உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

நச்சுக்கோப்பை

காட்சி 17 · 17 / 18

தோழா! நீ ஆத்திரத்தில் பேசுகிறாய். நாயின் வாலை நிமிர்க்க முடியுமா?

நிமிரா விட்டால் வெட்டி எறிவது, தோழா!

நிம்மதியாகப் படுத்துறங்கு. நாளை காலை பேசிக் கொள்ளலாம். நான் வருகிறேன்.

(சிவகுரு போதல்)

(பழனி ஒரு கோப்பையில் நஞ்சைக் கலக்கிறான்.)

(கடிதம் எழுதுதல்)

பாழும் சமூகத்தின் பழிகாரத் தந்தையே! சாந்தாவின் வாழ்வைப் பல வழியிலும் கெடுத்தீர். அவளை விதவையாக்கினீர். அவளை நாசமாக்கினீர். ஏகாம்பரம் என் தங்கையை ஏற்றுக்கொள்க. நான் விட்டுப்போன வேலையைச் செய்துமுடி. சாந்தா! நீ ஏகாம்பரத்திடம் மன்னிப்புக் கேள். திராவிட உலகமே! தன் மானம் பெறு. சாந்தாவின் எண்ணத்தைப் பண்படுத்தாத நான் இருந்தென்ன? இறந்தென்ன? நான் சாகிறேன்.

இப்படிக்கு,

பழனியப்பன்.

(விஷத்தை வைத்துக் கொண்டு.) அப்பா! என்னைக் கெடுத்தீர். சாந்தாவின் வாழ்வையும் சிதைத்தீர். இதோ சாகிறேன். உம் மனம் குளிரட்டும். செத்துப் போன சமூகம் சிரித்து மகிழட்டும். சாந்தா! உன் பொருட்டு என் உயிரைக் கத்தரித்துக் கொள்கிறேன்.

(இதைப் பேசிக் கொண்டே அங்குள்ள அறிஞர் அண்ணாவின் படத்தைப் பார்க்கிறான். மனம் குழம்புகிறது)

அண்ணா! திராவிடத் தளபதி! தற்கொலை செய்து கொள்வது கோழையின் செயல் என்கிறீர்களா? வீரனுக்கு அழகா என்கிறீர்களா? செயலாற்ற முடியாத கோழையே என்கிறீர்களா? ஆம். அன்று முதல் நான் ஒரு சீர்திருத்தக்காரன், இன்று முதல் சாந்தா ஒரு சீர்திருத்தக்காரி, என்றும் ஏகாம்பரன் ஒரு சீர்திருத்தக்காரன்.

இந்த மூன்று சீர்திருத்தக்காரர்களும் மதத் திமிர் பிடித்த மடையர்களுக்கு அடங்கித்தான் நடக்க வேண்டுமா? பணமும் பதவியும் என்ன செய்ய முடியும்? உணர்வை ஒழிக்க முடியுமா? அல்லது தங்களுடைய கொள்கையைக் கொளுத்த முடியுமா? முடியாது. ஏ பணமே! மதமே! பார்க்கிறோம் உங்களை ஒருகை.

(நச்சுக் கோப்பையைக் கீழே வீசி உடைக்கிறான்)

(கருப்பன் வருகை)

டேய், யாருடா சத்தம் போடறது?

யாரப்பா நீ?

நீ யாருன்னு கேட்டா, என்னையே திருப்பிக் கேக்கறே. டேய், சங்கத்திலே உனக்கு என்னடா வேலை? சங்கம், கிங்கம்னு பேசுனியே உன்னைப் பங்கப் படுத்திடுவேன். இந்தச் சிங்கத்தைத் தெரியுமாடா?

ஏய், மரியாதையாக வெளியே போகமாட்டாய்.

டேய் தம்பி, உன்னை வெரட்ட வந்திருக்கேன்டா நான். என்னவோ சொல்வாங்களே ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஓட்டுவேன் என்றதாம்.

போடா குடிகாரப்பயலே.

டேய். என்னையா குடிகாரங்கிறே! நீயா? நானாடா?

சீ, கழுதை! வெளியே போடா. (இருவரும் கை கலந்து சண்டையிடுதல். பழனியைக் கருப்பன் கத்தியால் குத்தி விடுகிறான்.)

உள்ளதைச் சொன்னால் உறுமலா? ஆராய்ச்சி என்றால் ஆத்திரமா? கடமையை உணறு என்றால் கத்திக்குத்தா? நிலையை நினைத்திடு என்றால் கொலையா? ஆ! அப்பா!

(இறத்தல்)

(விடிந்து போலீஸ் வருதல்.)

இவள ஏமோ கொலை ஸின்னுஉண்டதே ஏது ஏமி?

(கத்தியை எடுத்தல்)

அடே பழனியப்பன் கொடுக்கு மணியப்ப முதலியார். மணியப்ப முதலி கொடுக்கு பழனியப்பன் காது. எவரோ சேசின பணி.

(ஊதலை எடுத்து ஊதல்)

எந்தா! எதுக்கு விலிச்சி.

கேசவ நாயர். குடு.

எந்தா சொலா.

எந்தா. கேசவ நாயர். இந்த ஆள்வார் நாயிடு ஒக்கவாரமா வீட்டிலே லேது. ஏமி கலாட்டா, ஏமி பணி, ஏமி ஜகடம், ஏமி கேசவ நாயர். போயி ஜெமாகாயில் கண்ரா.

ஊரும் நீ போம் விலுச்சினுவா. பயமா இருக்கு.

அப்போ நீ இக்கடே உந்து, நான் போயிட்டு பாத்துன்னு.

எனக்கு பயமாயிதே. நீ போத்தாலு.