உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 42
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 42 · 42 / 47

நீர் சொன்னபடி சொன்னால் - நீரல்ல உன் தாத்தாவே வந்தாலும் என்னைக் காப்பாற்ற முடியாது!

(குருநாதர் யோசனை - தன் ருத்திராக்ஷ மாலையில் உள்ள பதக்கம் போன்ற டப்பாவைத் திறந்து.)

சரி- இந்தா - ஆபத்துக் காலத்தில் உபயோகிக்கும் ஆயுதம். ஆண்டவனின் விபூதிப் பிரசாதம் - இதைச் சாப்பிடு - எந்த தண்டனையும் உன்னை ஒன்றும் செய்யாது!

உண்மையானா? அப்படியானால் கொடுங்கள் சாமி, அந்த அதிசய விபூதியை!

(கொடுக்கிறார்.)

அப்படியே வாயில் கொட்டிக் கொள்!

(கையாள் அதை முகர்ந்து பார்க்கிறான் - சந்தேகம் ஏற்படுகிறது.)

விபூதியா இது? இல்லை - விஷம்! விஷம்!! அடப்பாவி! என்னை விஷத்தைக் கொடுத்துக் கொல்லவா பார்க்கிறாய்? இந்தா நீயே சாப்பிடு! (குருநாதர் வாங்குகிறார்.) இரு, இரு! நாளைக்கு உன் சதிகளையெல்லாம் சக்கரவர்த்திக்கு நேராக அம்பலப்படுத்துகிறேன்!

அப்படியானால், நீ என்னைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?

ஆமாம்! ஆமாம்!

என்ன?

(அவன் கழுத்தை நெறிக்கிறார். அப்போது அரசன் முதலியோர் அங்கு வருதல்.)

குருநாதரே, நில்லும், நில்லும்!

ஆ, யார்?

யாரா? தெரியவில்லை? முழுவதுமே கேட்டுக் கொண்டுதானிருந்தோம்! அரசனைக் கொல்லத் திட்டம் வகுத்தது யார்? என்று புரிந்து கொண்டோம்! (காவலரை நோக்கி) உம் - உடனே இந்தப் போலி வேதாரியைக் கைது செய்யுங்கள்!

என்னையா கைது செய்யப் போகிறீர்கள்? அதுதான் என் அப்பன் ஆண்டவன் இருக்கும் வரையில் நடக்காது! நடக்காது!

(கையிலுள்ள விஷத்தை வாயில் கொட்டிக் கொள்கிறார்.)

(கீழே வீழ்கிறார் - சாகிறார் - சீமான்கள் அமைச்சரைப் பார்க்கிறார்கள் - அமைச்சர், அரசனைப் பார்க்கிறார்.)

சாகிற காலத்தில் கூட இந்தச் சண்டாளர்கள் வாயில் நல்ல வார்த்தைகள் வருவதில்லை! ம்- அமைச்சரே - சீமான்களே... வாருங்கள், சபைக்குப் போகலாம். இவனும் வரட்டும்... சபைக்கு.. (கைதியைக் காட்டி) ம் உலகப்பா... இந்தப் பிரேதத்தை...

கடலில் எறிந்து விடுகிறேன்!

ஏய்...! (அதட்டி) நாளைக்கு, காட்டுக்கு வைக்க வேண்டும்!

ஏங்க? காக்கா கழுகு கூட வந்து எட்டிப் பார்க்காதுங்க!

ம்... சொன்னதைச் செய்!..

சரிங்க!

(அரசன் முதலியோர் போகிறார்கள்.)

(மக்கள் மன்றம் - எல்லாரும் இருக்கிறார்கள், கலாராணி தவிர. பொன்னழகன் குழப்பத்துடன் பேசிக் கொண்டிருக்கிறான்.)

மாற்றாரும் மலைத்திடும் அளவுக்கு மகோன்னத வளர்ச்சி பெற்றிருக்கிறது நமது மக்கள் மன்றம் என மகிழ்ந்திருந்தேன்! இந்த மன்றத்தை அழித்திட யாருக்கும் துணிவு பிறக்காது என இறுமாந்திருந்தேன்! மகிழ்ச்சி - இறுமாப்பு - பெருமிதம் - அத்தனையும் தூள் தூளாகப் போய் விடக் கூடிய சூழ்நிலைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன! எதிர் தரப்பிலே இருந்து அல்ல! நமக்குள்ளேயே நாச எண்ணங்கள் தலைதூக்குகின்றன. கோட்டைக்குள்ளேயே குத்தும் வெட்டும் உருவாகக் கூடிய சந்தர்ப்பங்கள் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன!

அணைபோட்டுத் தடுக்க முடியாத துரோக வெள்ளம்! ஆம், தோழர்களே! ஐந்தாம் படைகள் இங்கேயே இருக்கின்றன! எந்த நேரத்திலும் இந்த மன்றத்தின் வாழ்வை தீர்த்துக் கட்டக் கூடிய அரசனுடைய கையாட்கள் நமக்குள்ளேயே உலவுகிறார்கள்!

(அல்லி எதுவும் புரியாமல்)

ஐந்தாம் படை? அரசனின் கையாள்? யார் அவர்கள்? பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள்! இப்போதே நடவடிக்கை எடுப்போம்!

நான் யாரைச் சொல்லுவது அல்லி? என்னையே நான் நம்பமுடியவில்லை! நீ கூட துரோகியாக இருக்கலாம்!

ஆ!

உதாரணத்துக்குச் சொல்கிறேன்! என்னைக் கூட அரசன் தன்னுடைய கங்காணியாக ஆக்கிவிடக் கூடும்! ஆக்கி இருக்கலாம்! நீ கூட அரசனுடைய அழகில் மயங்கியிருக்கலாம்! அவனது அரண்மனை - ஆடம்பரம் - அந்தஸ்து இவைகளில் இருதயத்தைப் பறிகொடுத்திருக்கலாம்! அதன் காரணமாகவே, அவனது உயிரைக் கூட நீ காப்பாற்றியிருக்கலாம்?