நச்சுக்கோப்பை
காட்சி 13 · 13 / 18
டேய் ஜம்பு! நீயாவது வாரியா?
போப்பா. அன்னைக்கு ஒரு கிளாஸ் கேட்டதற்கு அரை கிளாஸ் கொடுத்தான். அவனைப் பார்க்கிறதா? நான் போரம்ப்பா.
(இவர்கள் பழனியப்பன் பார்த்துக்கொண்டிருத்தல்)
அடே, நன்றிகெட்ட பசங்களா! யாரப்பா நீ? என்னையே பார்த்துக்கிட்டே இருக்கே.
நான் அழகப்பன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருக்கேன். என்பெயர் பழனியப்பன்.
ஓ! நீதான் பழனியப்பன் என்பவனா?
ஆமாம்.
ஆமாம். அழகப்பன் செத்துட்டானா? இல்லை. பிழைச்சிட்டானா?
பிழைக்கமாட்டான்.
ஏன்?
எல்லாம் மதுவின் திருவிளையாடல்.
என்ன! மதுவுக்குக்கூட ஒரு திருவிளையாடல் உண்டா?
ஆம். மது! மது! இந்த உலகை நிலை கலக்கியதே அது!
மது! மது! ஆஹா! இந்த உலகை நிலை கலக்கியதே அது!
அழகப்பன் வீடு
(எல்லாரும் இருத்தல்)
மாமா! இனி நான் பிழைக்கமாட்டேன்.
தம்பி! நீங்க ஒண்ணுக்கும் பயப்படவேண்டாம். நான் போய் சுப்ரமணியசாமிக்கு ஒரு தேங்காய் ஒடிச்சிகிட்டு வர்றேன்.
(குருடன் பாட்டு)
ஐயோ! குடிக்கும் கூத்திக்கும் செலவிட்ட பணத்தை உழைக்கமுடியாத ஏழைக்குக் கொடுத்திருந்தால் இம்மாதிரி வருமா, சாந்தா! உன்னை வேதனை வாழ்வில் விட்டுச் செல்கிறேன். உன் வாழ்வை வாட்டிக்கொள்ளாதே! மறு மணம் செய்துகொள் கண்ணே!-சாந்தா! சாந்தா!
(இறத்தல்)
ரோடு
மது! இந்த உலகை நிலைகலக்கியதே அது!
அழகப்பன் செத்தான்.
மது! இந்த உலக நிலைமைக் கலக்கியதே அது!
நாக்குடன் நின்றுவிடாதே! நன்றாகச் சிந்தித்துப் பார் தோழனே! சாது எனப் பெயர் கொண்டோரும் அரசியல் மேடையிலே வாது புரிப்வோரும் மதுவின் முன்னே மண்டியிட்டு ஒழுக்கம் என்னும் ஒற்றையடிப் பாதையிலே வழுக்கிவிழுந்து நாசமடைகிறார்கள். எத்தனையோ குடும்பங்களைக் குலைத்து எத்தனையோ நாடுகளை நசுக்கி நாவில்லாப் பூச்சிபோல் செய்தது அந்த மது வல்லவா? அந்த மதுவுக்கு இந்த நாட்டிலே எத்துணை ஆதிக்கங்கள்! ஆதிகாலத்திலே சோமபானம் என்ற வேடத்திலே வந்து புகுந்த மது, ஆதிக் குடிமக்களின் அறிவைப் பாழாக்கியது.
அதை அருந்தினோர் எல்லாம் அதன் அடிமையாகி விடுகிறார்கள்.
மது! இந்த உலகை நிலைகலக்கியதே அது! என் வாழ்நாளில் வலிமை மிக்க ஒரு பகுதியை, இளமையின் தொண்டை, நட்பின் நலத்தை வாலிப வேகத்தை நசுக்கி நையப்புடைத்து நாயினும் கடையனாக்கிற்று. மதுவினால் மதி கெட்ட மடையனானேன். புதைக்கப்படும்போது புத்துணர்வு பெற்றேன் பழனியப்பா, என்னையும் உன்னோடு சேர்த்துக்கொள்ள மாட்டாயா? முடியுமா?
முடியும்.
அப்படியானால் இந்த நாட்டிலே மடமை மடியும். வா. போகலாம்.
பொதுக் கூட்டம்
(பழனி-சிவகுரு-பெண்கள்-ஏகாம்பரம் பட்டாளத்திலிருந்து வரல்.)
(பாட்டு)
அன்புள்ள தோழர்களே! இந்தக் கூட்டத்திற்குச் சிவகுருவைத் தலைமை வகிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
வணக்கம்! அன்புள்ள தோழர்களே! மாணவர்களே! மாணவிகளே! இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும்படி கேட்டுக்கொண்ட தோழர் பழனியப்பனுக்கு என் வணக்கம். நான் ஏகாம்பரத்தைப்பற்றிச் சில வார்த்தைகள் பேசப் பிரியப் படுகிறேன் சில ஆண்டுகளாக நம்மிடமிருந்து தொண்டாற்றி வந்த ஏகாம்பரம் அவர்கள் காதல் பாதையில் விளைவு ஏற்பட்டு, விளைவு வேதனையாக முடிந்த காரணத்தால் பட்டாளத்திற்குச் சென்ற செய்தி மிகவும் குறிப்பிடத்தக்கதோடு நாட்டுக்கும் சேவை செய்தவராகி விட்டார்.
அவரது பட்டாளத்துப் பயிற்சி வருங்காலப் போராட்டத்திற்கு ஒரு ஒத்திகை! அவருக்குத் தோழர் பழனியப்பன் வாழ்த்து வாசித்து அளிப்பார்கள்.
(கொடுத்தல்)
வாழ்த்து :
வாழ்க தமிழ்! வருக ஏகாம்பரம்! உமது வரவு நல் வரவு ஆகட்டும்! குடிக்கவும், குஷாலாய்ப் பேசவும், சீட்டாடவும்; சிங்காரிகளுடன் உறங்கவும் தமிழர் பலர் உண்டு. ஆனால் தங்கள் வாழ்வு அங்ஙனம் வீழ்தல் கூடாது. வீழாது. தங்கள் வாழ்வை விழைகிறோம். வருக ஏகாம்பரம்! வருக! வருக!!
தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே! வணக்கம்! அன்று நமது தமிழ் நாட்டிலே வாழ்ந்த வீரத்தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளைப் போருக்கு அனுப்பிய செய்திகள் நாம் ஒவ்வொருவரும் கேள்விப் பட்டிருக்கிறோம். ஒரு தாய் தன் மகன் முதுகில் காயம் பட்டு அவன் இறப்பானேயாகில் தன்மகனுக்குப் பாலூட்டிய மார்பை அறுத்து விடுவேன் என்று சபதம் கூறிச் சமர்க்களம் சென்று அங்கு தனது மைந்தன் மார்பிலே குருதி வழியக்கண்டு பெரு மகிழ்ச்சி கொண்டாள் என்பது தமிழக வரலாறு.
பெற்றோரும் உற்றோரும் காதலரும் போர்க்களத்தில் மாண்டனர் என்ற செய்தியைக் கேட்டு முரசொலி கேட்கும் திக்கிலே எதிரிப் படைகளை எதிர்த்துச் செல்வாய் மகனே என்று அனுப்பியது அன்றைய தமிழகத்தின் வரலாறு. அத்தகைய தமிழகம் இன்று பயமிகு படுகுழியாகி விட்டது.
