நச்சுக்கோப்பை
காட்சி 16 · 16 / 18
பாவி! நானு விபச்சாரி! நானு விபச்சாரி! என் உள்ளக் கிடக்கைகளை ஒளிக்காமல் சொன்னேன். அது விபச்சாரம்! எத்தனையோ விதவைகளின் உள்ளத்திலே துடித்துக்கொண்டிருக்கும் எண்ணத்தை வாய்விட்டுச் சொன்னேன். அது விபச்சாரம்! எது விபச்சாரம்? கணவனை இழந்தவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக நிற்பது விபசாரமா? நீ மனைவியை இழந்தாயே, உனக்கு ஏன் நெற்றியில் பொட்டு? நீ மனைவியை இழந்தாயே, உனக்கு ஏன் வித விதமான வாசனைத் திரவியங்கள்? நீ மனைவியை இழந்தாயே, உனக்கு ஏன் உல்லாச வாழ்க்கை?
உணர்ச்சி உனக்கு மட்டும்தானா இருக்கிறது? உனக்கு மட்டும்தானா உரிமை? பெண்களைக் கண்டதும் பல்லை இளிக்கிறதே அது விபசார வாழ்வு அல்லவா? நான் செய்தது விபசாரமா? நீ செய்தது விபசாரமா? எது விபசாரம்? மன நிலையை அறிந்துக்கொள்ள முடியாத மடமையே! அழிந்து படு! நான் தேடின கணவனை என்னிடமிருந்து பிரித்தாயே, அதுவே விபசாரமல்லவா? என் வாழ்வை வெட்டிப் பிரித்த வேற்றுமைப் பிசாசே! அழிந்து போ! ஒழிந்து படு! எது விபசாரம்? எது விபசாரம்?
ரோடு
(அய்யர் கருப்பன் சந்திப்பு)
என்ன சாமி, இப்பதான் போறீங்களா?
ஐயையோ! சத்தம் போடாதே. மானத்தை வாங்கிடுவேபோலிருக்கே. ஆமாம், சாராயக் கடையிலே யாரு இருக்கா?
ஒருத்தரும் இல்ல. சீக்கிரமா போங்க.
(அய்யர் போதல்)
என் சாமி, நானும் வரட்டுமா?
இனனைக்கு வரும்படி ரொம்ப குறைச்சல்.
என்ன சாமி, எப்பப் பாத்தாலும் சீட்டெல்லாம் ஆடுறீங்க. இல்லென்னு சொல்றீங்கோ.
அதெல்லாம் சொல்றத்துக்கு இதுதானு இடம்? ஆமாம். இப்போ எங்கே போறே?
உங்க விரோதி ஒருத்தன் இருக்கான் பாருங்கோ. அவனுக்குப் புத்தி கொடுக்கப் போறேன்.
ஒருத்தன் என்ன. உலகமேதான் எனக்கு விரோதி. அது யாரு என் விரோதி?
அடே, அவன் தான் சாமி! மணியப்ப முதலியார் மகன் பழனியப்பன் இல்லெ. அவனை அடிக்கும்படி அவனுடைய அப்பா பணம் கொடுத்திருக்காரு.
மணியப்ப முதலியார் அப்படி சொன்னாரா? பேஷ். இதையும் வச்சுக்கோ. (பணம் கொடுத்தல்). இனி அவனை உதைக்கிற உதையிலே அவன் இருக்கானு செத்தானுனு இருக்கணும்.
அதையெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்க போங்க சாமி.
அதாவது நான் பணம் கொடுத்து அவனை அப்படிச் செய்யச் சொன்னேன் என்று யாரிடமும் சொல்லாதே.
என்னுங்க. நீங்க கள்ளுக்குடிக்கிறதையே ஒருத்தர் கிட்டேயும் சொல்லலே.
ஐயையோ இதையெல்லாம் தெருவிலே இருந்துகிட்டா சொல்றது. நீ.... போடா! (ஐயர் போதல்)
டேய் பழனி! இந்த கருப்பங்கிட்டேவா நடக்கும்? (பாட்டு—சீன் முடிவு)
பகுத்தறிவு மன்றம்
[பழனி, சிவகு.]
(பழனி வாட்டமாயிருத்தல்.)
(பாட்டு)
தோழா! நேற்று நீ கூறியபடி கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் ஆதியோடு அந்த மாப் புரட்டிப் பார்த்தேன்.
அதிலென்ன முடிவு கண்டாய் தோழா?
முடிவு ஏது தோழா. அதில் ஒரு கவிதை தோன்றியது சொல்லட்டுமா?
சொல்லேன். கேட்கலாம்.
நக்கிக் குடிக்கின்றார் நம் புலவர் கலை ரசத்தை! சொக்கித் துதிபாடும் சோதாவே! புரட்டிப் பார். ஆபாசத்தை அழுகுத் தட்டில் ஊற்றி பாயாசம் என்றுரைத்தால் பருகுவரோ பண்டிதர். கம்பரும், கிழாரும் நம்மருந் தமிழ் நாட்டில் வெம்பிய கலை வகுத்தார்கள். கருத்துக்குக் கலையா? கட்டுப்பாட்டுக்குக் கலையா? வெறுத்து ஒதுக்கும் காலமே! நீ! வேகமாய் வா! எப்படிக் கவிதை?
ஆஹா! கவிதை என்ன அழகாய் இருக்கிறது? அதுவும் பாரதிதாசன் பிறந்தநாடல்லவா!
ஆம் தோழா! 'கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்' என்பார்கள் முன்னோர்கள். ஆனால் 'பாரதிதாசன் வீட்டுப் பானை சட்டியும் பண்ணமைக்கும்' என்பது இன்றைய தமிழகத்தின் திருமொழி தோழா!
பழனி :—சிவகுரு, நீ வீட்டுக்குப் போகவில்லை?
சிவ :—நண்பா!... இன்னுமா வாட்டமாயிருக்கிறாய்?
பழனி :—பிரியப் போகும் திராவிடத்தை நான் காண முடியாதே என்ற வாட்டந்தான்!
சிவ :—நீயே இப்படிப் பேசுவதா?
நானே ஒரு தங்கையை வீட்டிலே வெம்ப வைத்துவிட்டு வைதிகம் சீற, அவளது விழிகளில் நீர் சோர, விதவை என்று வீணர் கூற அதை நான் பார்த்துக் கொண்டு, சும்மா இருப்பதா? நீயே இப்படிப் பேசுவதா?
உன் தந்தைக்குப் பிறகு உன் தங்கைக்குத் திருமணம் செய்து கொண்டால்...?
இப்போதே என் தங்கையைக் கொலை செய்து விட்டு நானும் தற்கொலை செய்து கொள்கிறேன். பிறகாவது சாந்தாவை ஏகாம்பரத்திடம் ஒப்படைக்கிறாயா?
