நச்சுக்கோப்பை
காட்சி 15 · 15 / 18
ஆள் வந்தாங்க. குடிச்ச கஞ்சியை அப்படியே போட்டுட்டு வந்துட்டேன். என்னுங்க சமாச்சாரம்?
பழனியப்பனை உனக்குத் தெரியுமாடா?
பக்தி உள்ள கடவுளாங்க? எல்லாம் சொல்லுங்க. நான் போன தில்லிங்க!
அத சொல்லலேடா. என் மகன் பழனிடா.
ஓகோ அவரா! பொதுக்கூட்டம் போட்டுக்கிட்டு கள்ளு குடிக்காதே சாராயம் குடிக்காதேன்னு, பள்ளன் வீட்டிலே சாப்பிடு, பறையன் வீட்டிலே கையலம்புன்னு சொல்றாரே அவரா?
அவன் தாண்டா.
அவருக்கு எங்க இந்த ஊர் வம்பு?
ஊர் வம்பு மாத்திரம் அல்லேடா. என் வீட்டு வரைக்கும் வந்துட்டாண்டா.
சே! சே! இம்மாதிரி வம்பு பண்ணினு நல்ல தும்பா போட்டு கட்டனுமங்க.
ஏண்டா! நம்ப சாந்தாவை உனக்குத் தெரியுமாடா?
எனக்குத் தெரியாதுங்களே.
அரியலூர்லே கட்டிக்கொடுத்து அறுத்துட்டு வந்தாளே, அவள் தாண்டா!
ஓ! நல்லா தெரியுமே! அவங்களுக்கு என்ன?
ஒண்ணுமில்லேடா. அவளுக்கு மறு விவாகம் செய்து கொடுக்கணுமாம்!
என்ன, விதவைக் கல்யாணமா? என்னுங்க சீதை, பாஞ்சாலி, திரெளபதை, நளாயினி இவங்க பிறந்த நாட்டிலே விதவைக் கல்யாணமா? அதுகடக்குதுங்க.
பழனியை கடுமையாக இரண்டு வார்த்தை. திட்டிவிட்டேன். அதனாலே வீட்டைவிட்டு வெளியே போய்விட்டான். அவனே நீதான் வீட்டுக்கு அழைத்துவர வேண்டும்.
நான் கூப்பிட்டா வரப்போறாரு?
டேய், ஒருகால் ... மூதேவி! நீ போய் கூப்பிடவேண்டாம்டா. இந்தச் சங்கத்துப் பக்கம் தலை காட்டினு தலையே போய்விடும்னு பயம் காட்டு. அவன் திருந்திவிடுவான் என்ன யோசிக்கிறாய்.
யோசனை ஒண்ணுமில்லை. கள்ளுத்தண்ணிக்குக் கூட காசில்லை. மாமா வீட்டுக்குப் போய்ட்டு வரலாம்னு பார்த்தேன்.
பணம் வேணும்னு கேளண்டா. (பணம் கொடுத்தல்) டேய் பணத்தைக் கண்டபடி பண்ணுமே கள்ளு சாராயம் வாங்குடா.
பணம் இருக்குடுங்க பணம். மனுஷாள் தான் வேணும்.
சரிதாண்டா. பணத்தை வாங்கின உடனே இப்படி பேசறியோ. டேய் முக்கியமா உங்கிட்ட ஒண்ணு சொல்லணும். அதாவது காரியத்தை ரகசியமாக முடிக்கணும்.
என்னுங்க மீன் குஞ்சுக்கு நீந்தக் கத்துக் கொடுக்கறீங்க. எல்லாம் நான் பாத்துக்கிறேன்.
போடா (போதல்) சாந்தா!
ஏம்பா.
கொஞ்சம் காப்பி கொண்டுவாம்மா.
(கொண்டுவரல்)
ஏம்மா சாந்தா! அண்ணன் தான் இப்படி ஊறிகிட்டு இருக்கானு, நீயுமா இப்படி கெட்டுவிட்டாய்?
அப்படி ஒண்ணும் கெடெல்லியே.
கெடவில்லையா! கெடாமல்தான் மறுவிவாகம் செய்துகொள்ளப் பிரியப்படுகிறாயா?
புருஷன் செத்துப்போன பொண்டாட்டியும் கூட விழுந்து சாவாங்க. என்னவோ பேசரியே, அப்பா! அம்மா இறந்தபோது தாங்கள்கூட விழுந்து சாகத் துணிந்தீர்களா? இரண்டாந்தாரம் கல்யாணத்திற்குக்கூட முயற்சி செய்தீர்கள்.
சீ, கழுதை! யாரிடம் இந்த வார்த்தையை பேசுகிறாய்?
என் தந்தையிடம் பேசுகிறேன். என் உரிமைகளைக் கேட்கின்றேன். இதில் என்னப்பா குற்றம்?
உன் தந்தையிடம் பேசும் வார்த்தையா இது? நாட்டில் மழை இல்லை என்றால், எப்படிப் பெய்யும்? விபசாரிகள் பெருத்து விட்டால் நாசகாலம்தானே!
அப்பா! அண்ணாவின் கொள்கையோ விபசாரத்தை ஒழிப்பது. தங்களுடைய கொள்கை விபசாரத்தை வளர்ப்பது. தாங்கள் மாத்திரம் என்ன, தங்களுடைய மதமே விபசாரத்தை வளர்ப்பதுதானே!
சீ, கழுதை! சாந்தா! என் சொல்படி கேட்டுக் கொண்டு இருக்க இஷ்டமிருந்தால் இரு, இல்லாவிட்டால் எவனையாவது இழுத்துக்கொண்டு ஓடிவிடு. விபசாரி! விபசாரி! விபசாரி! (போதல்)
(தனிப்பேச்சு)
