மணிமகுடம்
காட்சி 30 · 30 / 47
இது என்ன புதிய கூச்சல்?
கூச்சல் அல்ல; கொடிக்கால் நகரைப் பாதுகாக்க எழுந்த போர்க்கொடி!
ஆண்டவனே! உன் அருள்! சிறுவர்களே... அரசன் கோபத்தைக் கிளறாதீர்கள். குதிரைப் பட்டாளம் அவிழ்த்து விடப்பட்டால்... தூள் தூளாகப் போய்விடுவீர்கள்.
கவலையில்லை... சாவுக்குத் துணிந்தே வந்திருக்கிறோம்! இதோ-எங்களை சுட்டுக் கொன்று, எங்களது பிணத்தைத் தாண்டிக் கொண்டு பிறகு கல் நாட்டு விழா நடத்தட்டும் உங்கள் அரசன்... உம் தோழர்களே... மறியலைத் தொடங்குங்கள்!
(அனைவரும் படுக்கிறார்கள்.)
அய்யோ - இது அரசர் வரும் வழி - அநியாயமாய், சாகப் போகிறீர்கள்...
உம்மைப் போல் சாவுக்குப் பயப்படும் ஜாதி அல்ல இது... நீர் ஒதுங்கிக் கொள்ளும்! மணிமகுடபுரியிலே -கோயில் கொள்ளும் ஆண்டவன் அந்த நாட்டு மக்களுக்காக உழைக்கும் எங்களது பிணக் கொலுவைக் காணட்டும்! பிறகு நீங்கள் படைக்கும் பிரசாதத்தை அருந்தட்டும்.
(படுத்திருப்போரைப் பார்த்து - நின்றபடி)
தோழர்களே! அதோ துப்பாக்கி ஏந்திய பட்டாளம் புடைசூழ - துரோகிகள் ஆலவட்டம் சுழற்ற - தோகையர் நடனத்தோடு - தோடுடைய செவியனாம் மணிமாற மகாராஜா கல் நாட்டு விழா நடத்த வருகிறார். முழங்குங்கள் போர் முரசத்தை-
“கொடிக்கால் நகரை”
“அழிக்காதே!”
(கீழேயுள்ளவர் இதுபோல ஒலித்தல்.)
(அரிஹரநாதரிடம்) இதுவும் நல்லதுதான்! அரசன் செத்ததும், பழியை இவர்கள் மீது போட்டு விடலாம்.
ஆமாம்! ஆமாம்! எல்லாம் நன்மையாத்தான் முடியுது!
(அரசர் வருகிறார் - ஆடம்பரமாக - அப்போது, குருநாதர் துரோகியிடம் கண் காட்டுதல், அவன், அரசர் மீது பாய்தல், அப்போது அல்லி, அரசனைக் கண்டு, திடீரெனத் துரோகியின் கத்திக்கு நேரே பாய்கிறாள். அவளது தோளிலே பலத்த காயம் அதற்குள் துரோகி ஓடிவிடுகிறான். ஒரேகுழப்பம். அல்லி மயக்கமடைகிறாள். பொன்னழகன் முதலியோர் திடுக்கிடுதல் - குருநாதர் நழுவி விடுகிறார், அரிஹரநாதருடன் - குழப்பம் - துப்பாக்கிப் பிரயோகம் அதிகமாகவே மக்கள் ஓட்டம் - அமைச்சர் குணசீலரும் ஓடிவிடுகிறார்!)
(காவலரிடம்) உம் இவளை என்னுடைய மாளிகைக்குத் தூக்கி வாருங்கள் - உம் உடனே!
(உலகப்பன், காவலர் - அல்லியை தூக்கி செல்லுதல்)
(அரசன் மாளிகை - கட்டிலில் அல்லி மயக்கத்தோடு படுத்திருக்கிறாள். கட்டுப் போடப்பட்டிருக்கிறது)
(அரசனிடம்) நல்ல வேளை - காயம் அதிகமில்லை. இவுங்க மாத்திரம் குறுக்கே வராம இருந்திருந்தால் உங்களைக் கொன்றேயிருப்பான், அந்தப் பாவிப்பயல்!
(மெதுவாக) சரி, உலகப்பா! நீ போ! அல்லி இங்கேயிருக்கிறவிஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்! அமைச்சர் வந்தால், உடனே என்னிடம் ஓடி வந்து சொல்லு.
அவர் எங்கே வரப் போகிறாரு - வெளியே கிளம்பினால், தன் உயிருக்கு வேட்டு வைத்து விடுவார்களோ என்று வெடவெடத்துப் போயி, வீட்டிலேயே இருப்பாரு!
சரி எதற்கும் வெளியே இரு...
(வெளியே போதல்)
அப்படிச் சொல்லுங்கள் - உங்களுக்கு இடைஞ்சலா நான் ஏன் இங்கு இருக்கப் போகிறேன்! ஆனால், ஒண்ணு மயக்கம் தெளிஞ்ச பிறகு எழுப்புங்க!
குறும்புக்காரா போ.. போ...
(அரசன் உலவிக் கொண்டேயிருக்கிறான். அல்லியைப் பார்த்தபடி - பிறகு ஒரு ஆசனத்தில், யோசித்தபடி உட்காருகிறான். உட்கார்ந்து அவளையே பார்க்கிறான்... அவன், இதய ஒலி...)
(அவளையே பார்த்து நிற்கிறான் - நினைவு அலைகள் - அரசன் அவளைத் தொட்டு)
அல்லி.. கண்ணேஅல்லி.
(எழுகிறாள்)
யார்?
என்னைத் தெரியவில்லையா அல்லி...?
நீங்களா?
