மணிமகுடம்
காட்சி 41 · 41 / 47
(சீமான்களின் கரகோஷம்.)
சபாஷ், சபாஷ்! மணிமகுடம் பிழைத்தது! மன்னர் பிழைத்தார்! மத எதிரிகள் அழிந்தனர்! ஒழிந்தனர்! மதம் வாழ்க! கடவுள் வாழ்க! நீடூழி வாழ்க!
(அப்போது உலகப்பன் ஓடி வருகிறான் சில வீரருடன்)
அரசரைக் கொல்ல வந்த சதிகாரன் அகப்பட்டு விட்டான்.
என்ன?
கல்நாட்டு விழாவின் போது கத்தி வீசினானே அரசர் மீது! அந்தக் காதகனைப் பிடித்து விட்டோம் - காராக்கிரகத்தில் அடைத்து விட்டோம்!
பிடிபட்டானா சண்டாளன்? (வியப்பு, பயம்)
ஆம் ஸ்வாமி - பிடிபட்டான், சிறையிலே அடைக்கப்பட்டான்.
சபையோர்க்கே - பார்த்தீர்களா? அவன் புதுமைப் பித்தன் ஆளாகத்தான் இருக்க வேண்டும் - இருங்கள்; இப்போதே போய் அவன் யார் - யாருடைய தூண்டுதலால் அரசனைக் கொல்ல வந்தான் - என்ற விவரங்களை, தெய்வீக சக்தியால் அந்தப் பயலிடமிருந்து கிரகித்து வருகிறேன்! ஒரு நொடியில் வருகிறேன்!
(குருநாதர் போகிறார் - சபை அமைதியாக இருக்கிறது. அரசன், ஆசனத்தை விட்டு எழுந்து, அமைச்சரைப் பார்த்து...)
அமைச்சரே தாங்களும், இன்னும் இரண்டு சீமான்களும் மட்டும் தயவு செய்து என்னோடு வரவேண்டும்.
அரசே! (புரியாமல் திகைத்து, அதே சமயம் அலட்சிய பாவத்துடன்) என்ன சொல்கிறீர்கள்?
தயவு செய்து எதையும் கேட்காதீர்கள் - நீங்களும் சீமான்களும் என்னைத் தொடர்ந்து வாருங்கள். (போய்க் கொண்டே அரசன்) சபை கலைய வேண்டாம் - நான் வரும் வரையில் சபை நடந்து கொண்டிருக்கட்டும்.
(அரசன் போகிறான். எதுவும் புரியாது அமைச்சரும் இரு சீமான்களும் தொடர்ந்து போகின்றனர்.)
(சிறைச்சாலை, குருநாதரின் ஆள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் - அங்கே குருநாதர் வருகிறார்.)
சாமி! என்னை காப்பாத்துங்க சாமி!
அடே மடையா! ஏண்டா சிக்கிக் கொண்டாய்?
நான் என்னங்க பண்ணட்டும்! அந்த உலகப்பன் என்னை ஓட ஓட விரட்டி, கடைசியிலே கைது செய்துட்டான். எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்க சாமி!
உன்னைக் காப்பாற்றுகிறேன், பயப்படாதே! ஆனால் ஒன்று! குற்ற விசாரணையின் போது, நான் சொல்லுகிறபடி நடந்து கொள்ள வேண்டும்.
சரிங்க!
அரசனை நீ தான் குத்த வந்தாய் என்பதை ஒப்புக்கொள்!
அய்யய்யோ!
கேளடா! அதோடு, புதுமைப்பித்தன் தான் அரசனைக் கொல்லும்படி சொல்லி அனுப்பினான் என்று கூறிவிடு!
“முடியாது - முடியாது! யார் சொன்னால் என்னடா நீ ஏண்டா அரசனைக் கொல்லப் பாய்ந்தாய்?” என்று கேட்டுன்னைத் தூக்கிலே போட்டு விடுவார்கள்!”
நான் சொன்னபடி கேள் - இல்லாவிட்டால் தொலைந்து போவாய்!
குருநாதரே! நீர் தப்பித்துக் கொள்ளத் தந்திரம் செய்கிறீர்! நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்!
அடே, மரியாதை கெட்ட பதரே! வீணே சாகாதே! நான் சொல்லுகிறபடி சொல்! புதுமைப் பித்தன் மீது பழியைப் போடு - அவனுடைய ஆள்தான் நீ என்று ஒத்துக் கொள்!
அதைச் சொன்னாலும் போதாதா! என் தலை தப்புமா பிறகு? நீர் தான் அரசனைக் கொல்லும்படி கட்டளையிட்டதாக நான் சொல்லப் போகிறேன்! சரிதானா?
(அரசன், அமைச்சர், சீமான்கள், உலகப்பன் ஒதுங்கி கவனித்தல்.)
அடப்பாவி - என்ன காரியம் செய்தாய்? எவ்வளவு பணங்கொடுத்தேண்டா - உனக்கு! ஏய், இதைக் கேள்! குற்றத்தை நீயே ஒத்துக் கொள்! அப்படியே உனக்கு ஏதாவது பயங்கர தண்டனை விதிக்கப்பட்டாலும், நானிருக்கிறேன் உன் குடும்பத்தைக் காப்பாற்ற!
என் கதி என்னாவது, குருநாதரே?
நான் சொன்னபடி சொல்! உன்னையும் காப்பாற்றுகிறேன்!
