உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 29
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 29 · 29 / 47

கூடாது! கூடாது!!

அந்தப் பொம்மை ராஜாவை வைத்துக் கொண்டு நம் காலேந்திக் கிடந்த குணசீலன், கோலேந்தப் போகிறான்! இதைத் தடுக்க குறுக்கு வழி காண வேண்டும்?!

ஆமாம் ஸ்வாமி!

கொலை! கொலை!! கொலையைத் தவிர வேறு வழியில்லை! அந்தக் கோணங்கிப் பயல் ராஜா வேஷத்தோடு கோயில் கல் நாட்டு விழாவுக்கு வரும்போது - கொலை செய்துவிட வேண்டும் அவனை! எந்தப் போலி அரசனின் வாய் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற எண்ணுகிறானோ அமைச்சன், அந்தப் போலி அரசனைக் கொலை செய்து விட வேண்டும் - என்ன சொல்லுகிறீர்?

அரசனைக் கொல்வது மட்டுமல்ல; அமைச்சர் குணசீலர்தான் அவனை அரசனாக நடிக்கச் செய்தார் என்ற குற்றச்சாட்டை குணசீலர் மீது சுமத்தி, அவரையும் ஒழித்து விட வேண்டும். பிறகு மணிமகுடத்தை மதபீடம் ஆளும்!

அதுவே சரி! அரசனைக் கொல்ல ஒரு ஆள் - ஒரு கூரிய வாள்! இரண்டும் தயார் செய்வோம்! குணசீலா! கூர்மை கெட்ட அமைச்சனே! என்னை ஏமாற்றி, நீ நாடாளப் பார்க்கிறாயா? எத்தனுக்கு எத்தன் - இடையே ஒருபித்தன்! பார்க்கிறேன், நீ ஜெயிக்கிறாயா - நான் ஜெயிக்கிறேனா என்று! ஹ....! மதமென்னும் பேயிடம் வால் நீட்டும் வஞ்சகனே! மண்டை கனத்த மந்திரியே! பார்ப்போமடா யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று பார்ப்போம்! யார் ஜெயிக்கிறார்கள் என்று!

ஜெபமாலை தோற்றதாக சரித்திரமே கிடையாது ஸ்வாமி!

ஜெபமாலை - தண்டு கமண்டலம் - பக்திப் பொருள்கள் மட்டுமல்ல, பத்திரிகாசிரியரே - இதோ பாரும்! அவை பழிவாங்கும் படைக்கலன்கள் கூட - இதோ பாரும்!

(தண்டுவைக் கழற்ற அதில் ஒரு கூரிய கத்தி இருக்கிறது.)

ஆகா - வாள் தயார்! இனி ஆள்தான் தேவை - நம் சதியை வெற்றிகரமாக முடிக்க!

ஹ..ஹ...ஹ! அதுவும் விரைவிலே தயார்!

(அரசன் தனியிடம்; அரசன் பணிவாக நிற்கிறான். அமைச்சர் உட்கார்ந்திருக்கிறான்.)

சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும். மார்கழி ஏழாம் நாள் - கல் நாட்டு விழா மறந்து விடாதே!

சரி ப்ரபூ! நீங்கள் சொன்னபடியே, உங்ககிட்ட ஜனங்களுக்கு நேரா அதிகாரத்தை ஒப்புச்சி விடுறேனுங்க!

சரி! ஜாக்கிரதை!

(அமைச்சர் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போகிறார். போனதும் அரசன் கம்பீரமாக அமர்ந்தபடி, சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறான். உலகப்பன் பழரசம் கொண்டு வந்து தருகிறான்.)

(அதை வாங்கியபடி) உம் நான் பழரசம் அருந்துகிறேன். அதோ கொடிக்கால் நகரத்து மக்கள் குழந்தை குட்டிகளோடு கஞ்சிகாய்ச்சி குடிப்பதற்கும் இடமில்லாமல் தவிக்கிற காட்சி தெரிகிறது!

அந்தக் கஷ்டங்களைப் போக்கத்தானே இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்! களைப்பை நீக்கிக் கொள்ள, கொஞ்சம் சாப்பிடுங்கள் பிரபு!

(அருந்தி விட்டு) உலகப்பா - ஒரே உப்பாக இருக்கிறது பழரசம்!

உப்பா? அய்யோ! திராட்டை பழம் புளிக்குமே தவிர - உப்புக் கரிக்காதே!

உப்புதாண்டா உலகப்பா இது! இது பழரசம் இல்லையடா! பதை பதைக்கும் ஏழைகள் வடித்த கண்ணீரடா! கண்ணீரைச் சுவைத்ததில்லை நீ; கல்யாணமாகாதவனல்லவா? சுவைத்திருக்க மாட்டாய்? கன்னத்தோடு கன்னம் வைத்து, காதலிகள் கட்டிலறையில் அழுதிடும் போது இதழோரத்தில் வழிந்தோடும் அந்தக் கண்ணீரே இனிக்காது, கரிக்கும் என்கிறபோது, கட்டாந்தரையிலே, தொட்டால் எலும்பு குத்தும் பிள்ளைகள் அணைத்தபடி, கிடக்கும் ஏழைத் தாய்கள் அழுத கண்ணீரா இனிக்கப் போகிறது?

இல்லை - இல்லை - அதோ, கொடிக்கால் நகரத்து மக்கள் கோவெனக் கதறுகிறார்கள்! என் கோட்டைச் சுவர்களைத் துளைக்கிறது அந்த ஒலி! அதோ கேட்கிறது - நீயும் கேள் அந்த ஒலியை! கேள், கேள், உலகப்பா கேள்!

(பழரசத்தை வீசுதல்)

அரசே நிம்மதியாயிருங்கள்!

அரசே

அமைச்சர் சொல்லி விட்டுப் போகிறார் - கொடிக்கால் நகரத்திலே கோயில் கட்ட நான் கல்நாட்டு விழா நடத்த வேண்டுமாம் - விழாவுக்குப் போகிறேன், வந்திருக்கும் மக்களிடத்தில் இந்த வஞ்சகரின் செயல்களை அம்பலப்படுத்துகிறேன்! மணிமகுடபுரியை - மக்கள் வசம் ஒப்புவிக்கிறேன்! சரியான சந்தர்ப்பம் - ஜனங்களை சந்திக்கும் சந்தர்ப்பம்! அமைச்சர் நினைத்திருப்பார் - அவருக்கு அதிகாரத்தை ஒப்படைப்பேன் என்று! அல்ல! அல்ல!! நாட்டு மக்களிடத்திலே நாட்டை ஒப்படைக்கிறேன்.

இந்த நரிகளை நடுத்தெருவில் விரட்டுகிறேன்!! வெற்றி! வெற்றி! வெற்றிகரமான சந்தர்ப்பம்! இதைத் தவற விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது! நடக்கப் போவது கல் நாட்டு விழா அல்ல! புதிய குடி அரசுக்குக் கொடி நாட்டு விழா! கொடி நாட்டு விழா!

(தெருவில் கல்நாட்டு விழா பற்றிய பாடலுடன் பக்திக் கூட்டம் போகிறது - அரசர் கல் நாட்டு விழாவுக்கு வரப் போகிறார் என்ற உற்சாகம் அந்தப் பாட்டிலே கலந்திருக்கிறது! கல்நாட்டு விழா பற்றிப் பல இடங்களில் பாடல்.. ஆடல்.. முதலிய உற்சாகக் காட்சிகள்!)

(கல்நாட்டு விழாப் பந்தல் - குருநாதர் வருகிறார் - அரிஹரநாதர் அவர் பின்னே வருகிறார். அரசனைக் கொல்ல ஏற்பாடு செய்த துரோகியின் கையிலே பளபளப்பான கத்தி மின்னிக் கொண்டிருக்கிறது - குருநாதர் அவனுக்குக் கண்ணஜாடை காட்டித் தைரியமூட்டுகிறார். அவனும் அவரிடம், காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதாக தலையசைத்துச் சம்மதம் தெரிவிக்கிறான்.)

அப்போது,

“கொடிக்கால் நகரை”

“அழிக்காதே”

(என்ற கோஷமுடன் ‘அல்லி, பொன்னழகன் முதலியோர் வருகிறார்கள், தொண்டர்களுடன்.)