கூடம் போக வேண்டாம்.

ஏன் அப்பா?

உனக்குக் கல்யாணத்திற்கு ஏற்பாடாகி விட்டது.

எனக்கு எதுக்கு அப்பா இப்பக் கல்யாணம்?

என்னம்மா இப்படிப் பேசறே.விளையாட்டுத் தன்மா வயசு 18 ஆகிவிட்டது.

அப்பா! இதை என்னைக் கேட்டுக்கொண்டா செய்யவேண்டும்?

வேறே யாரம்மா கேட்கிறது?

என்னை யாருக்குக் கொடுக்கிறீர்கள்?

அரியலூர் அழகப்பனுக்குத்தான்!

அப்பா! ஒருவன் வாயிலே விஷத்தைப் பலாத்காரமாகத் திணித்துவிட்டு அதைச் சாப்பிடுவதைப் பற்றிய அபிப்ராயத்தை அவனிடம் கேட்பதுபோல் இருக்கிறது, தங்களுடைய பேச்சு!

இதென்ன எழவு எடுத்த ஏழவா இருக்கு. வீட்டிலேயே படுத்துத் தூங்குகிறாயே.ஏதாவது ஒரு நல்ல இடத்தைப் பார்த்துக் கல்யாணத்தை முடிச்சுவைக்கலாமனா, என்னவோ வேதாந்தம் பேசுகிறாயே.

அப்பா! நான் ஏன் உங்களிடம் ஒளிக்க வேண்டும். என் உள்ளத்தை ஏகாம்பரத்திடமே ஒப்படைத்து விட்டேன். இனி அதைப் பிரிப்பது என்பது அறுசுவைச் சாப்பாட்டைவிட்டு ஐயரைப் பிரிப்பதுபோல் ஆகும்.

நீ வெற்றி பெற்று விடுவாய் என்ற எண்ணத்தால் கிண்டல் வேறு செய்கிறாய். நீ செத்தாலும் சரி. ஏகாம்பரத்தை ஒருகாலும் மணக்க முடியாது!

அப்படியானால் என் சவத்திற்குத் திருமணம் செய்து வையுங்கள்.

இந்தப் பூச்சாண்டி எல்லாம் என்னிடம் காட்ட வேண்டாம்.

அப்பா! மனத்திற்கேற்ற மணவாளன்....!