மணிமகுடம்
காட்சி 34 · 34 / 47
(கையை எடுத்தல், முகத்தை வேறு பக்கம் திருப்புகிறாள் வஞ்சி.)
முகத்தைத் திருப்பு! (திரும்புகிறாள்) ஆகா கூந்தல் போன்ற கூந்தல்! புருவம் போன்ற புருவம்! கண் போன்ற கண்கள்! முகம் போன்ற முகம்!
இது என்ன புது வர்ணனை!
இதுதான் இயற்கை வர்ணனை - வில் போன்ற புருவம் - அம்பு போன்ற கண்கள் - கேடயம் போன்ற முகம் - என்றெல்லாம் சொல்லி, முகத்தையே ஒரு ஆயுதச் சாலையாக வர்ணிக்கிற வேலை எனக்குப் பிடிக்காது!
இப்படியெல்லாம் பேசிப் பேசி - எனக்கு மயக்கத்தை அதிகமாக்குகிறாய்... உன்னைக் கண்டதும் உச்சந் தலையிலே பாம்பு கடித்ததுபோல் இருக்கிறது எனக்கு?
அய்யோ! அவ்வளவு விஷமா?
இல்லை - அவ்வளவு மயக்கம் - நீ மயக்கமூட்டும் பாம்பாகவும் இருக்கிறாய் - விஷத்தை இறக்கும் மந்திரவாதியாகவும் இருக்கிறாய்!
ஆகா புதிய முறையில் காதல் பாஷை பேசும் என் கற்கண்டே! என் பூச்செண்டே!
பார்த்தாயா! கற்கண்டு, பூச்செண்டு - கரைவதைப் பற்றியும் கசங்குவதைப் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டாய்! பழைய வர்ணனை!
சரி, கரையாத கற்கண்டே - கசங்காத பூச்செண்டே திருத்தம் போதுமா? தேனே! (பெருமூச்சுடன்)
(பெருமூச்சுடன்) என்னால் நிற்க முடியவில்லை. நான் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன் கண்ணாளா!
ஆங்.. எங்கே போகிறாய்? வஞ்சி! எங்கே போகிறாய்?
(மயங்கிச் சாய்ந்தபடி) இன்பலோகம் போகிறேன்!
இதோ, நானும் வந்துவிட்டேன்! என்னையும் அழைத்துப்போ! ஆணோ, பெண்ணோ, தனியாய்போனால் - இன்பலோகத்துக்கு அனுமதிச் சீட்டு கிடைக்காது...
(அவள் விழுகிறாள் மயங்கி.)
(தூக்கிக் கொண்டு) அய்யோ - இன்பலோகப் பிரயாணம் ரொம்ப கனமா இருக்கே!
(அரண்மனையில் அல்லி தூக்கம் வராமல் படுத்திருக்கிறாள். அப்போது புதுமைப்பித்தன் அங்கு வந்து, விளக்கை சிறிது தூண்டுதல் - அல்லி திடுக்கிட்டு எழுதல்.)
யார்?
(புதுமைப்பித்தன் ஓடி வந்து அவள் வாயைப் பொத்தி)
ஸ்.. சப்தம் போடாதே..
(வாயைப் பொத்தியிருக்கும் அவன் கையை, அல்லி, மெதுவாக ரசித்தபடி எடுக்கிறாள்.)
அல்லி - இதுதான் சமயம் - வா அரண்மனையை விட்டு ஓடிவிடலாம்.
நீங்கள் எப்படி வந்தீர்கள்?
அதெல்லாம் பிறகு சொல்லுகிறேன்... புறப்படு!
காவலர்கள் அதிகமாயிற்றே?
கவலைப்படாதே! அரசனும் தூங்குகிறான் - அரண்மனையும் தூங்குகிறது. விழித்துக்கொண்டிருப்பவர்கள் நாம் இருவரும்தான்! வா...வா!!
(அவள் கையைப்பிடித்து அழைத்துச் செல்லுதல்.)
தப்பி ஓடுவது...
(சந்தேகமாய்) குற்றந்தான்! ஆனாலும் நாளைக்குக் கொலைக் குற்றத்திலிருந்து நீ தப்பிக்க வேண்டாமா? சீக்கிரம் வா. உம்...
(இருவரும் வெளியேறுதல்.)
(தோட்டம் - அல்லியும் புதுமைப்பித்தனும் வருதல் - அல்லி தப்பி விட்டதை நினைத்து பெருமூச்சு விடுதல்)
அப்பாடா தப்பித்தோம்! யாருடைய கையிலாவது சிக்கியிருந்தால்...
