மணிமகுடம்
காட்சி 39 · 39 / 47
ஓ அந்தக் கோபமா? சரி, சரி போ! சீக்கிரம் சேர்த்துக் கொள்கிறேன்!
தயவு இருந்தால் சரி... ம்... கடிதம் காத்துக் கொண்டிருக்கிறது - படிங்க - நான் இருந்தால் வெட்கமாக இருக்கும் நான் போகிறேன்!
(போகிறான். அல்லி கடிதத்தைப் படிக்கிறாள். படித்து முடிக்கும்போது அங்கு வந்த கலாராணி கவனித்து, மறைந்திருந்து பார்க்கிறாள் - அல்லி, கடிதத்தை இடுப்பில் சொருகிக் கொண்டு, வெளியே போகிறாள். கடிதம் அவளை அறியாமல் கீழே விழுகிறது - அதை கலாராணி பார்த்து விடுகிறாள். படித்து விட்டு பத்திரமாக வைத்துக் கொள்கிறாள். அங்கே அப்போது பொன்னழகன் வருகிறான்.)
கலாராணி அல்லி எங்கே?
சதா அல்லி அல்லி அல்லி... நானிருப்பது தெரியவில்லையா?
இப்போது நீ என்ன சொல்கிறாய்?
தொட்டால் துவள நான் இருக்கிறேன் நீங்களோ எட்டாத கனிக்கு ஏணி வைக்கிறீர்கள் என்கிறேன்!
இப்படி மனந்திறந்து பேசும் பெண்ணை நான் பார்த்ததேயில்லையம்மா! மானிகை ஜாதி என்றாலே தனி வகை தான் போலும்! ஒரு ஆடவனோடு பேசும் பண்பு தெரிய வேண்டாமா?
அதுபோல் ஆடவருக்கு பெண்ணோடு பேசும் பண்பு வேண்டும்! அவசரப்பட்டு தலையில் கை வைப்பது - காய்ச்சலா என்று தொட்டு பார்ப்பது - கூந்தலைக் கோதி விடுவது - ஓடும் போது கையை பிடித்திழுப்பது இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது!
இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? அல்லி சொன்னாளா?
நானே பார்த்தேன்! ரசித்தேன்! சிரித்தேன்!
சரி சரி! உன்னை இங்கிருந்து அனுப்பிவிட வேண்டியதுதான்!
சாஜூரைத் தவிர என்னை வேறாருக்கு அனுப்பாதீர்கள்!
கலாராணி! எத்தனை முறை சொன்னாலும் உனக்குத் தெரியவில்லையே! நீயே ஒரு வழி சொல் - அல்லியை மறப்பதற்கு!
என்னை நினைத்துக் கொள்வது...
அவளை மறந்தல்லவா - உன்னை நினைக்க வேண்டும்!
அவள் உங்களை நினைக்கவேயில்லையே!
அதற்குள் முடிவு கட்ட முடியுமா? அழியாத சித்திரமாக அல்லவா பதிந்துவிட்டாள் அல்லி என் மனதில்! அவளை மறக்க முடியுமா? முடியாது! முடியாது!
மறக்க முடியுமா - முடியாதா என்பதை முடிவு கட்ட நான் ஒரு யோசனை சொல்லுகிறேன்! இப்போதே நீங்கள், அரண்மனைப் பக்கமுள்ள தோட்டத்திற்குப் புறப்படுங்கள் - அங்கே அல்லியைப் பார்ப்பீர்கள்!
என்ன சொல்கிறாய் கலாராணி!
அல்லியை அள்ளிப் பருக அங்கே ஒருவன் காத்திருக்கிறான் - அல்லி, அங்கே போயிருக்கிறாள்!
உண்மையாகவா?
ஏன் சந்தேகம்? போனால் தெரிகிறது?
இப்போதே போகிறேன். அல்லி யாருக்குச் சொந்தமுடையவள் என்பதை அறிந்து வருகிறேன். கலா ராணி! இதுமட்டும் பொய்யாக இருந்தால், பிறகு பொன்னழகன் உன் வாழ்வில் புயலாக மாறிவிடுவான் ஜாக்கிரதை!
புலியாக மாறுவது பிறகு முதலில் புள்ளிமான் சங்கதி என்னவென்று தெரிந்து வாருங்கள்!
ம்... இதோ இப்போதே!
(போகிறான், கலாராணி பெருமூச்சு விடுதல்.)
(தோட்டம் அல்லி - புதுமைப்பித்தன் காதல் கீதம்.)
நேரமாகிறது கண்ணே நான் புறப்பட்டுமா?
நேரம் போனது உனக்கு எப்படித் தெரிந்தது?
பார்த்தீர்களா? ‘காதல் கடலிலேயே மூழ்கி விடக் கூடாது கடமையை மறந்து’ என்று உறுதி எடுத்துக் கொண்டு... நாமே அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டார்களே!
இல்லை இன்பமே! காதலும் கடமையும் ஒன்றையொன்று பின்னிக் கிடப்பதையே நானும் விரும்புகிறேன். மறக்கவில்லை!
