நச்சுக்கோப்பை
காட்சி 18 · 18 / 18
மனசு லேயும் ஆக வயித்திலேயும் ஆச்சு சீக்கிரம் ராண்டி.
(திருடல்)
(சப்-இன்ஸ்பெக்டர் வரல்)
ஏய் 208! என்னடா இது?
கொலை சார்.
எப்படியடா ஆச்சு?
தெல்லேதே சார்
எதுக்கடா இருக்கே நீ?
ஏமிட்டிலேது.
ரிகார்டு பார்த்தல்.
தெ. போ. சார்.
(கடிதம் வாசித்தல்.)
சரிதான். பழனியப்பன் தற்கொலை செய்திருக்கணும். ஏய் 104 போய் மணியப்ப முதலியாரை அழைத்து வா.
(104 போதல்)
எங்கடா?
நான்.
என்னடா சொல்றே?
......
இவன் என்னடா. இவனைக் கேட்டால் மலையாளம், அவனைக் கேட்டால் தெலுங்கு, உங்களைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியிருக்கே.
அவுனு.
சுத்தப் பைத்தியமா இருக்கே.
அதே அதே. மணியப்ப முதலியாருக்கும் அதே! அதே!
ஏ. சி. 2081 நீ இனிமே வேலைக்கு லாயிக் இல்லே.
எந்துக்கு சார்.
உனக்கு வயிறு ரொம்ப பெருத்து விட்டது.
அவுனு.
அதனாலே தேவையில்லே.
ஏமி சார் போனஸ்?
பெல்ட் எங்கே?
வயிற்றுக்குப்பத்தலே.
டைரி கொடு.
(சிவகுரு வருதல்.)
(சிவகுரு கடிதத்தைப் பார்த்து
(சாந்தா வரல்)
ஆ! அண்ணா! எனக்காக இறந்தீரா? எனக்காக மடிந்தீரா? இருந்திங்கே அநீதியிடை வாழவேண்டாம். இறப்புலகில் இன்பங்கொள்வோம். இதோ! நானும் வருகிறேன் (கத்தியை எடுத்து ஓங்கல்)
(ஓடிவந்து) வேண்டாம்! வேண்டாம்!!
வேண்டாம். இந்தக் கத்தி உன் உயிரைப் போக்கவேண்டாம். சமுதாயத்தின் அறியாமையைப் பொசுக்க இந்தக் கத்தி பயன்படட்டும். பழனியின் ரத்தத்தில் உங்கள் வாழ்க்கையைத் துவக்கி வைக்கிறேன். வாழ்க தமிழ்! வாழ்க திராவிடம்!
முற்றும்
