உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

நச்சுக்கோப்பை

காட்சி 3 · 3 / 18

என்ன! அழகப்பனுக்கா! அப்பா! அழகப்பன் சம்மதிக்கலாம். நீங்களும் சம்மதிக்கலாம். ஜோசியரும், அவர் கூறும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும் நவக்கிரகங்களும் சம்மதிக்கலாம் ஆனால், சாந்தாவின் சம்மதம் வேண்டாமா?

ஏய் பழனி! சாந்தா என் மகள்.

என் தங்கை என்பதை நினைப்பூட்டுகிறேன்.

அவள் எனக்கு அடிமை.

அன்பிற்கு! அதிகாரத்திற்கல்ல!

இங்கு அகராதி படிக்க வேண்டாம்.

அப்படிதான் தோன்றும்.

தகப்பனை எதிர்த்துப் பேசும் தறுதலையே !

நிலமை அப்படி,

அப்பா பழனி! தகப்பனார் வார்த்தையைக் கேள். பெரியவாள் சொல்வதைத் தடுக்காதே.

அய்யர்! இது எங்கள் வீட்டு விஷயம். இதிலும் நீர் தலையிட வேண்டாம்.

சரிதான் அப்பா.

டேய் பழனி! உனக்கு இந்தக் கலியாணத்திற்கு இஷ்டமில்லையானால் நீயும் சாந்தாவும் வீட்டை விட்டு வெளியே போங்கள்.

அப்பா ! இதுதான் உங்கள் அன்போ? சாந்தா சந்தோஷ வாழ்வு வாழ விரும்புகிறாள். தனக்குப் பிடித்த மணவாளனைத் தேடுகிறாள். என்றைக்குச் சாந்தாவின் எண்ணம் எதிர்காலத்தின் மீது பாய்ந்ததோ அன்றைக்கே எதிர்வீட்டு ஏகாம்பரத்தின்மீது அவளது விழிகள் பாய்ந்துவிட்டன. இதை நான் சொல்லவில்லை. சாந்தாவின் வார்த்தையை உம்மிடம் சொல்லுகிறேன், அப்பா!

பழனி என்ன வாழ்வு- புடலங்காய்! வர்ணிக்க ஆரம்பித்து விட்டாயே. சாந்தாவை இப்பொழுது கிணற்றிலா தள்ளப் போகிறேன்?

கிணற்றில் மட்டும் தள்ளவில்லை அப்பா. அவள் தலையில் கல்லையும் தூக்கிப் போடப் போகிறீர்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். சாந்தாவுக்குப் பிடித்த மணவாளனுக்கே மாலை சூடச் சொல்லுங்கள்.

ஏய் பழனி! யாரிடம் இந்த வார்த்தை பேசுகிறாய்! காதலாம்! அன்பாம்! வாழ்வாம்! ஏகாம்பரத்தைப் பற்றி எனக்கு அப்பொழுதே தெரியுமே. அவர்கள் பார்த்துக்கொண்ட பார்வையும், ஜாடையும் தெரிந்து தானடா கலியாணத்திற்கு இவ்வளவு துரிதப்படுத்தினேன். கேவலம், ஒரு வெற்றிலை பாக்குக் கடைக்காரனுக்கா என் மகளைக் கொடுப்பேன்? அதிலும் ஏழ்மையிலே நெளியும் ஏகாம்பரமா சாந்தாவுக்குக் கணவன் ? உண்மையிலேயே உனக்கு பயித்தியம் தானடா பிடித்திருக்கிறது.

அப்பா!காதல் ஏழ்மையை எண்ணிப் பார்ப்பதா? எதிர்ப்புக்கு அஞ்சுவதா? அன்பிற்கு மாத்திரம் தானே அது அடிமை!

மறுபடியும் அதையே பேசுகிறாயே. உனக்குச் சம்மதம் இல்லையானால் நானாவது வீட்டை விட்டுப் போகிறேன். நீயாவது ஆட்சியை நடத்துபோ.

கருங்கல்லைக் கரைக்க முடியுமா? கட்டாந்தரையில் பயிரிட முடியுமா? கண்ணில்லாதவனுக்கு மண்ணில் உள்ள காட்சிகளைக் காட்ட முடியுமா? முடியாது. ஆட்சியை இனி நீண்டநாள் நடத்த முடியாது. அதற்கு அழிவுகாலம் அண்மையில் வந்துவிட்டது. லாயத்திலே தள்ளி அடைக்கப்படும் குதிரைக்குக்கூடச் சிறிது களைத்திட உத்தரவு உண்டு. அதுகூட இல்லையே இந்த நாட்டுப் பெண்களுக்கு ! இந்த நாட்டைப் பூகம்பம் அழிக்காதா? புகையும் எரிமலையும் பொங்கி வழியாதா?

அப்பா! நீங்கள் சாந்தாவின் வாழ்வைப் பலியிடுகிறீர்கள் என்பதை மாத்திரம் மறந்துவிடாதீர்கள். அதன் விளைவு பிறகு விபரீதமாக முடியும். இதுவே எனது வேண்டுகோள்.

(பழனி உள்ளே போதல்)

சாமி!பார்த்திங்களா?

பார்த்தேன்.நான்மட்டுமா பார்க்கிறேன்? நீங்களும் சேர்ந்துதானே பார்க்கிறேள்!

பார்த்தீங்களா? அப்போ பாருங்கோ. ஏன் சாமி, இந்தமாதிரி அநியாயம் எந்த வீட்டிலே நடக்கும்?

எங்கன்னா நடக்கும்- தங்கள் வீட்டைத் தவிர. இப்படித் தண்ணி தெளிச்சி விடக்கூடாது உங்க பிள்ளைகளை. சாஸ்திரம் சொல்லுது. "வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே - பாதாள மூலி படருமே - பிராமண துவேஷி மனை" என்று வள்ளுவனே குறள்ல பாடிட்டான்

ஏன் சாமி! இம்மாதிரி நடந்தால் என் மானம் எங்கசாமி போறது.

கப்பல் ஏறி பயணம் போக வேண்டியது தான்.

சரிதான். உங்களுக்குத் தெரிஞ்சா இந்த உலகத்துக்கே தெரிஞ்ச மாதிரிதான்

சே,சே, என்னை அப்படி நினைக்கிறேளே...!

என்ன,போ, சாமி நாலு கோண எழுத்து படிச்சுட்டுதுனா காதலும் கத்தரிக்காயும் பேசுது.' இதல்லாம் படிக்கவச்சது நம்ப பிசகு பாருங்க.

அடே,சரிதான்னு விடுங்கோன்னா. இந்தக் காலத்துப் பிள்ளையாண்டான்களே இப்படித்தான். ஏதோ ஒரு கிரகக் கோளாறு இப்படி பேசுறானுங்க. எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் போனா சரியாப் போயிடும்.

இப்ப அவனுக்கு கிரகங்களோ? அப்போ அவனை விடாது. ஒரு சுத்து சுத்தித்தான் விடும். அது இருக்கட்டும் சாதகத்தைப் பாருங்கோ.

ஆமாம்.எனக்கு நாழியாயிடுத்து. ஆமாம், மாப்பிள்ளை ஆத்து ஜாதகம் இருக்கோன்னோ?

இல்லை சாமி! அவுங்க கொடுத்தனுப்பல்லே. பேர் ராசிக்கே பாருங்கோ

மாப்பிள்ளை பேரு என்ன?

அழகப்பன். பெண் பெயர் சாந்தா.

அழகப்பன் - சாந்தா, சாந்தா - அழகப்பன் ! ஆஹா! ஹா ! எவ்வளவு பொருத்தமான பேரு ! பேரு பொருத்தமே இவ்வளவு அழகாயிருக்கும்போது வேறு பொருத்தம் எதற்கு முதலியார்வாள?... அதாவது பரம சிவனுக்கும் பார்வதிக்கும், மகாவிஷ்ணுக்கும் லக்ஷ்மிக்கும், சரஸ்வதிக்கும் பிரம்மாவுக்கும் கூட இவ்வளவு பொருத்தமா அமையலேன்னா !

என்னமோ சாமி, நான் யாருக்கும் ஒரு கெடுதியும் செய்தது இல்லை. பகவான் என்பக்கம்தான் இருந்து வருகிறார்.