மணிமகுடம்
காட்சி 38 · 38 / 47
(என்று கூறியபடி போர்வையை காலில் போட்டு மூடுகிறான் அவளுக்கு.)
முகமே வாட்டமாயிருக்கிறது... தலைவலி எதுவும் இல்லையே?
(தொட்டுப் பார்த்தல்)
ஊஹும்!
ம் தூங்கு பேசாமல் தூங்கு!
(அவள் தலைமயிரைக் கோதி விடுகிறான் - இதுபோல் சில அசம்பாவிதங்களான நிகழ்ச்சிகளைக் கண்ட அல்லி எழுந்து)
நான் உள்ளே போய்க் கலாராணிக்குத் துணையாகப் படுக்கிறேன், அவள் தனியாக இருப்பாள்...
(என எழுதல்)
ஏன் அல்லி... ஏன்?
ஒன்றுமில்லை. நீங்கள் தூங்குங்கள்...
அல்லி (கையைப் பிடித்தல்)
விடுங்கள் என்னை!
(போய்விடுகிறாள்! பொன்னழகன் குழப்பம் - கலாராணி இவைகளையெல்லாம் மறைந்து கவனித்தல்.)
(தனக்குள்) சே! அவசரப்பட்டு விட்டேன், மிகவும் அவசரப்பட்டு விட்டேன்!
(தெருவில் ‘மணிமகுடம்’ விற்பனை - மக்கள் வாங்குதல் - ‘அரசனைக் கொல்ல முயற்சி - குருநாதரின் சதி - பலிக்கவில்லை’ என்று விற்பனையாளன் கூவி விற்கிறான். விற்பனையும், வாங்குகிறவர்களையும், அரண்மனை அதிகாரிகள் கைது செய்கிறார்கள் - அடிக்கிறார்கள்.)
(அமைச்சர் வீடு - அரிஹரநாதர், அமைச்சர், குருநாதர் மூவரும்)
என் மகளை அபகரித்துச் சென்றதும் அந்தக் கூட்டம்தான் - அரசனைக் கொல்ல முயன்றதும் அந்தக் கூட்டம்தான் - அவர்களைச் சும்மா விடக் கூடாது!
இவ்வளவும் செய்து விட்டு, சதி செய்தது குருநாதர் என்றல்லவா பத்திரிகை வெளியிடுகிறார்கள் - அந்தப் புதுமைப்பித்தனையும் விடக் கூடாது அமைச்சரே!
நாட்டுக்கும் நமக்கும் கேடு வந்து விட்டது! அப்பனே! ஆண்டவனே!
அச்சமில்லை! அச்சம் தேவையே இல்லை! நாட்டு அதிகாரத்தை என் கையில் மாற்றுவதற்கு முன்பாக இந்தப் புரட்சிக் கூட்டத்தைப் பொசுக்கியதாக வேண்டும்! பொன்னழகன் கூட்டத்தைக் கண்டோடு கைது செய்ய வேண்டும்! அந்தப் புதுமைப்பித்தனை சுட்டுத் தள்ள வேண்டும்! சீமான் சபையை உடனே கூட்டி அவசர உத்தரவு பிறப்பிக்கிறேன்.
சந்தோஷம்! நன்றே செய்க! அதுவும் இன்றே செய்க, அமைச்சரே!
நானும் நமது பத்திரிகையில் எழுதிவிடுகிறேன். புதுமைப்பித்தன் ஒரு பலாத்காரப் பிரியன் என்று கொட்டை எழுத்தில் போடுகிறேன்! அவன் தான் அரசரைக் கொல்ல முயற்சித்தான் என்று உண்மையை ஊரறிய எழுதுகிறேன்!
ஆகவேண்டியவைகளைக் கவனிப்போம் - முதலில் சீமான்கள் சபை கூட்டும்!
சந்தோஷம்! சந்தோஷம்!
(மக்கள் மன்றம். அல்லியிருக்கிறாள் தனியாக. கருப்பு ரோஜா வந்து அவளிடம் ஒரு கடிதத்தைக் கொடுக்கிறான்.)
யார் கொடுத்தது?
புதுமைப்பித்தன்.
கையெழுத்தைக் காணோம்?
இதையெல்லாம் அவரை நேரில் பார்க்கும் போது கேட்டுக் கொள்ளுங்கள், நான் சாதாரண தூதன், அவ்வளவுதான்!
என்ன, கருப்பு ரோஜா - என்ன ஒரு மாதிரியா பேசுகிறாய்?
அப்புறம் என்னாங்க! என்னைத்தான் உங்க சங்கத்திலே சேர்க்க மறுத்துவிட்டீர்களே!
