உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 28
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 28 · 28 / 47

எல்லோருமே ஆமோதிக்கிறோம்!

மார்கழி ஏழாம் நாள் - என் மனதுக்குப் பிடித்தமான நல்ல நாள்! அன்றைய தினம் கோயில் திருப்பணிக்குக் கல் நாட்டு விழா!

மிகவும் சரி! கல்நாட்டு விழாவை அரசரே வந்து நடத்தி வைக்க வேண்டும்.

சந்தோஷம் - அரசரையே கல் நாட்டு விழாவுக்கு அழைத்து வருகிறோம். ஆனால் அதற்குள் அவர் நோய் தீர வேண்டும்! சீமான்களே! இந்த நாட்டுக்கு ஒரு குறையும் வராமல் காப்பதற்கு, இன்றிரவு நான் என் அந்தராத்மாவை ஆண்டவனுடன் பேச அனுமதிப்பதென்று முடிவு செய்து விட்டேன். ஆண்டவன் என்னுடன் விரைவில் வந்து பேசுவதற்காக மணிமகுடபுரியின் க்ஷேமலாபத்தில் அக்கரை கொண்ட நீங்கள் ஒவ்வொருவரும் இப்போது இச்சபையில் அவன் திருநாமத்தைத் தோத்திரம் செய்ய வேண்டுகிறேன்!

ஏகமனதாக எல்லாத் தீர்மானங்களும் நிறைவேறுகின்றன. இப்போது பிரார்த்தனை ஆரம்பமாகலாம்!

(எல்லா சீமான்களும் பஜனை செய்கிறார்கள்)

(அமைச்சர், அரிஹரநாதர், குருநாதர்-மூவரும் இருக்கிறார்கள்)

எப்படி என் யோசனை! அசல் பைத்தியம் போலவே நடிக்கச் செய்து விட்டேன், பார்த்தீர்களா!

அபாரம் அமைச்சரே! அவன் மாத்திரம் நமக்கு சமயத்தில் கிடைக்கா விட்டால், சீமான்கள் சபை நம் மூவர் மீதும் சந்தேகப்பட்டிருக்கும்!

ஆமாம் - சந்தேகம் வலுத்திருந்தால், மதபீடம்...

(குருவைக் காட்டி)

அதிகார பீடம்...

(மந்திரியைக் காட்டி)

பிரச்சார பீடம்!

(தன்னைக் காட்டி)

மூன்று பீடங்களும் ஆடிப் போயிருக்குமே!

இந்த மூன்று பீடங்களும் ஆடாமல் இருக்க என் மூளை இப்போது பலமாக வேலை செய்கிறது!

இந்தப் பொம்மை ராஜனையும் அதிக நாள் நம்ப முடியாது ஸ்வாமி! அவனை எப்படியாவது அரசனைப் போல் கையெழுத்துப் போட வைத்து, அதிகாரமனைத்தையும் என் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்!

என்ன?

(மனக் குழப்பத்தை வெளிக்காட்டாமல்)

ஆமாம் - அப்போதுதான் நம் இஷ்டப்படி நடக்க முடியும். அதற்கு சரியான சந்தர்ப்பம் வாய்க்கப் போகிறது - அதாவது கல்நாட்டு விழாவுக்கு அரசன் வரப் போகிறான் என்று நாட்டு மக்கள் எல்லோரும் திரண்டு வருவார்கள். அவர்களுக்கு என்ன தெரியும் - இவன் பித்தன் என்று! அவர்களுக்கு நேராகவே, அதிகாரங்களை என் பெயருக்கு மாற்றித் தருவதாக, அவனைச் சொல்ல வைக்கப் போகிறேன் - எப்படி குருநாதரே, யோசனை?

பேஷான யோசனை!

(மனக்கசப்பை வெளியிடாமல்)

ஆகவே, அரிஹரநாதரே! நமது பத்திரிகையில் “அரசனின் பைத்தியம், குருநாதர் அருளால் நீங்கிவிட்டது” என்று ஒரு செய்தி போடும்! அப்போதுதான் அரசன் சுய சிந்தையோடு அதிகாரங்களை என் பெயருக்கு மாற்றுகிறான் என்று மக்கள் நம்புவார்கள்!

ஆமாம்! ஆமாம்!

(கசப்புடன்)

அப்படியானால் நான் ஆகவேண்டியதைக் கவனிக்கிறேன்! வருகிறேன் குருநாத்!

சரி, அமைச்சரே, சந்தோஷம் உண்டாகட்டும்!

(அமைச்சர் போகிறார். அமைச்சர் போனதும் குருநாதரும் அரிஹரநாதரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.)

அரிஹரநாதரே - கேட்டீரா!

கேட்டேன், ஸ்வாமி! கேட்டேன்.

நமது ஆதரவையும் பெருமையையும் அஸ்திவாரமாக அமைத்து அதன் மீது அதிகார மாளிகையைக் கட்டப் போகிறானாம் அமைச்சன் - அனுமதிக்கலாமா நாம்?