உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

நச்சுக்கோப்பை

காட்சி 2 · 2 / 18

அண்ணன் மட்டுமா கிடைத்தார்.அன்பர் ஒருவரும் அல்லவோ கிடைத்து விட்டார்.

(பாட்டு முடிந்ததும்)

சரி, நாழியாகிவிட்டது. அப்பா விழித்துக் கொண்டால் தேடுவார்.நான் வரட்டுமா?

சரி,நாளை உன்னை எதிர்பார்க்கலாமா?

தேனையா வண்டு மறந்திடும்! வானத்தையா சந்திரன் மறைத்திடுவான் ! வருகிறேன்.

மணியப்ப முதலியார் வீடு.

(அய்யர், பழனியப்பன், சாந்தா வருகை)

அப்பனே, முருகா, ஷண்முகா, வேலாயுதம், கந்த வேல் பெருமானே.

என்ன,இன்னைக்கு வெய்யில் இவ்வளவு கடுமையாக அடிக்கிறது? அந்த அய்யரை வேறே வரச் சொன்னேன். இன்னும் வரலே. அந்த மனுஷன் எப்போதுமே அப்படித்தான். ஏதோ நல்ல காரியத்துக்கு வரச் சொன்னா, இன்னும் வரலையே. சரி, வெளியே தெருவரையாவது போய்ட்டு வரலாம்.

(அய்யர் வருகை)

என்ன முதலியார்வாள்! எங்கே புறப்பட்டேள்?

வாங்க! உங்களுக்கு ஆயுசு நூறு!

எமன் இளிச்சவாயனா யிருந்தால்...!

என்னவோ வந்திட்டிங்க-கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி!

ஆமாம். நீங்க கூப்பிட்டதாக வீட்டுக்கு ஆள் வந்தான்னு ஆத்திலே சொன்னா. அப்போதான் காரமடைக்கு ஒருகருமாதிக்குப்போய்ட்டு வந்தேன், காலையில் வரலாமனு நினைத்தேன். அதுக்குள்ளேயும் நம்ப லக்ஷமணன் தாத்தா செத்துட்டான்னு கருமாந்திரம் செய்யணும்னு ஆள் வந்தான். அதையும் முடிச்சுட்டு சற்று ஓய்வா வந்தேன். அதுல கூட பாருங்கோ,ஒரு நாமகரணத்துக்கும் கர்ணபூஷணத்துக்கும் என் மகனை அனுப்பிச்சிட்டு வந்தேன்னா, வரும்படி இருக்கட்டும்னா, தங்களைப்போல மனுஷாள் தானே வேண்டும்!

ஆமாம்,சாமி! நான் கூட ரொம்ப நாழியா உங்களைப் பார்த்துட்டு நம்ப புண்ணிய மூர்த்தி அய்யருக்குச் சொல்லி, அனுப்பிச்சேன். அவரு பிராமண போஜனத்துக்குப் போய்ட்டாருன்னு திரும்பி வந்துட்டான். சரின்னு நானும் பேசரமல் இருந்துட்டேன்.

அதிருக்கட்டும்! எதற்காக என்னைக் கூப்பிட்டேள்?

நம்ப பொண்ணு சாந்தா சாதகத்தைப் பார்க்கணும். அதுக்குத் தான் கூப்பிட்டேன்.

அவ்வளவுதானே! வேறொன்றும் இல்லையே?

ஏய்! யார்ரா அது...? அந்த வெற்றிலைப் பெட்டியை எடுத்துவாடா!

வேண்டான்னா. நான் போடுற பழக்கமில்லை. சரி, சாதகத்தை எடுத்துட்டு வாங்கோ.

(மணி: உள்ளே போய்ச் சாதகத்தைக் கொண்டுவரல)

ஏன் சாமி!பொடி போட்டிங்களா என்ன.?

ஆமாம்!

பொடி என்ன மிளகாய்ப் பொடி வாசனையா இருக்கு.

கடையிலே விக்கிற பொடி காரம் போர்றது இல்லை. அதனாலே மிளகாய்ப் பொடியே அரைச்சி நானே கலந்து கொண்டேன். (சாதகத்தை அய்யர் பார்த்தல்)

என்ன முதலியார்வாள்! கண்ணாடிகொண்டு வாங்க.

சாமி! அது தான் பொட்டெல்லாம் சரியா இருக்கிறதே.எதுக்குக் கண்ணாடி?

அடே! முகம் பார்க்கற கண்ணாடி அல்ல. மூக்குக் கண்ணாடியைக் கேட்டேன்.

மூக்குக் கண்ணாடியா நான் போட்ர பழக்கமில்லை. சும்மா பாருங்க.

(அய்யர் சாதகத்தைப் பார்த்தல்.பழனி வரல்.)

என்ன சோதிடர்வாள்! காற்று இந்தப் பக்கம் அடிக்கிறதே. என்ன விசேஷம்?

இல்லே. குழந்தே கல்யாண விஷயமா வரச் சொன்னா.

அப்பா ! கல்யாணமா ...! யாருக்கு?

என்னடா இப்படிக்கேட்கிறே ? நம்ப சாந்தாவுக்குத்தான்.

சாந்தாவுக்கா? சாந்தாவை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்?

அரியலூர் அழகப்பனுக்கு.