நச்சுக்கோப்பை
காட்சி 12 · 12 / 18
இது எங்கே பிழைக்கப்போகுது. ஊம். என்னவோ நான் இரண்டு மூணு காசு சேர்த்து வைச்சிருக்கேன். இது என்னன்ன உரைதச்சுப் போட்டுக்கிட்டு அலையுது. கடவுளே!
மணியப்ப முதலியார் இருக்காரா?
இந்தா மரம்போல இருக்கேனே! என்ன சமாச்சாரம்?
டெலகிராம் வந்திருக்கு.
என்ன கிராம்?
தந்தி.
தந்தியா! கொடுங்கோ. இது என்னவோ இங்கிலிஷில் எழுதி இருக்கே.
ஒரு கையெழுத்துப் போடுங்கோ. பேனா கொண்டு வாங்கோ.
வாங்க இருக்கு என்னையா இது. வீட்டில் உள்ளவங்கதான் இப்படியின்னு வர்றவங்கோ போறவங்கல்லாமே இப்படியா இருக்கணும்.
கோபிக்காதீங்க. சரி. நான் வர்றேன்.
சரி. போய்வாங்க.
சில்லறை...
எத்தனை ரூபாய்க்கி?
காப்பி குடிக்க.
அப்படியா! அதோ தெரியுது இல்ல கடை. அங்கேபோய் காசு கொடுத்துட்டு சாப்பிட்டுப் போங்கோ.
உங்களை கேக்கறேன்னு?
என்னை கேட்டிங்களா. நாளை வாங்க. சரி. வர்றவங்கோ போறவங்கோ எல்லாம் காசுன்னு பிடுங்குறாங்கோ. நான் என்ன காசு காக்கிற மரமா? இனி யாருவரட்டும் ஒரு சிங்கல் பை கொடுப்பேனோ. காசு கழுவற, தண்ணி? இந்த மணியப்ப முதலியைப் பார்த்தா எல்லோருக்கும் இளக்கமா போச்சு. இருக்கட்டும். தம்பி! இது என்ன புரியலையே. டேய் பழனி! இங்கே வாடா. இதைப் படி.
அழகப்பனிடமிருந்து வந்திருக்கிறது.
என்னடா வர்றோம்னு எழுதி இருக்காங்களா?
(தலையை அசைத்தல்)
என்னடா உனக்குப் புரியலையா? ஏண்டா இதுக்கா நான் உன்னைப் பணம் செலவு பண்ணி படிக்க வைச்சேன்.
அழகப்பன் டேஞ்சர். ஸ்டார்ட் இமிடியட்.
என்னடா. தாட்டுப் பூட்டுங்கறே. ஒண்ணும் புரியலையே. தமிழில் சொல்லா?
அழகப்பனுக்கு அதிக ஆபத்து நேர்ந்து விட்டதாம். உடனே வரச்சொல்லி இருக்காங்கோ.
சரி. புறப்படுங்கோ. ஐயோ! இந்தக் கால பலமே சரியில்லை. என்ன என்ன வரப்போகுதோ கடவுளே!
ரோடு.
நொண்டி வந்தல்.
சிவகுரு, பழனி சந்திப்பு.
என்ன உலகமடா! கல்லுக்கும் மண்ணுக்கும் கோவில் கட்ட திருப்பணி. என்போன்ற ஏழைக்குத் திருப்பணி செய்ய யாருமில்லை, என்ன மடமை மிகுந்த நாடு.
(பாட்டு) போதல்
(நண்பர் குழாம் வருதல்)
கணபதி, எங்கேடா போறே?
ஆபீசுக்கு போறேன்.
உனக்கு விஷயம் தெரியுமாடா?
என்னப்பா அது?
நம்ப அழகப்பன் சிக்கா இருக்கானும். போய்ட்டு வரலாம்.
நான் வரலே. ஆபீசுக்கு டைம் ஆச்சி.
