உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 36
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 36 · 36 / 47

இத்தனை நாள், நான் தயங்கியதும் அதற்காகத்தான்.

கால் கொப்பளிக்கும் பாலைவனத்திலே பயணம் நடத்துகிறவனுக்கு இளைப்பாற ஒரு பேரிச்சமர நிழல் - அது போலத்தான் நமக்கு இந்தக் காதல்! இனிமேல் நான் ஓடியாடி உழைக்கும் போதும், மேடையேறி முழங்கும் போதும் அடக்கு முறைகளை உடைக்கும் போதும் - எனக்காக ஒருத்தி இருக்கிறாள்; களைத்த நேரத்தில் களிப்பூட்டுவாள் - களம் சென்று திரும்பினால் காயத்திற்கு மருந்து கட்டுவாள்! கடையேனே, மடையேனே என்பார் தீயோர் - ‘கண்ணாளா’ எனும் ஒரு சொல்லிலே அந்த சோகம் துடைப்பாள் - வேகம் தணிப்பாள் - என்கிற இதய எழுச்சி பிறக்கும் இன்னும் புதிய உற்சாகத்தோடு பணிபுரிவேன்!

களைப்புத் தீர்க்க மட்டுமல்ல கண்ணாளா! காயத்திற்கு மருந்து கட்டு மட்டுமல்ல இன்பமே! களத்திற்கு வழியனுப்பும் காரிகையாக இல்லாமல் - அந்தப் போர் முனையில் நீங்கள், இந்தப் போர் முனையில் நான் என்று திட்டம் தீட்டும் துணைவியாகவும் இருப்பேன்!

அல்லி! நாம் இருவரும் புரட்சிக்காரர்களாக மட்டும் இல்லாவிட்டால், போர் முனையிலா இருப்போம் - அரண்மனையிலே நான் - அரிவாள் மனையிலே நீ?

நீங்கள் அரண்மனையிலா?

ஆமாம், அரசுக்குத் துதிபாடும் ஆஸ்தான கவிஞனாக - அமைச்சருக்குப் பணியாளனாக - குருவுக்குச் சீடராக இப்படி ஏதோ ஒரு வேலை கிடைத்திருக்கும் இல்லையா?

(அப்போது காவலர்கள் வரும் ஓசை கேட்கிறது இருவரும் திகைப்பு.)

யாரோ வருகிறார்கள் போலிருக்கிறது?

அரண்மனைக் காவலர்களாயிருக்கும்! சரி அதிக நேரம் தாமதிக்கக் கூடாது - புறப்படு, அல்லி!

நீங்கள்?

நான்? நாளைக்கு சந்திக்கிறேன்!

எங்கே? எப்போது!

இங்கேதான்! இதேநேரத்தில் தான்! உம் போய் விடு! காவலர்கள் வருவது போல் தெரிகிறது!

(இருவரும் தழுவிப் பிரிதல்.)

மறந்து விடாதீர்கள்!

எப்படி மறப்பேன்.

வாட்டுமா?

(போகிறாள்.)

ஆங் - ஒரு சேதி, மறந்து விட்டேனே - அந்தக் கலாராணி எப்படியிருக்கிறாள்?

(போனபடி) கலாராணியா? - நாளைக்குச் சொல்லுகிறேன்.

(புதுமைப் பித்தனும் சுற்றும் முற்றும் பார்க்க, உலகப்பன் வருதல்)

போகலாமா பிரபு?

போகலாம்!

வேஷத்தைக் கலைங்க - இல்லேன்னா அரண்மனைக்குள்ளே நுழைய முடியாது!

(புதுமைப்பித்தனும் வேஷத்தைக் கலைத்தபடி, அரச உடையில் உலகப்பனுடன் புறப்படுகிறான் - அரசன், அல்லி போன பக்கம் திரும்பிப் பார்த்தல்)

வாங்க வாங்க இன்றையோட உலகம் அழியவா போகிறது? வாங்க நாளைக்குப் பாத்துக்கலாம்!

(மக்கள் மன்றம் - அதே இரவு - பொன்னழகன் வருத்தமாக உட்கார்ந்திருக்கிறான் - அங்கே கலாராணி வருகிறாள்.)

இப்படித் தூங்காமல் வருத்தமாகவே உட்கார்ந்திருந்தால் அல்லி வந்து விடுவாளா?

கலாராணி - நீ வேறு தொல்லை கொடுக்காதே போய்ப்படு!

உங்கள் துயரம் தீர்ப்பதையே கடமையாகக் கொண்டிருக்கிறேன் - தொல்லையென்கிறீர்களா?

நேரம் தெரியாமல் தொந்தரவு செய்கிறாய்!

இரவு நேரம் இதைப் பொறுத்தமற்ற நேரம் என்று யார்தான் கூறுவார்கள்?